தன்னை தகுதியற்றவராய் நினைத்தல், எப்பொழுதுமே தனியாக இருப்பது, யாராலும் புரிந்து கொள்ளப்படாதது, ஆழ்ந்த அவமானம் போன்ற உணர்வுகள் - இவற்றுடன் போராடுவது மிகவும் கடினமானது. இந்த ஆழ்ந்த உணர்வுகளை கையாளவும், அவற்றை நிர்வகிக்கவும் நீங்கள் கற்றுக் கொள்ளலாம், இறுதியில் இந்த எண்ணங்களிடமிருந்து நீங்கள் விடுபடலாம். நீங்கள் கடுமையான வேதனையுடனும், உங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வது குறித்தும் சிந்திக்கிறீர்கள் என்றால், தயவுசெய்து இந்த எண்ணில் SNEHA ஐ அல்லது உங்களுக்கு நெருக்கமானவரை உடனடி அழைக்கவும்.