தயவுசெய்து இந்த விஷயத்தை பற்றி முன்கூட்டியே எதையும் தீர்மானிக்காமல் அன்பையும் ஆதரவையும் அளிக்க தயவுசெய்து முயற்சி செய்யுங்கள். நமது சமூகத்தில் உள்ள களங்கமானது, மனநோயுடன் துன்பப்படுகிற ஒருவரிடத்தில், “ இது உங்கள் நடத்தையில் உள்ள குறை ”என்றும் “இது தெளிவாக மனச்சோர்வு அல்லது அதிர்ச்சி” என்று சொல்லப்படுவது. இது பெரும்பாலும் பேரழிவை ஏற்படுத்துகிறது. இங்கே உங்கள் பங்கு, நோயின் அறிகுறிகள் கவனிக்கப்படும்போது சிகிச்சையாளர்களைத் தேட ஊக்குவிப்பதன் மூலம் உங்கள் அன்புக்குரியவரின் துன்பத்தை குறைப்பதற்கான வழி கிடைக்கிறது.
பின்வருவனவற்றில் பல நிகழ்ந்தால், ஒரு மனநல நிபுணரை தொடர்பு கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
1 . தூக்கம் அல்லது பசி மாற்றங்கள்
வித்தியாசமான தூக்கம் மற்றும் பசியில் மாற்றங்கள் அல்லது தன்னை கவனித்துக்கொள்ளாதிருத்தல் .
2 . மனநிலை மாற்றங்கள்
உணர்ச்சிகள் அல்லது மனச்சோர்வடைந்த உணர்வுகளில் விரைவான அல்லது வியத்தகு மாற்றங்கள். உதாரணமாக, மற்றவர்களுடன் எப்போதுமே தவறு கண்டுபிடிப்பது.
3 . விலகியிருத்தல்
சமீபமாக சமூகத்திலிருந்து விலகியிருத்தல், முன்பு போல் ஆர்வமாக இல்லாமலிருத்தல்.
4 . செயல்பாட்டை கைவிடுதல்
விளையாட்டில் இருந்து வெளியேறுதல், பள்ளியில் தோல்வி அல்லது பழக்கமான பணிகளைச் செய்வதில் சிரமம் ,பள்ளி வேலை அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் அசாதாரண ஆர்வக்குறைவு.
5 . சிந்திப்பதில் சிக்கல்கள்
பேச்சுத்திறன், நினைவுத்திறன், தர்க்கரீதியான உரையாடல், பேசுதல் ஆகியவற்றில் உள்ள சிக்கல்கள் விளக்குவதற்கு மிகவும் கடினமானவை.
6 . அதிகரித்த உணர்திறன்
காட்சிகள், ஒலிகள், வாசனை அல்லது தொடுதலுக்கான உயர்ந்த உணர்திறன்; அதிக தூண்டுதல் சூழ்நிலைகளைத் தவிர்ப்பது.
7 . அக்கறையின்மை
எந்த ஒரு செயலிலும் பங்கேற்க விருப்பமில்லாதிருத்தல், முயற்சியின்மை.
8 . தனித்து விடப்பட்டதாக உணர்தல்.
தன்னிடமிருந்தோ அல்லது வேறு ஒருவரிடமிருந்தோ துண்டிக்கப்படுவதற்கான தெளிவற்ற உணர்வு; உண்மையற்ற ஒரு உணர்வு
9 . நியாயமற்ற சிந்தனை
நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட, அசாதாரண அல்லது மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கைகள்
10 . பதட்டம்
மற்றவர்களை பற்றிய பயம் அல்லது சந்தேகம் . வலுவான பதட்டம்.
11 . அசாதாரண நடத்தை
இயல்பற்ற, விசித்திரமான நடத்தை
இந்த அறிகுறிகளில் ஒன்று அல்லது இரண்டு மட்டும் ஒரு மனநோயைக் கணிக்க முடியாது. ஆனால், பாதிக்கப்பட்டவரை மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கலாம். ஒரு நபர் ஒரு நேரத்தில் பலவற்றை அனுபவித்து வந்தால், மற்றும் மற்றவர்களுடன் படிக்க, வேலை செய்ய அல்லது தொடர்புபடுத்தும் திறனில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தினால், அவன் / அவள் ஒரு மருத்துவர் அல்லது மனநல நிபுணரால் கவனிக்கப்பட வேண்டும். தற்கொலை எண்ணங்கள், அதற்கான நோக்கம் அல்லது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணங்கள் உள்ளவர்களுக்கு உடனடி கவனம் தேவை.
அவர்கள் இப்பொழுது எப்படி உணர்கிறார்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் மன அழுத்தத்திற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு உரையாடலைத் தொடங்கலாம். அவர்கள் கஷ்டப்படக்கூடும் என்று நீங்கள் நினைக்கும் கவலையை அக்கறையுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் கவனித்த சில அறிகுறிகளை மெதுவாக சுட்டிக்காட்டலாம்
மென்மையாக இருங்கள், கனிவாக இருங்கள், மற்றும் வாழ்த்துக்கள்!