300 மில்லியன் மக்கள் எந்த நேரத்திலும் மனச்சோர்வு மற்றும் மனநிலை தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
கீழ்கண்ட வகைகளில்:
மனச்சோர்வு
பொது கவலை
பீதி கோளாறு
சுய தீங்கு / தற்கொலை
போதை பொருள் உபயோகித்தல்.
சிறுவயது வன்முறை மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிலைமைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை இருக்கலாம். இது அவர்கள் சந்தித்த அதிர்ச்சியின் நேரடி விளைவு.
இந்த நிலைமைகளின் தாக்கம் உங்கள் துன்பத்திற்கு அப்பால், உங்கள் வேலை, உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். சில சூழ்நிலைகளில் இதன் பாதிப்பை வாழ்க்கையில் அதிகமாக உணரக்கூடும். அன்புக்குரியவர்களின் ஆதரவு மற்றும் நிபுணர்களின் உதவியுடன், உங்கள் மன ஆரோக்கியத்தை நிர்வகிக்க கற்றுக்கொள்ளலாம், உண்மையில் நீங்கள் செழித்து வளரலாம்!
தமிழகம் முழுவதும் மனநல பிரச்சினைகளுக்கான ஆலோசனை சேவையை தருகின்றனர். இங்கு சமூக சேவையாளர்கள், சிகிச்சையாளர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான கல்வி வசதியை BALM மூலம் அளிக்கிறது.
மனச்சோர்வு, PTSD, அடிமையாதல், பொது உளவியல் மற்றும் சுய முன்னேற்றம் போன்ற பல தலைப்புகளை உள்ளடக்கிய மிகச் சிறந்த வலைத்தளம்.
இது தற்கொலை, இழப்பு, துக்கம் பற்றிய ஒரு வலைத்தளம். உலகத்தில் பெரும் வெற்றி அல்லது தோல்விக்கும் தற்கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இவ்வலைத்தளம் சொல்கிறது.