ஆறுதல் வழிமுறையில் உள்ள எல்லா நிலைகளும் பாதிப்பிலிருந்து மீண்ட அனைவருக்கும் அவசியம் என்றாலும், அவற்றில் அவசரநிலை, துன்புறுத்தலை நினைவு கூறுதல், குடும்பத்தை எதிர்த்து நிற்பது போன்றவை எல்லோருக்கும் பொருந்தாது. பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் நிச்சயமாக ஒரு தெரபிஸ்டையோ அல்லது ஒரு மனநல நிபுணரயோ தேடிச் சென்று அவர்களுக்குத் தேவையான ஆதரவையும், அக்கறையையும் பெற்றிட வேண்டும்.
ஆறுதல் பெற்றிட முடிவு செய்தல்.
பாலியல் துன்புறுத்தலால் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொண்டவுடன் அதிலிருந்து மீண்டு ஆறுதல் பெற்றிட ஒருவர் நிச்சயமாக செயல்படும் உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுதல் அவசியம். ஆழமான மீட்பு என்பது ஒருவர் அதனை தேர்ந்தெடுக்கும் போது மட்டுமல்லாமல் அவரும் அதன்படி மாற முடிவு எடுக்கும்போது, நிகழ்கிறது.
அவசரநிலை
ஞாபகங்கள் மற்றும் அழுத்தி வைக்கப்பட்ட உணர்வுகள் ஆகியவற்றுடன் போராடத் துவங்கும் போது, ஒருவரின் வாழ்வானது பல குழப்பங்களை சந்திக்க நேரும். அவருக்கு சொல்ல வேண்டியதெல்லாம் " இது ஒரு நிலைதான், நிச்சயமாக இது என்றென்றும் தொடராது. "என்பதைத்தான்.
நினைவூட்டல்.
பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் நிறைய பேர் குழந்தைகளாக இருந்தபோது, அவர்களுக்கு நடந்ததைப் பற்றி இருக்கும் ஞாபகங்களை அழுத்தி வைக்க முயற்சி செய்வார்கள். அந்த நிகழ்வுகளை மறக்காமல் நினைவில் வைத்திருப்பவர்கள். அந்த நேரத்தில் அது எப்படி இருந்தது என்ற உணர்வினை மறந்துவிடுவார்கள். நினைவூட்டல் என்னும் செயல்முறை, ஞாபகம் மற்றும் உணர்வினை திரும்ப பெறுவதற்கான வழியாகும்.
அது நடந்தது என நம்புதல்.
பெரும்பாலும் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் அவர்களுடைய அனுமானங்களை சந்தேகப்படுவார்கள். துன்புறுத்தல் உண்மையிலேயே நிகழ்ந்தது. அது உண்மையிலேயே காயப்படுத்தியது என்று நம்ப துவங்குவது, ஆறுதல் வழிமுறையில் முக்கிய செயல்பாடாகும்.
மௌனத்தை உடைத்தல்.
பெரும்பாலும் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் இந்த துன்புறுத்தலை குழந்தைப்பருவத்தில் ஒரு ரகசியமாக வைத்திருப்பார்கள். மற்றொரு மனிதருக்கு என்ன நடந்தது என்பதை சொல்வது, பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகின்ற அவமானத்தில் இருந்து வெளியேற உதவும்.
அது பாதிக்கப்பட்டவரின் தவறு அல்ல என்பதை அவர்கள் உணர்வது.
குழந்தைகள் துன்புறுத்தல் என்பதற்கான காரணம் தாங்கள் தான் இன்று பெரும்பாலும் நம்புவார்கள். இதில் இருந்து தப்பிப் பிழைத்து வளர்ந்தவர்கள் அந்தப் பணியினை அதற்கு உரியவரிடத்தில் சேர்க்க வேண்டும். அதாவது துன்புறுத்தியவர்களின் மேல்.
தன்னுள் இருக்கும் குழந்தையோடு தொடர்பு கொள்ளுதல்.
பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் பெரும்பாலும் அவர்களுடைய பாதிப்படையும் தன்மையில் இருந்து விடுபட்டு இருக்கிறார்கள். தனக்குள்ளே இருக்கும் குழந்தையோடு ஒருவர் தொடர்பு கொண்டால் தன்னைக் குறித்த கருணையும் இரக்கமும் துன்புறுத்திய வரை குறித்த கோபமும் மற்றும் அடுத்தவர் இடத்தில் அதிக அளளவு நெருக்கமும் உருவாகும்.
தன்னையே நம்புதல்.
ஆறுதலுக்கான மிகச்சிறந்த வழிகாட்டி ஒருவரின் உள்ளே ஒலிக்கும் அவரின் குரல், அவரின் மனசாட்சி. ஒருவருடைய கணிப்பு, எண்ணம், உணர்வு மற்றும் தொலைநோக்கு ஆகியவற்றை நம்புவதற்கு கற்றுக்கொள்வது இந்த உலகத்தில் புதுவிதமான செயல்முறைகளுக்கு அடிப்படையாய் அமையும். குழந்தையாய் துன்புறுத்தப்பட்ட நிலையில் வளர்ந்து பெரியவர்களாகி வாழ்வதற்கே போராடும்போது பலர் அவர்களுடைய இழப்பு என்ன என்பதை உணர்வதில்லை. எடுக்கப்படுவது என்பது வலியினை ஏற்றுக் கொள்வதாகும். அதை விடுத்து நிகழ்காலத்துக்கு நுழைவது சரியான வழி.
கோபம்.
கோபம் என்பது வலிமையான விடுவிக்கும் ஒரு சக்தியாகும். கோபத்தை உணர்ந்து கொள்வது, அதை உபயோகப்படுத்துவது மேலும் அதிக அளவில் துன்புறுத்தி அவரை நோக்கி திருப்புவது, மற்றும் பாதிக்கப்பட்டவரை காப்பாற்றாமல் விட்டவர் மீது திருப்புதல் ஆகியவை மீட்புக்கான மிக முக்கிய அம்சங்களாகும்.
வெளிப்படுத்துதலும் உண்மை சொல்லுதலும்
நேருக்கு நேராக துன்புறுத்தியவர் மற்றும் அல்லது அவருடைய குடும்பத்தை எதிர்கொள்வது என்பது பாதிப்பிலிருந்து மீண்ட எல்லோருக்கும் பொருந்தி வரக் கூடிய ஒன்றல்ல. ஆனால் அது உணர்ச்சிவயப்பட்ட நாடகம் போன்று இருக்கும் .மிகவும் உதவிகரமாக இருக்கும் ஒரு செயல் கருவி.
முடிவெடுங்கள் முன்னேறிச் செல்லுங்கள்.
இந்த நிலைகளில் ஒருவர் மீண்டும் மீண்டும் நகரும்போது இவை எல்லாவற்றையும் இணைக்கும் ஒரு புள்ளிக்கு சென்று சேருவார். உணர்ச்சிகளும் அதுகுறித்த எண்ணங்களும் நிலைபெறும் ஒருவர் துன்புறுத்தியவரிடம் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துவிடுவார். அதே போல் தான் மற்ற குடும்ப உறுப்பினர்களிடமும். இது வரலாற்றை அழித்து விடாது. ஆனால் வாழ்க்கையில் ஆழமான நம்பிக்கை தரும் மாற்றங்களை ஏற்படுத்தவல்லது. இரக்க குணப்படுத்துதல் மூலம் சக்தி பெறுதல் ஆகியவற்றைக் கொண்டு இந்த உலகத்தை நல்ல உலகமாக மாற்றிட இது ஒரு அருமையான வாய்ப்பாகும்.