உடற்பயிற்சி எவ்வாறு மன நலத்திற்கு உதவுகிறது?
மன நோய்களுக்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக மன நல நிபுணர்கள் பெரும்பாலும் உடற்பயிற்சியையே பரிந்துரைக்கின்றனர். சோர்வு, பதற்றம், கோபம் மற்றும் வீரியம் குறைதல் போன்ற மனச்சோர்வின் பல அறிகுறிகளை உடற்பயிற்சியினால் குறைக்க முடியும். பீதி கோளாறு, பி.டி.எஸ்.டி மற்றும் பிற கவலை தொடர்பான நிலைமைகளுக்கும், பயம் மற்றும் கவலையின் உணர்வுகளை குறைப்பதற்கும் உடற்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும். உடற்பயிற்சியானது உடலை பதட்டத்திற்கு எதிராக செயல்பட வைத்து அதன் வீரிய விளைவை குறைத்து, சில சந்தர்ப்பங்களில் பீதி தாக்குதல்களின் தீவிரத்தையும் குறைக்கிறது.
உடற்பயிற்சி எவ்வாறு ஆக்க பூர்வமான நல்வாழ்வை மேம்படுத்துகிறது?
ஏற்கனவே மன ஆரோக்கியத்துடன் இருக்கும் நபர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் உடற்பயிற்சி உதவுகிறது. அதிகரித்த உடல் செயல்திறன், மன நிலையை மேம்படுத்தி, ஆற்றல் மட்டங்களை உயரச்செய்து, தரமான தூக்கத்திற்கு வழி வகுக்கிறது.
மன நலத்திற்கு ஏன் உடற்பயிற்சி அவசியம் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
உடற்பயிற்சி மன அழுத்த ஹார்மோன்களான cortisol ஐ குறைத்து ‘நல்லுணர்வுக்கு’(feel good) உதவும் இரசாயனங்களையும் அதிகரிக்கிறது. இதனால் உங்கள் மன நிலைக்கு இயற்கையான உந்துதல் கிடைக்கிறது.
உடற்பயிற்சி மன நம்பிக்கையை ஊக்குவிக்கிறது. உங்கள் உடல் எடை குறைவதோடு, உடல் கட்டுக்கோப்பாக ஆகி உங்களிடம் ஒரு பொலிவு ஏற்பட்டு எப்போதும் முகத்தில் ஒரு புன்சிரிப்பை உடற்பயிற்சியினால் கொண்டு வர முடியும். இதனால் உங்கள் மன நிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டு நீங்கள் உடை உடுத்துவதிலும் கவனம் செலுத்தி அதிக வலிமையையும் வெளிப்படுத்த முடியும்.
உடற்பயிற்சி சமூக ஆதரவின் ஒரு நல்ல ஆதாரமாக இருக்கும். சமூக ஆதரவின் நன்மைகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதனால், உடற்பயிற்சி கூட சமூக நடவடிக்கையாகலாம். அதனால் நீங்கள் ஒரு குழுவாக உடற்பயிற்சி வகுப்புகளுக்கோ அல்லது மற்றவர்களுடன் கால்பந்து விளையாடுவதோ கூட மன அழுத்தத்தை இரட்டிப்பாக குறைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
சிறந்த உடல் ஆரோக்கியம் சிறந்த மன ஆரோக்கியத்தை குறிக்கும். மன அழுத்தம் நோயை ஏற்படுத்தும். அதே போல், நோய் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். உடற்பயிற்சியின் மூலம் உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் மேம்படுத்தி அதிக மன அழுத்தத்தை குறைக்கும். இதனால் சாதாரண காய்ச்சல், சளி போன்ற வியாதிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கி, நீண்ட ஆயுளை கொடுத்து, வாழ்க்கை மிகவும் சந்தோஷமாகிறது.
- உடற்பயிற்சி மன அழுத்தத்திற்கு எதிராக செயல்படுகிறது. மன அழுத்தம் குறைவதை உடற்பயிற்சியுடன் இணைக்கலாம். சுருக்கமாக, அதிக உடற்பயிற்சி செய்பவர்களின் மன அழுத்தம் மிக குறைவாகவே இருக்கும். மேற்சொன்ன பயன்களுக்கு மேல், உடற்பயிற்சி எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மன அழுத்தத்திற்கு நிறைய எதிர்ப்பு சக்தியை அளித்து தற்போதைய மன அழுத்தத்தையும் சமாளிக்க உதவுகிறது.
உடற்பயிற்சி வகைகள்:
யோகாசனம் :
2018ல் ஒரு ஆய்வின் படி யோகாசனம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள்:
உடலியல் விழிப்புணர்வு குறைகிறது
குறைந்த இதய துடிப்பு
குறைந்த இரத்த அழுத்தம்
சுவாசம் மேம்படுதல்
குறைந்த மன அழுத்தம்
மனச்சோர்வு மற்றும் பதட்டம் குறைதல்
- ஆற்றல் மற்றும் நல்வாழ்வு அதிகரித்தல்
தாய் - சீ தியானம் மற்றும் அழகான உடல் அசைவுகள் கூடிய நிற்கும் விதங்களை கலந்து செய்யும் ஒரு பாரம்பரிய சீன தற்காப்பு கலை ஆகும். தாய் - சீ யின் நன்மைகள்:
மன அழுத்தம் குறைதல்
இரத்த அழுத்தம் குறைதல்
குறைந்த பதட்டம்
சோர்வடைந்த மனநிலை மேம்படுதல்
தன்னம்பிக்கை அதிகரித்தல்
உடற்பயிற்சிகளை தொடங்குவதற்கு முன்னர்:
உங்கள் மருத்துவரிடம் ஒப்புதல் மற்றும் பரிந்துரையை பெற்ற பின், உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி திட்டத்தை தீர்மானிக்க வேண்டும்.
உங்களுக்கு ஏதாவது ஒரு வகுப்பில் சேர விருப்பமா? அல்லது ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பயிற்றுவிப்பாளரை நியமிப்பது உதவியாக இருக்குமா? அல்லது குறித்த ஒரு நேரத்தில் உங்களுக்கு பிடித்தமான பாடலைக் கேட்டுக் கொண்டு நடை செல்ல விருப்பமா? இதில் எதுவானாலும் அது உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க கூடியதாக இருக்க வேண்டும்.
- நிதானமாக செயல்படுங்கள். ஆரம்பத்தில் மிகவும் அதிக தீவிரமாக உடற்பயிற்சி செய்வத்தை தவிர்த்து உடலில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். உடற்பயிற்சி செய்வது வேடிக்கையாகவும் உங்கள் மனநிலையையும் கவலையையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். மெதுவாக ஆரம்பித்து, படிப்படியாக உங்கள் உடற்பயிற்சிகளை காலப்போக்கில் அதிகரிக்கவும்.
- உங்கள் உடற்பயிற்சி திட்டத்திற்கு கட்டுப்பட்டு இருங்கள். பெரிய அலுவலக நிர்வாகிகளிலிருந்து வீட்டில் தங்கும் தாய்மார்கள் வரை அனைவரும் ஓய்வில்லாமல் இருக்கின்றனர். அதையும் மீறி உடற்பயிற்சிக்கு நேரத்தை ஒதுக்குவது என்பது உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. உங்கள் பீதி அறிகுறிகளில் முன்னேற்றம் காண்பதற்கு சிறிது சமயம் ஆகலாம். மிக நல்ல முடிவுகளுக்கு பொறுமையாகவும் உடற்பயிற்சி செய்வதில் கட்டுப்பாடுடனும் இருப்பது மிகவும் அவசியம்.
- உங்கள் உடற்பயிற்சி திட்டத்தின் வெவ்வேறு கட்டங்களில் உங்கள் உந்துதல் மாறக்கூடும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆரம்பத்தில் இருக்கும் உற்சாகம் காலப்போக்கில் குறைவது அசாதாரணமானது அல்ல. இது உங்கள் நடைமுறைகளை சிறிது மாற்றவோ அல்லது புதிய உடற்பயிற்சிகளை கண்டறியவோ உதவும். உதாரணத்திற்கு, உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்வது சலிப்பை ஏற்படுத்தினால் வெளியில் சென்று தனியாகவோ அல்லது குழுவாக நடக்கலாம். இந்த மாற்றங்களினால் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது மற்றவர்களின் நட்பையும் பெறலாம்.