மன அழுத்தத்திற்கு நிறைய காரணங்கள் உள்ளன. மூளையின் ரசாயன சமநிலை மாற்றம், மூளை தவறான மன நிலைக்கு மாறுதல், பிறவியிலேயே இருக்கும் குறைபாடு, மன அழுத்தம் தரும் வாழ்க்கை நிகழ்வுகள், உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் வியாதியினால் ஏற்படும் பிரச்சனைகள். இது போல பலதும் இணைந்து மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தற்போதைய நிலையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக உள்ளவை பற்றிய ஒரு தொகுப்பு இது.
வெகுஜன நம்பிக்கையின் படி உணர்வுகள் இதயத்தில் தான் இருக்கின்றன. ஆனால் அறிவியல் உங்களின் உணர்வுகளை உருவாக்குவது, உங்களின் மூளை என்று நிரூபித்தது. மூளையின் சில பகுதிகள், உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்துகின்றன. உங்கள் மூளையில் சில ரசாயனங்கள் சரியான அளவில் பராமரிக்கப்படுவது அவசியம். மேலும் மூளையின் நரம்புகள், அவற்றை தொடர்புடைய மூளை நரம்பு வளர்ச்சிகள் மற்றும் முழு மூளை நரம்பு கட்டமைப்பு செயல்பாடு ஆகியவை மன அழுத்தத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை அனைத்துமே உங்களுடைய மனநிலை, எண்ண ஓட்டம் மற்றும் வாழ்க்கையை நீங்கள் எப்படி அனுபவிக்கிறீர்கள், என்பதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.
மருத்துவ அறிவியலில் முன்னேற்றங்கள் ஆன சி.டி.ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆகியவை, உங்கள் மூளையின் பகுதிகளை நன்கு புரிந்துகொள்ள உதவுகின்றன. மூளையின் மற்ற செயல்பாடுகளான, ஞாபக சக்தி போன்றவைகள் கூட மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டோம். மூளையின் மற்ற பாகங்கள் அமிக்டலா, தாலமஸ் (முன் மூளையின் உள்ளறை), ஹிப்போகேம்பஸ் (மூளை பின்புற மேடு) ஆகியவையும் மன அழுத்தத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆராய்ச்சிகள் நமக்குத் தெரிவிப்பது என்னவென்றால், அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த ஹிப்போகேம்பஸ் பகுதி சிறியதாக சுருங்கி இருக்கும். எந்த அளவுக்கு ஒருவர் மன அழுத்தத்தில் வாழ்ந்து இருக்கிறாரோ அந்த அளவில் ஹிப்போகேம்ப்பஸ் சுருங்கியே இருக்கும். சோர்வு மன அழுத்தத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு இதற்குத் தரப்படும் மருந்துகள், இந்த நியூரான் செல் வளர்ச்சியை அதிகரிப்பதால் பலன் தருகின்றன. ஆனால் அவை செரட்டோனின் அல்லது மற்ற ரசாயனங்களின் அளவை கூட்டுவதை செய்வதில்லை.