உடற்பயிற்சியும் நரம்பியல் புத்தாக்கமும் ( நியூரோஜெனெஸிஸ்).
ஓடுதல் மற்றும் எடை தூக்குதல் மூளையில் உள்ள செல்களுக்கு புத்துயிர் அளிக்குமா? இது ஏமாற்று வேலையா?
நரம்பியல் துறையில் நடத்தப்பட்ட பல ஆண்டு ஆய்வுகள், உடல் உடலின் நல்வாழ்வுக்காக மட்டுமல்லாமல், மன நலனுக்காகவும் உடற்பயிற்சியின் பலன்களை உறுதிப்படுத்தியுள்ளன.
தசை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், உடல் வளைந்து கொடுத்தல், மற்றும் சீரான சுவாசம் இவற்றை தவிர, உடற்பயிற்சி நமது மூளை செயல்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து செய்யப்படும் உடற்பயிற்சியானது, நமது நினைவுத்திறன், கற்றல் திறன், மூளையின் நீட்சி தன்மை இவற்றை அதிகரிக்கிறது என சொந்தனை முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது அல்சைமர், டிமென்ஷியா, மனநிலை மற்றும் உணர்ச்சி கோளாறுகளை சரிசெய்வதில் உடற்பயிற்சி ஒரு மருந்து போல பயன்படுகிறது. அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கும் மற்றும் குணமடைதலிலும் இது மிகவும் உதவியாக இருக்கும்.
நரம்பியல் புத்தாக்கம் (நியூரோஜெனெஸிஸ்)
உடற்பயிற்சியானது நரம்பியல் புத்தாக்கத்தின் மூலம் நமது மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
வயதானவர்களின் மூளையில் புதிய நியூரான்கள் எதுவும் உருவாவதில்லை என்று இன்றுவரை நம்பப்பட்டது. வளந்தவர்களின் மூளையின் ஹிப்போகாம்பஸ் என்னும் பகுதியில் புதிய நியூரான்கள் உருவாவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புதிய நரம்பு செல்கள் உருவாகும் இந்த நிகழ்வு நியூரோஜெனெஸிஸ் என்று அழைக்கப்படுகிறது.
நியூரோஜெனெஸிஸ் தொடர்பாக மிகவும் ஆய்வு செய்யப்பட்ட மூளையின் பகுதி ஹிப்போகாம்பஸ் ஆகும். ஞாபக திறன், கற்றல் திறன், உணர்ச்சிகள் மற்றும் இடம், பரப்பளவு குறித்த அறிவு ஆகியவற்றிற்கு ஹிப்போகாம்பஸ் பொறுப்பேற்கிறது. மேலும் இது இது ஓரளவிற்கு பல்வேறு மனநல பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய நரம்பணு வளர்ச்சிமுன் மூளையின் வளர்ச்சிக்கு பயனளிக்கும். இது சிந்தனை மற்றும் செயலகத்திற்கு பொறுப்பு ஏற்கிறது. இவை அனைத்துமே அதிகப்படியான உணர்ச்சிகளை கையாளவும், நேர்மறையான எண்ணங்களை நினைவு கூறவும் உதவுகின்றன. இது நமது மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.
நல்ல உணவுப் முறைகள், தேவையான தூக்கம் மற்றும் தினசரி உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறையை தேர்ந்தேடுத்தல், மேலும் தியானம் மற்றும் யோகா போன்ற பயிற்சிகள் நியூரோஜெனெஸிஸுக்கு உதவியாக இருக்கும்.
நியூரோஜெனெஸிஸுக்கு உதவும் உடற்பயிற்சி வகைகள்: -
ஏரோபிக் பயிற்சிகள்
சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் மற்றும் நீச்சல் போன்ற பயிற்சிகள் நியூரோஜெனெஸிஸில் பெரும் நன்மைகளை தரும். 2016 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வெளியான கூற்று, ஏரோபிக் உடற்பயிற்சிகளின் பலன்கள் நரம்பு உயிரணு உற்பத்திக்கு உதவுகிறது என்பதாகும்.
நடனம்
நடனத்திற்கு உடலின் ஒருங்கிணைந்த இயக்கம் தேவைப்படுகிறது, இது மன முயற்சியும் குவிக்கப்பட்ட கவனமும் தேவை. இது இதயத் துடிப்பைக் சீராக வைத்திருக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான நெகிழ்வுத்தன்மையைக் கொடுக்கின்றது.
யோகா மற்றும் தியானம்
யோகா பயிற்சியாளர்கள் மீது நடத்தப்பட்ட ஒரு சுவாரஸ்யமான ஆய்வில் , புதிய மூளை செல்கள் உற்பத்தி, அவற்றின் கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பில் மூளை-பெறப்பட்ட நியூரோட்ரோபிக் காரணி (பி.டி.என்.எஃப்) ஒரு முக்கிய பங்கு ஆற்றுகிறது. யோகா மற்றும் தியானம் மன அழுத்த அளவைக் குறைக்கவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
மனநல பயிற்சிகள்:
உடல் பயிற்சிகள் போன்றே, அறிவியலாளர்கள் பல்வேறு மன பயிற்சிகளைக் கொடுப்பதன் மூலம் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதற்கான முக்கியத்துவத்தை கூறுகின்றனர். புதிய திறமைகளை கற்றுக்கொள்வது, புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வது, புதிர்களைத் தீர்ப்பது, மூளை விளையாட்டுகள் ஆகியவற்றின் மூலம் மூளைக்கான பயிற்சியை அளிக்கமுடியும். ஒரு இசைக் கருவியைக் கற்றுக்கொள்வதன் மூலம் சிறந்த நரம்பியல் உருவாக்கத்தை பெற முடியும்.
முடிவுரை
மூளையின் தாங்குதிறனை அதிகரிக்கவும், உணர்ச்சிகளை கையாளவும், மனச்சோர்வு மற்றும் பதட்டத்திற்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளை குறைக்கவும் பயிற்சிகள் உதவுகின்றன. தினசரி செய்யும் குறைந்தபட்ச உடல் பயிற்சிகள் கூட உடலையும் மனதையும் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருந்து நீண்ட தூரம் செல்ல உதவும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள் - பயிற்சியை தினசரி செய்வது மிகவும் முக்கியம். உங்களையும் உங்கள் மூளையும் ஆரோக்கியமான முறையில் பாதுகாக்க www.thunai.org இணையதளத்தில் பயிற்சிகள் குறித்த பல யோசனைகளைக் காணவும்!