எனக்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்?
தற்கொலை எண்ணங்கள் யாருக்கும் அவர்கள் வாழ்க்கையின் எந்த நேரத்திலும் ஏற்படலாம். உங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றோ, கஷ்டம் வரலாம் என்றோ, நீங்கள் எப்போதும் எதிர்பார்த்து இருக்க வாய்ப்பே இல்லை. உங்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டு நீங்கள் எப்படி இந்த உணர்வுகளை கையாள்கிறீர்கள் என்று ஒருவருக்கு சொல்வதே இதில் முக்கியமான செயல்பாடு.
நீங்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி?.
உங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தை தள்ளிப்போடுங்கள். இந்த உணர்வுகள் குறைவதற்காக நீங்கள் காத்திருந்தால் உங்கள் எண்ண ஓட்டம் மாறுவதை நீங்கள் உணரலாம்.
உங்களை சுற்றி நீங்கள் உங்களையே காயப்படுத்திக் கொள்ள உபயோகப்படுத்தும் பொருட்கள் இருந்தால் அவற்றை விலக்கி வையுங்கள். மேலும் இவைகளின் அருகில் இருப்பதை தவிர்த்து அந்த இடத்தைவிட்டு விலகிச் செல்லுங்கள்.
மற்றவர்களோடு இணைந்து இருக்க முயற்சி செய்யுங்கள்.அவர்களுக்கு நீங்கள் எப்படி இதனை சமாளித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை தெரிவியுங்கள்.
இதற்கான உதவி எண்களை மற்றும் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருங்கள். அழைத்து குரலை கேளுங்கள். அது உங்களை இந்த எண்ணத்தில் இருந்து மீட்டுக் கொண்டுவரும்.போதை மருந்து மற்றும் மதுவினை தவிர்த்துவிடுங்கள். இவை உங்களின் மிகவும் உற்சாகம் குறைந்த மனதினை மேலும் வலுவிழக்கச் செய்யும் மற்றும் இந்த முடிவினை நோக்கி உங்களை உந்தித் தள்ளும்.
யாருக்காவது உடனே தெரிவியுங்கள்.
நீங்கள் மிகவும் நம்பிக்கையோடு பேசக்கூடிய ஒரு வயதில் மூத்தவரை அணுகுங்கள். இவர் உங்களுக்கு நெருக்கமானவராய் இருத்தல் நல்லது. அவர் உங்கள் குடும்ப நண்பராக இருக்கலாம், குடும்ப உறுப்பினராக இருக்கலாம், நண்பராக இருக்கலாம், சமுதாய தலைவராக இருக்கலாம் , உங்கள் ஆசிரியராக இருக்கலாம்.
நீங்கள் நினைப்பதை அவர்களிடம் சொல்லுங்கள் அல்லது எப்படி உணர்கிறேன் என்பதை விளக்குங்கள். நீங்கள் போராட்ட மன நிலையில் இருக்கிறீர்கள், மேலும் ஒரு நஷ்டத்தை உணர்கிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அவர்களுடைய எதிர்வினைக்கு தயாராய் இருங்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்ய நினைப்பார்கள். அதேசமயம் அதிர்ச்சி அடைந்து அல்லது உணர்வுபூர்வமாக எதிர்வினையாற்ற துவங்குவார்கள். நீங்கள் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டியது நான் கண்டிப்பாக உங்களோடு இணைந்து செயல்படவே விரும்புகிறேன். தனியாய் என்னால் இதை எதிர்கொள்ள இயலாது என்பதை உணர்த்துங்கள்.
அவர்களை உங்களுக்கு தேவையான உதவியை இன்டர்நெட் மூலமாகவோ அல்லது அவர்களின் மற்ற தொடர்புகள் மூலமாகவோ பெற்றுத் தர இயலுமா? என்று கேளுங்கள்.
எல்லாமே நன்மையை நோக்கி மாறக்கூடும்.
மிக முக்கியமாக மன நல மருத்துவரை அல்லது ஆறுதல் தரும் உதவியாளரையோ நீங்கள் அணுக வேண்டியது அவசியம். உங்களுக்கு தற்கொலை எண்ணம் வந்தாலோ அல்லது தொடர்ந்து இந்த எண்ணம் வரும் என்று நீங்கள் எதிர்பார்த்தாலோ, நீங்கள் செய்ய வேண்டியது உடனே அவர்களை அணுகுவது தான்.
அவர்கள் உங்களோடு இணைந்து வேலை செய்வார்கள். உங்களுடைய நெடுநாளைய பாதுகாப்பினை உறுதிப்படுத்தியும் அதற்கான திட்டத்தையும் உங்களுக்கு அவர்கள் தயாரித்து தருவார்கள். நீங்கள் செய்யவேண்டியது கடுமையான அனுபவங்கள், சூழ்நிலைகள் மற்றும் உணர்வுகளுடன் வாழப்பழகுவதே. மேலும் அதற்கான வழி முறைகளை கண்டறிதல் வேண்டும்.