பாலியல் வன்முறையிலிருந்து மீள முடிவு செய்வது எளிய முடிவல்ல. கடந்த கால காயங்களைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்பிக்கையை நம் வாழ்க்கைகுள் வரவழைத்து கொள்ள வேண்டும். சிகிச்சை மற்றும் சுய பராமரிப்பு பயிற்சிக்கான அர்ப்பணிப்பு வேண்டும். குணப்படுத்தும் செயல்முறைகளையும், தேவையான திறன்களையும் கற்றுக் கொள்வது உங்கள் வாழ்க்கையின் மீதான அதிகாரத்தை மீண்டும் உங்களிடமே திருப்பித்தரும்.