தினசரி செய்யும் உடற்பயிற்சி நம் உடல் மற்றும் மனதிற்கு நன்மைகளைத் தருகிறது. கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ளும் ஒருவரின் மனநிலையை மேம்படுத்துகிறது. மனதை எதிர்மறை எண்ணங்களிலிருந்து திசை திருப்பி , புதிய நியூரானின் வளர்ச்சியையும், நம் மன நிலைக்கு உதவும் இணைப்புகளை மூளையில் ஏற்படுத்துகிறது. உடற்பயிற்சியின் போது எண்டார்பின்கள் என்னும் ஹார்மோன் சுரப்பதால் நம்முடைய மனநிலை ஆரோக்கியமாக இருக்க உதவி செய்கிறது.