எதிர்மறை சார்பு என்றால், நேர்மறை கருத்துக்களை விட எதிர்மறை விஷயங்களுக்கு நாம் தரும் முக்கியத்துவம், அதிலிருந்து கற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை குறித்து நமக்கு ஏற்படும் இயற்கையான உந்துதலே அவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
நீங்கள் பள்ளியில் படிக்கும் போது உங்கள் ஆசிரியர் வீட்டுப்பாடம் செய்து கொண்டு வராததால் உங்களை நாற்காலியின் மேல் நிற்க வைத்தது உங்களுக்கு நினைவில் இருக்கும். அதே ஆசிரியர் உங்கள் பெற்றோரிடம் உங்களைப் பற்றி புகழ்ந்து சொன்னது மறந்து போயிருக்கும். இது எதிர்மறை சார்புக்கு ஒரு உதாரணம்.
மனிதர்களான நாம் அதிக அளவில் எதிர்மறை நிகழ்வுகளால் பாதிக்கப்படுகிறோம். நேர்மறையான நிகழ்வுகளை விட, ஒரு நாளில் அதிக அளவு நேர்மறை நிகழ்வுகளை அனுபவித்திருந்தாலும் இந்த எதிர்மறை சார்பானது, அன்று நடந்த ஒரே ஒரு கெட்ட நிகழ்வையே, அது சிறியதாக இருந்தாலும் அதில் நமது கவனத்தை திருப்ப செய்யும். மேலும் அது தேவையற்ற பேச்சுக்களை எதிரொலித்துக் கொண்டு இருக்கச் செய்யும்.
எதிர்மறை சார்பு, நாம் எவ்வாறு உணர்கிறோம், யோசிக்கிறோம், செயல்படுகிறோம் என்பதனை பாதிக்கும். நமது மனநிலையிலும் எதிர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும்.
பாராட்டுக்களை விட அவமானங்களை திரும்பத்திரும்ப நினைக்கச் செய்யும்.
எதிர்மறை தூண்டுதலுக்கு உணர்வாலும், உடலாலும் எதிர்வினை ஆற்ற செய்யும்.
சந்தோஷமான தருணங்களை விட, சோகமான அதிர்ச்சி நிறைந்த நிகழ்வுகளையே மீண்டும் மீண்டும் நினைக்கச் செய்யும்.
நமது கவனத்தை அதிவிரைவாக நேர்மறை தகவல்களை விட, எதிர்மறை தகவல்களை நோக்கி திருப்பிடும்.
இது எங்கிருந்து வருகிறது?
எதிர்மறை சார்பு என்பது பரிணாம வளர்ச்சியில் இருந்து நாம் தேர்ந்தெடுத்துக் கொண்ட குணமாகும். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நமது முன்னோர்கள் அதிக அளவில் எதிர்மறை விஷயங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக, வேட்டையாடும் விலங்குகளே அவர்கள் உயிர் வாழ்வதில் முக்கிய பங்காற்றுவதாக நம்பியிருந்தார்கள்.
உயிர் வாழ்வதற்கு முக்கிய பங்காற்றினார்கள். ஆனால், அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை இப்போது நாம் எதிர் கொள்வதில்லை. இப்போதுள்ள குழந்தைகளுக்கு மிக நீண்ட வாழ்க்கை அனுபவம் கிடையாது. வளர்ந்த பின்னர் நமது மூளை எதிர்மறை எண்ணங்களுக்கு அதிக உணர்வுபூர்வமாக மாறிவிடுவது அதன் விளைவாக இருக்கலாம்.
எதிர்மறை சார்புக்கு மூன்று உதாரணங்கள்:
1. நமது மூளை எதிர்மறை தூண்டலுக்கு மிக அழுத்தமாக எதிர்வினை ஆற்றும்.விஞ்ஞானிகள் இதை பரிசோதனை செய்து பார்க்கும்போது, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு நேர்மறை, எதிர்மறை மற்றும் நடுவில் இருக்கும் புகைப்படங்கள் தரப்பட்டன. தரவுகள் சொல்வது என்னவென்றால், இதில் பங்கு பெற்றவர்கள் எதிர்மறை புகைப்படங்களை பார்க்கும்போது அவர்கள் மூளையில் அதிக செயல்பாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் நேர்மறை புகைப்படங்களுக்கு அவ்வாறு இல்லை.
2. செய்திகள் கவனம் செலுத்துவது பெரும்பாலும் எதிர்மறை விஷயங்களையே. செய்தித்தாள்களும், தொலைக்காட்சி சேனல்களும் எதிர்மறை செய்திகள் மட்டுமே உங்கள் கவனத்தைக் கவரும் என்கிற மந்திரத்தை தெரிந்து வைத்துக் கொண்டுள்ளனர். நமது மூளை எதிர்மறை செய்திகளை கேட்கும் போது அதிக எழுச்சி அடைகிறது. செய்திகளும், ஊடகங்களும் இதை அதிக அளவில் துஷ்பிரயோகம் செய்கின்றனர்.
3. எதிர்மறை நிகழ்வுகளை குறித்து நாம் அதிக அளவில் சிந்திக்கிறோம். எதிர்மறை உணர்வுகள், நேர்மறை உணர்வுகளை விட அதிக நேரம் நம்மை ஆட்கொள்கின்றன. நாம் அதிக அளவு நேரத்தை எதிர்மறை நிகழ்வுகளை குறித்து சிந்திக்க எடுத்துக்கொள்கிறோம். அதனாலேயே நாம் அடிக்கடி அவற்றைப் பற்றிப் பேசுகிறோம். இதன் விளைவாக நாம் அவற்றைத்தான் அதிக அளவில் நினைக்கிறோம்.
நமது மன நலத்தை முன்னேற்றமடைய செய்திட, நமது மூளையில் இந்த எதிர்மறை சார்பு பாதிக்கும் விதத்தை முழுவதுமாக அறிந்து கொள்வதே சிறந்த ஒரு கருவியாகும்.