ஒரு நல்ல செய்தி என்னவென்றால் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளிக்க முடியும், குணப்படுத்தவும் முடியும். அதைவிட நல்ல செய்தி என்னவென்றால் உதவியைத் தேடுவதுதான் சிகிச்சையின் முதல் படியாகும். மன அழுத்தத்தில் பல விதங்கள் இருக்கின்றன. அதற்கான சிகிச்சைகளும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் மாறுபடும். மன அழுத்தத்திற்கான சிகிச்சை இரண்டு முக்கிய பிரிவாக இருக்கிறது (ஆனால் பலருக்கும் இவையிரண்டுமே தேவைப்படும்)
1. ஒரு மனநல நிபுணரோடு பேசி பெறவேண்டிய சிகிச்சைகள்.
2. மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் எடுத்துக்கொள்வது.
வேறு சில சிகிச்சைகளும் உதவக்கூடும். உதாரணமாக ஓவிய சிகிச்சை மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சிகள்.
மன அழுத்தத்திற்கு டாக்கிங் தெரபி எனப்படும் பேச்சு சிகிச்சை:
உங்கள் உணர்வுகளை விவரித்து கலந்துரையாடும் போது உங்களால் அவற்றை எளிதாக கையாள முடியும். சில சமயம் பிரச்சினையை பிறரிடம் பகிர்ந்து கொள்வதால் ஆறுதல் கிடைக்கும், மற்றொருவர் உங்கள் ரசனையை புரிந்துகொண்டு உங்களிடம் விளக்கும்போது அதன் உண்மையான தன்மையை சுலபமாக உங்களால் புரிந்துகொள்ள முடியும். உங்களுடைய உணர்வுகளை முகம் தெரியாத அந்நியரிடம் பகிர்ந்துகொண்டு அதற்காக மற்றவரை நாம் பாரம் சுமக்க செய்கிறோமோ என்ற குற்ற உணர்ச்சி வராமல் பார்த்துக் கொள்வது சுலபமான ஒன்று. இந்த சிகிச்சையை வழங்க வல்ல மூன்று நிபுணர்கள் கவுன்சிலர்கள், சைக்கோ தெரபிஸ்டுகள் மற்றும் சைக்கியாட்ரிஸ்ட்கள்.
டாக்கிங் தெரப்பி எனப்படும் பேச்சு சிகிச்சையில் பல வகை உண்டு:
நோயாளியை மையப்படுத்தியது
அறிவாற்றல் பகுத்தாய்வு
அறிவாற்றல் சார்ந்த நடத்தை (CBT)
மாறும் தனி மனித உணர்வுகள் சார்ந்த சிகிச்சை
முழு காட்சி உளவியல் (Gestalt)
தனிமனித ஆளுமை உருவாக்கம்
மாறும் உளவியல் சிகிச்சை (psychodynamic)
பகுத்தறியும் உணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை (REBT)
பரிவர்த்தனை பகுப்பாய்வு (Transactional analysis) மற்றும் தனிமனித எல்லையை தாண்டிய உணர்வு சிகிச்சை (Transpersonal)
டாக்கிங் தெரபி எல்லா வகையிலுமே நீங்கள் எப்படி வேலை செய்கிறீர்கள் மற்றும் எப்படி நீங்கள் அடுத்தவருடன் தொடர்பு கொள்கிறீர்கள் என்பதை கவனித்து சிகிச்சையை தொடங்குவார்கள். அவற்றுள் சில உதாரணமாக தனிமனித எல்லையைத் தாண்டிய உணர்வு சிகிச்சையானது, வாழ்க்கையில் இருந்து நீங்கள் வேண்டுவது என்ன என்பதைப் பற்றியும் சைக்கோ டைனமிக் சிகிச்சை உங்களுடைய கடந்த கால அனுபவங்கள் உங்களிடம் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது பற்றியும் ஆராயும்.
அதிக அளவில் நடைமுறையில் இருக்கும் இரண்டு விதமான டாக்கிங் தெரபி என்கிற பேச்சுப் பயிற்சி சிகிச்சைகள்:
1. நோயாளியை மையப்படுத்தியது
தெரபிஸ்ட் , நோயாளியிடம் ஆதரவு, நெருக்கம் மற்றும் திறந்த மனதோடு அணுகுதல் ஆகியவற்றை செயல்படுத்துவார் அதிலேயே சிகிச்சையும் அடங்கியிருக்கிறது.
2. அறிவு சார்ந்த நடத்தை சிகிச்சை (CBT)
நோயாளிகள் சிறிது பின்னே சென்று அவர்களுடைய எதிர்மறை எண்ணங்களை தொகுத்து அவற்றின் துல்லியத்தை ஒரு கட்டமைப்பில் சரியாக உணர்ந்து கொள்வது. இது குறித்த விபரங்களை மேலும் இணையதளத்தில் காணலாம்.
3. அறிவாற்றல் பகுப்பாய்வு சிகிச்சை
தெரபிஸ்ட் உடன் இணைந்து ஒரு சங்கிலித் தொடர் போல் நிகழ்வுகள், எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் உந்து சக்திகள் ஆகியவற்றை கண்டு உணர்வதே இந்த சிகிச்சை. இதன் மூலம் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை கையாளுவது என்பதும் தெளிவாக விளக்கப்படும்.
4. முழுக்காட்சி உளவியல் சிகிச்சை
இந்த சிகிச்சை, முழு மனித உணர்வு மற்றும் முழுமையாய் நோயாளியை சார்ந்து அவருடைய கடந்த காலத்தை பற்றி விரிவாக அணுகுவதை விட தற்போதைய வாழ்க்கையை அணுகும் முறை. இந்த சிகிச்சையில் அந்த நோயாளியின் வாழ்க்கை முறை அதன் முக்கியத்துவம் பொறுப்பு ஏற்றுக் கொள்ளுதல் என்ற வகையில் அணுகப்படும். குறை சொல்வது தவிர்க்கப்படும்.
5. தனிமனித ஆளுமை உருவாக்க சிகிச்சை
இதில் நோயாளிகளை விவரிக்க அவர்களுடைய அனுபவத்தை விரிவாக சொல்ல வைத்து அதில் பொதிந்திருக்கும் அர்த்தங்களை உணர வைத்து அவர்களை தன்னம்பிக்கையான ஒரு சுயத்தை கட்டமைக்க வைப்பது.
6. மாறும் உளவியல் சிகிச்சை
இது நோயாளியின் நடத்தைகளை விட மன மற்றும் உணர்வுபூர்வமான செய்கைகளை குறித்து தீவிரமாக ஆராயும்.
மாறிடும் பரிவர்தனை சிகிச்சை (DIT)
இந்த வகையான சைக்கோ டைனமிக்ஸ் சிகிச்சை அதிக மனநிலை மற்றும் உறவுகளில் பிரச்சனை இருப்போரை குணப்படுத்த உருவாக்கப்பட்டது. மன அழுத்தம் மற்றும் கவலை உள்ளவர்களுக்காகவே இந்த சிகிச்சை ஏற்படுத்தப்பட்டது.
7. பகுத்தறியும் உணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை (REBT)
இந்த சிகிச்சை உங்களிடமிருந்து எதிர்மறை மனநிலைகளை ( உதாரணமாக கவலை, மன அழுத்தம், குற்ற உணர்வு மிக அதிக அல்லது தேவையில்லாத கோபம்) ஆகியவற்றை சரி செய்ய உதவுகிறது. மேலும் இது தோல்விக்கு வழிவகுக்கும் எண்ணங்களையும், மனநிலையையும் கண்டுபிடித்து, அவற்றின் அடிப்படை காரணங்களை புரிய வைத்து, அவற்றை ஆரோக்கியமான சரியான நம்பிக்கைகளாக மாற்ற உதவி செய்யும்.
8. தனிமனித எல்லையைத் தாண்டிய உணர்வு சிகிச்சை
இந்த சிகிச்சையில் பாதிக்கப்பட்டவருடைய மனதின் வேகம் ஆராயப்படும். அவருடைய உடம்பு மற்றும் மனதை விட அந்த மனஎழுச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்த சிகிச்சை எந்த ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையையும் முன்னெடுக்கும். ஆனால் எந்த ஒரு அனுபவத்தையும், அதிலிருந்து அந்த தனி மனிதனுக்கு கிடைக்கும் மன உணர்வு, உண்மை நினைவு மற்றும் உலகத்தோடு சேர்ந்து இருக்கும் தன்மை ஆகிய, முழு மனிதத் தன்மைகள் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு, அவை மேலும் பலம் பெற உதவும்.
அடிப்படையாக டாக்கிங் தெரப்பி முழுவதும் எப்படி நீங்கள் வேலை செய்கிறீர்கள் மற்றும் எப்படி நீங்கள் அடுத்தவரோடு தொடர்பில் இருக்கிறீர்கள் என்பது பற்றி ஆராயும். அவற்றில் சில வாழ்க்கையில் இருந்து உங்களுக்கு தேவையானது என்ன என்பதை உங்களுக்குப் புரிய வைக்கும். சைக்கோ தெரபி எவ்வாறு உங்களுடைய கடந்த கால அனுபவங்கள் உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஆராய்ந்து அதற்கு விடை அளிக்கும்.
மன அழுத்தத்திற்கான மருந்து சிகிச்சை
மிக சிறந்த தடுப்பு மருந்துகள் தான் பெரும்பாலும் மன அழுத்தத்திற்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. இவை நியூரோடிரான்ஸ் மீட்டர்கள் என்னும் மூளையில் சமிக்கை அளிக்கும் ரசாயனங்களை தூண்டிவிடும் செயலைச் செய்யும். இந்த மருந்துகள் வேலை செய்ய பல வாரங்கள் ஆகலாம். ஆகையால் நோயாளிகள் நெருக்கடியான அந்த நேரத்தை கடந்து விட வேண்டியது அவசியம்.
சில பக்க விளைவுகள் இவற்றிற்கு ஏற்படும். நோயாளிகள் மெதுவாகத்தான் அவற்றிலிருந்து விடுபட முடியும். தொடரும் மன அழுத்த பிரச்சினைகள் உள்ள நோயாளிகள் இந்த மருந்துகளை அவர்கள் வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டி வரலாம். இந்த மருந்துகள் செரட்டோனின் எனும் ஹார்மோனின் அளவை அதிகரிக்கும்.
எல்லா மருந்துகளும் முறையான ஒரு மருத்துவரின் பரிந்துரைக்கு பின்பே எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லாவிடில் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் நாள் வாழ்க்கையைப் பெற இவற்றைத் தவிர மேலும் சிலவற்றையும் செய்யலாம். சூழ்நிலை மாற்றம், ஓய்வு, உடற்பயிற்சி, பிடித்த உணவு, தூக்கம் மற்றும் நண்பர்கள் குடும்பத்தினரோடு உரையாடுதல் ஆகியவையே.