நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவலாம்?

அக்கறையுள்ள குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் மன நிலை பாதிக்கப்பட்ட நபருக்கான முதல் பாதுகாப்பு வட்டம். பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்படுவதற்கு உதவும் நல்ல வாய்ப்பு உள்ளவர் இவர். இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துவது?

  • பொறுமையுடன் பேசுவதை கேட்பது, நீங்கள் அவர்கள் மீது கொண்டுள்ள அக்கறையை அவர்களுக்கு உணர்த்தும்.
  • அவர்களை பற்றிய எந்தவொரு முன்முடிவும் எடுக்காமல், நடந்த அசாதாரணமான சூழ்நிலையை புரிந்துகொள்ள முயற்சித்தல்.
  • நடைமுறை வழிகாட்டல் மூலம் அவர்களின் நெருக்கடியான சமயத்திலும், தெரபி மூலம் மீள உதவி செய்யலாம்
  • ஊக்கமளித்தல் மற்றும் வலிமையை உணரச்செய்தல் மூலம் வெவ்வேறு நடைமுறைகளில் அவர்கள் உணர்வதை மேம்படுத்துவதற்கான வழிகளை சுட்டிக்காட்டுதல்.

செய்யக்கூடாதவை :

  • பாதிக்கப்பட்டவரை குற்றம் சொல்லுதல் தவறாகும். நடந்தததை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.

  • குறைத்து மதிப்பிடுதல், பாதிக்கபட்டவரின் சொந்த அனுபவத்தை செல்லாததாக்குகிறது ( உதாரணமாக: இல்லை, அது அப்படி நடந்திருக்க முடியாது, நீங்கள் அதை கற்பனை செய்கிறீர்கள்). பாதிக்கபட்டவர் என்ன சொல்கிறார் என்பதை கேட்க மறுப்பது (சம்பவத்தை குறைப்பது மூலம் அதன் தாக்கத்தை குறைக்கலாம் என்று நீங்கள் நினைப்பது)

  • பின் விளைவுகளை நினைத்து பிரச்சனைகளை தள்ள வேண்டாம் (குடும்ப அமைதி அல்லது பிரச்சினையை தவிக்க). பாதிக்கப்பட்டவர் அதிர்ச்சியின் உண்மையை எதிர்கொள்ள உதவுவதோடு, அவர்கள் குணமடையட்டும் என்பதே ஒரே நோக்கம். 

  • விமர்சனம் வேண்டாம். பெரிய மாறுதல் இல்லாவிடினும் பரவாயில்லை . விமர்சனங்கள் அவர்களின் எதிர்மறை சுய  பேச்சை அதிகப்படுத்தும்.

மன நோயின் அறிகுறிகள்.

புரிந்துகொள்வோம்:

சில நேரங்களில் ஏதோ சரியில்லாமல் இருப்பதாக நாம் உணரலாம். ஆனால் சில சமயங்களில் ஒரு நபர் அதிகமாக சிரமப்படுகிறார் என்ற அறிகுறிகளை நாம் கவனிக்க தவறலாம். எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் இந்த கவனத்தவறலுக்கு வாய்ப்புண்டு. சில பொதுவான அறிகுறிகளின் தொகுப்பு இங்கே.

கட்டுரைகள்

நெருக்கடி நிலையை எதிர்கொள்வது எப்படி?...

மனநல பிரச்சனையில் நெருக்கடி நிலை எழுவது என்பது மிகவும் பயம் கொள்ளவைக்கும்  ஒன்று.  இது போன...

மன நோயின் அறிகுறிகள்

தயவுசெய்து இந்த விஷயத்தை பற்றி முன்கூட்டியே எதையும் தீர்மானிக்காமல்  அன்பையும் ஆதரவையும் அளிக்க...

தற்கொலை எண்ணத்தில் இருப்பவருக்கு உதவுவது எப்படி?...

ஒரு நண்பர் உங்களிடம் அவர்களுடைய தற்கொலை எண்ணத்தை பகிர்ந்து கொண்டால், நீங்கள் முதலில் அதிர்ச்சி அடையல...

நான் நலமில்லாமல் இல்லை, எனக்கு ஒரு உதவியும் வேண்டாம்

சேவியர் அமடோர் என்ற நரம்பியல் நிபுணர் தன் தம்பிக்கு உதவ தான் வகுத்த வழிமுறைகளை பற்றி எழுதுகிறார். அதிர்ச்சி, மனதாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தம் பிரச்சினைகள், தம் அணுகுமுறைகள் பற்றி ஆராய்ந்து அறிவது கடினம். இதனால், பிரச்சினைகளை மறுப்பார்கள். LEAP என்ற அணுகுமுறையால் நம்மால் அவர்களுக்கு உதவ முடியும் என்கிறார் அமடோர்.