நமது குடலும் மூளையும் வேகஸ் நரம்பால் இணைக்கப்பட்டுள்ளன. நம் மனநிலைக்கும், நம் வயிற்றில் நாம் எப்படி உணர்கிறோம் என்பதற்கு நேரடியாக தொடர்புடையது. நாம் என்ன சாப்பிடுகிறோம், எப்படி சாப்பிடுகிறோம்? என்பது நம் மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதற்கும், நம் மன வலிமையை வளர்ப்பதற்கும் நாம் உண்ணும் உணவு ஒரு பெரிய பங்கை வகிக்கிறது.