பாலியல் அதிர்ச்சியின் தாக்கம் நம் மூளையின் உணர்ச்சி மையத்தை அதிகம் செயல்படுத்தும். இந்த உணர்ச்சி வெள்ளத்தால், நம் உடல் பாதுகாப்பான இடமாக தோன்றாது. போதைப்பொருள் மற்றும் ஆல்கஹால் இவைகளை நாட தோன்றும். முன்னணி நிபுணர் டாக்டர் பெசல் வான்டெர் கோக், இந்த காணொளியில், உங்கள் உடலில் எவ்வாறு பாதுகாப்பாக உணர முடியும் என்பதைப் பற்றி பேசுகிறார். அதிர்ச்சியின் மீட்பில் இது ஒரு அடித்தளம்.