சுய காயப்படுத்திக்கொள்ளுதல் (Self harm)என்றால் என்ன?
தங்களை தாங்களே காயப்படுத்திக் கொள்ளுதல். பொதுவாக இது ஓருவகையான பிரச்சனைகளிலிருந்து அல்லது மன அழுத்த நினைவுகளிலிருந்து துயரமான உணர்வுகளிலிருந்து வெளிவர அல்லது தப்பிக்கும் ஒருவழியாக நினைப்பது. இது அதிக அளவில் தங்களைத் தாங்களே வெட்டிக் கொள்ளுதல், நெருப்பு காயங்கள் ஏற்படுத்திக் கொள்ளுதல், அல்லது உயிர் பாதிப்பில்லாத காயங்கள் ஏற்படுத்துதல் போன்றவையாகும்.
மேலும் இதில் காரணத்தோடு காயப்படுத்துதலும் சேரும் (சிறியதோ அல்லது அதிக ஆபத்தானதோ). சுய காயப்படுத்திக் கொள்ளுதல் என்பது யாரை வேண்டுமானாலும் பாதிக்கக்கூடும். அதன் பின்னால் இருக்கும் காரணம் எதுவாக இருந்தாலும் இது நிச்சயமாக முக்கியமான ஒன்றாக கருதப்பட வேண்டியது.
சுய காயப்படுத்துதலின் சுழற்சி முறை:
சுய காயப்படுதல் என்பது பெரும்பாலும் மனம் சோர்வான எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் ஏற்படுத்தும் அழுத்தத்திலிருந்து மேலான வழியாகவே யோசிக்கப்படுகிறது. இது தற்காலிகமாக அந்த உணர்வுகள் ஏற்படுத்தும் வலியிலிருந்து ஆறுதல் தரக்கூடும். இருப்பினும் அந்த வலிக்கான அடிப்படை காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன. இந்த சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இந்த சுழற்சி எப்படி துவங்குகிறது, சுய காயப்படுத்துதல் ஒரு தற்காலிக ஆறுதலைத் தந்த பின்பு அது உங்களை ஒரு அவமானத்திற்கும் அல்லது துக்கத்தை நோக்கியோ செலுத்துகிறது. இந்த உணர்வுபூர்வமான வேதனை அதிக அளவு உணர்வு மேலோங்க வழிவகுக்கிறது. அது அடுத்த கட்டமான பயத்தை நோக்கி செலுத்துகிறது. ஆகவே, திரும்பவும் அவருக்கு சுய காயப்படுத்துதல்தான் மீள்வதற்கான வழியாக தெரிகிறது. இப்படி இந்த சுழற்சி முடிவில்லாமல் சுழன்று கொண்டே இருக்கிறது.
அபாய காரணிகள்:
யார் வேண்டுமானாலும் சுய காயப்படுத்துதலால் பாதிக்கப்படலாம். ஆனால், சிலர் மற்றவர்களைவிட சுய காயப்படுத்துதலால் பாதிக்கப்படுவது அதிகமாக இருக்கும். அதற்கு காரணம் சில காரணிகள் கலவையான பாதிப்புதான்.
* மனநல பாதிப்பின் அனுபவம். இதில் மன அழுத்தம், கவலை, ஆளுமை உணர்வு மற்றும் உண்ணுதல் குறைபாடு ஆகியவை அடங்கும்.
* தனது பெற்றோரின் அரவணைப்பு இல்லாத இளைஞர்கள் அல்லது பாதுகாப்பு இல்லத்திலிருந்து வெளியேறிய இளைஞர்கள்.
* LGBT சமூகத்தில் ஒரு அங்கமாக இருத்தல்.
* தற்கொலை எண்ணத்தால் மனது வருந்துதல்
இதில் ஏதாவது ஒன்று இருந்தால் தான் அவர்கள் சுய சுயகாயப்படுத்திக்கொள்வார்கள் என்று அர்த்தமல்ல. அதே போல சுய காயப்படுத்துதல் செய்யும் ஒருவர் இவை அனைத்தையும் அனுபவித்திராத ஒருவராகக்கூட இருக்கலாம்.
ஏன் சுய காயப்படுத்துதல் நிகழ்கிறது?
ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம் . வீட்டில் பிரச்சனை ,தொடர்ந்த வாக்குவாதங்கள் அல்லது சமூக பிரச்சினைகள் குறைவான சமமான மாறுதல்கள் மற்றும் வாழ்க்கை மாற்றங்கள், மது மற்றும் பொது உபயோகம் ஆகியவை.
சில கட்டுக்கதைகள்.
மனம் சோர்வடையச்செய்யும் எண்ணங்களுக்கு வழி விடாமல் இருப்பது. மேலே சொன்ன பிரச்சனைகள் மூலம் ஏற்படும் மன அழுத்தம் உள்ளுக்குள்ளே வளர்ந்து ஒருவரால் பொறுக்க இயலாமல் போகிற சூழ்நிலை ஏற்படும் போது சிலர் அதனை தங்கள் மேலேயோ தங்கள் உடலின் மீதோ அதை வெளிப்படுத்த முயல்வார்கள். வெளியே சொல்லப் பட முடியாத விஷயங்களை இதுபோன்று வெளிப்படுத்த முயல்வார்கள்.
கட்டுக்கதைகளை உண்மை அறிதல்:
பொய் : சுய காயப்படுத்துதல் என்பது கவனத்தை கவரும் முயற்சி: இது அதுவல்ல நிறைய பேர் தான் சுய காயப்படுத்திக்கொள்வதை மற்றவர்க்கு சொல்வதில்லை. தாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளை வெகுகாலமாக மூடிவைத்து இருப்பவர்களே அதிகம். மேலும் தங்களுக்கு உதவி வேண்டும் என்று கேட்பதற்கு நிறைய பேர் தைரியம் இல்லாமல் இருக்கிறார்கள்.
பொய்: பெண்கள் தான் சுய காயப்படுத்திக் கொள்வார்கள்.
ஆண்கள், பெண்கள் இருவருமே வெவ்வேறு வகையான சுய காயப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அதற்கான காரணங்களும் வெவ்வேறாக இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் இதை அவ்வளவு சுலபமாக புறந்தள்ளிவிட இயலாது.
பொய்: கீழே காயப்படுத்துதல் செய்பவர் அதனை மகிழ்வோடு செய்கிறார்.
சுய காயப்படுத்தி கொள்பவர்கள், வலியினை மற்றவர்கள் போல் அல்லாமல் வேறு விதமாக உணர்கிறார்கள் என்பதற்கான எந்த தகவலும் இல்லை. இது போல் செய்வது நிச்சயமாக அவர்களுக்கு அதிக அளவு வலியைத் தரும்.
சிலர் மிக அதிகமான அளவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும்போது அவர்கள் எந்தவித உணர்வும் இல்லாமல் இருக்க பழகி இருப்பார்கள். ஆகவே, அவர்கள் தங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதை நினைவூட்டிக் கொள்ள அது வலியை ஏற்படுத்தும் விஷயமாக இருந்தாலும் அதை செய்ய முயற்சி செய்வார்கள். சிலர் இந்த வழியினை தங்களுக்கு தாங்களே கொடுத்துக் கொள்ளும் தண்டனை என்று சொல்வதும் உண்டு.
பொய்: சுய காயப்படுத்திக் கொள்பவர்கள் தற்கொலை மனநிலையில் இருக்கிறார்கள்.
பலருக்கு சுய காயப்படுத்திக் கொள்ளுதல் என்பது கடினமான உணர்வுகள் மற்றும் சூழ்நிலைகளில் இருந்து சமாளிக்கும் ஒரு வழிமுறையாகும். சிலர் இதனை உயிரோடு வாழ்வதற்கு மற்றும் கடினமான பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியாகவே விவரித்திருக்கிறார். இருப்பினும், சுய காயப்படுத்திக் கொள்ளும் சிலர் தற்கொலை எண்ணத்துக்கு செல்லலாம். மற்றும் தங்கள் உயிரைப் போக்கிக் கொள்ளவும் துணிவது உண்டு.
இது ஒரு தற்காலிகமான ஆறுதலாக தெரிவதால் சுய காயப்படுத்திக் கொள்ளுதல் சிலருக்கு பிரச்சினையான விஷயங்களை கையாளுவதற்கான ஒரு வாழ்க்கை முறையாகவே மாறிப் போகவும் வாய்ப்பு உண்டு. ஆகவே எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரமாக சரியான ஆதரவு மற்றும் உதவி அவரை தொடர்பு கொண்டு பேச வேண்டியது மிக முக்கியமாகிறது.
நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது, இதற்கான உதவி, ஆதரவு நிச்சயம் இருக்கிறது. நீங்கள் தனிமையில் இல்லை.இப்போது நீங்கள் எண்ணுவது போல எப்போதும் எண்ணிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் இதிலிருந்து மீண்டு வர முடியும். இதன் தொடர்ச்சி பகுதி இரண்டில் இன்னும் அதிக விஷயங்களோடு விளக்கப்பட்டிருக்கிறது. அதனை முழுவதும் படித்து உங்களுடைய மீட்பு செயல்முறையை துவங்குங்கள்.