பாதிப்பிலிருந்து மீண்டவர்கள், தன் மீட்புக்கு சிறந்த துணை தாங்கள் தான் என்பதை அறிந்து கொள்வது மிகமிக அவசியம்.
நாம் எல்லா வகையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதில் நம் பங்கு அவர்களின் மீட்புக்கு பொறுப்பேற்பது அல்ல. மாறாக மீள விரும்புகிறவர்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவுவதும், அவர்கள் இலக்கை அடைய திட்டமிட உதவுவதும் ஆகும். இதன் மூலம் அவர்களின் மீட்பில் நாம் ஆக்கப்பூர்வமான வகையில் பங்கு வகிக்க முடியும்.
அதிர்ச்சியைப்பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டிய சில உண்மைக்குறிப்புகள்:
அதிர்ச்சி அறிதல், கற்றுக்கொள்ளுதல், நினைவு போன்ற செயல்பாதுகளை பலவகையில் பாதிக்கும் ஒரு உயர் ரசாயன தூண்டுதல் நிகழ்வாகும். அதிர்ச்சி மூளையில் உயிர் வேதியியல் குறியீடுகளாக பதிவாகிறது.
மூளையின் செயல்பாடு நிலையற்றது, அனுபவங்களால் வடிவமைக்கப்படுகிறது. நம் நரம்பு செல்கள் நம் வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கும். அவற்றுக்கிடையேயான பாதைகளை அதுவே சரி செய்து கொள்ள முடியும். இது நியூரோபிளாஸ்டிசிட்டி (neuroplasticity - மூளையின் நெகிழ்வுத்தன்மை) என்று அழைக்கப்படுகிறது.
ஆராய்ச்சிகள் நியூரான்கள் (நரம்பு செல்கள்) நம்முடைய அனுபவங்களால், அதிலும் குறிப்பாக உணர்வுப்பூர்வமான உறவுகளால் செயல்படுத்தப்படுகிறது என்று கூறுகிறது.நம்முடைய நல்வாழ்க்கையானது நாம் மற்றவர்களுடன் கொண்டிருக்கும் உறவைப் பொறுத்தது.
ஆரோக்கியமான உறவுகள், அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களை ஆறுதல் படுத்தவும், அவர்களின் மீட்பிலும் மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கவும் உதவும்.
நேர்மறையான உறவுகள் நம் வாழ்நாள் முழுவதும் நம் மூளையில் நல்ல எண்ணங்களை உருவாக்குகின்றன. இவை ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை வளர்க்கின்றன.
நரம்பு செல்கள் மற்றும் மூளையின் பல்வேறு பகுதிகள் ஒன்றாக செயல்படும்போது அவை நீண்டகாலமாக உள்ள அதிர்ச்சியைக் குணமாக்க முடியும், இதன் மூலம் எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் தடுக்கப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட அனைவரும் மீள்வது சாத்தியமே. பெற்றோர்கள் அதிர்ச்சியை பற்றி நன்கு புரிந்து கொள்வதன் மூலம், பாதிக்கப்பட்ட குழந்தைகள் சீக்கிரமே குணமடைந்து, சாதாரண வாழ்க்கையை வாழத்துவங்குகிறார்கள். ஆனால் குறைந்த ஆக்கபூர்வமான அனுபவங்களும் எதிர்மறை எண்ணங்களும் மீட்பிற்கான வழியை பாதிக்கின்றன.
அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு ஆதரவு தேவைப்படுகிறது. ஏனென்றால், நாம் தனியாக உள்ளோம் என்னும் எண்ணம், அதிர்ச்சியின் தாக்கத்தை அதிகப்படுத்துகிறது. உறவுகளினால் ஏற்பட்ட அதிர்ச்சி நல்லுறவால் குணமடையும்.
அழிவுபூர்வமான அனுபவங்கள் எப்படி மூளையை அடுத்தடுத்த எதிர்மறையான செயல்பாட்டிற்கு மாற்றுகின்றதோ, அதேபோல புதிய, வித்தியாசமான மற்றும் நேர்மறையான அனுபவங்கள் மூளையை ஆரோக்கியத்திற்கு உகந்த வழிகளில் மாற்றுகின்றன.