சிறுவயது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறை நம் வாழ்வின் பல்வேறு நிலைகளில் ஆழமான காயங்களை நம்மிடம் விட்டுச்செல்கின்றன. உடல், உணர்ச்சி, உறவுகள் மற்றும் சுய அடையாளம் தொடர்பான பலவற்றில் இந்த காயங்களின் அறிகுறிகள் இருக்கும். இவற்றில் சில மிகவும் தீவிரமானவை. சில நம்மை செயலிழக்க வைப்பவை. சிகிச்சை மற்றும் தினசரி சுய கவன நடைமுறைகள் மூலம் இந்த விளைவுகளை கடந்து நல்வாழ்கை அமைத்துக்கொள்ளலாம்.