பேச்சு சிகிச்சை எனக்கு பயனளிக்குமா?

பேச்சு சிகிச்சை என்பது மனநல நிபுணர் (தெரபிஸ்டி)டம் நம் மனநலம் பற்றி உரையாடுவது. தெரபிஸ்ட் நமக்கு நம்பிக்கை அளிப்பவர். நம் எண்ணங்களையும் , உணர்வுகளையும் ஒரு விதமாக எடைபோடாமல், திறந்த மனத்துடன் புரிந்து கொள்ளக்கூடிய நபராக இருப்பார். நம் துன்பங்களை குறைத்து, மேன்மையடையும் திறனை நாமே வளர்த்துக்கொள்ள பல நுட்பங்களை பகிர்ந்து கொள்வார். தெரபிஸ்ட் தொழில்முறை அங்கீகாரம் பெற்றவரிடம் - நம் விவரங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக ரகசியம் காக்கப்படும். தேர்ந்த தெரபிஸ்ட் இணைந்த மனநிலையும், வலிமையையும் நமக்கு நிச்சயம் அளிப்பார்.



எனக்கான தெரபிஸ்டை தேர்ந்தெடுப்பது எப்படி?

வளர்ந்து வரும் உளவியல் சிகிச்சை துறையில் திறமையான ஆண்களும் பெண்களும் உளவியல் படித்து சிகிச்சையாளர்களாக மாறி வருகின்றனர். நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலோ அல்லது பிராக்டோ.காம் போன்ற வலைத்தளங்கள் மூலம் சிகிச்சையாளரை தொடர்புகொள்ளலாம். சிகிச்சையை எவ்வாறு அணுகுவது மற்றும் சிகிச்சை அமர்வில் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள இவ்வலைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் வலைப்பதிவுகள் பகுதியைப் பயன்படுத்தவும். சிகிச்சை தொடர்பான விவரங்களை பாட்காஸ்ட் மூலம் "விளக்கமான உரையாடல்" லில் கேளுங்கள்.

மேலும் சில கட்டுரைகள்

புத்தக விமர்சனம் "சிகிச்சையின் பரிசு"

இர்விங் யலோம் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் முக்கிய மனநல மருத்துவர். இவர் எளிமையான வகையில் எழுதிய உளவியல் மற்றும் சிகிச்சைகள் பற்றிய புத்தகங்கள் பிரபலமானவை. மற்றும் அவருடைய சிகிச்சைக்கு புகழ் பெற்றவர். தன் சிகிச்சை தொழிலில் சந்தித்த 80 முக்கிய கதைகளை எழுதி உள்ளார். ஒவ்வொரு தெரபிஸ்ட், உளவியல் மாணவர் மற்றும் மனநலம் பற்றி ஆர்வமுள்ள அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகம் இது.