நீங்கள் ஆரோக்கியமாக உணர இது உங்களுக்கு உதவுமா? இதைப் பற்றி ஒரு நிபுணர் சொல்வது:
நீங்கள் சாப்பிடுவதற்கும் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதற்கும் இடையேயான தொடர்பு முன்னெப்போதையும் விட வலுவானதாக இருக்கிறது.
ஊட்டச்சத்து உளவியல் மருத்துவம் என்ற வார்த்தையை நான் முதன்முதலில் கேட்டபோது, அது எதைக் குறிக்கிறது என்பதை நான் உள்ளுணர்வாக அறிந்தேன். ஏனென்றால், பல உணவு நிபுணர்களுடன் என்னையும் சேர்த்து, உணவுக்கும் மன ஆரோக்கியத்திற்கும் (மகிழ்ச்சியை மேம்படுத்தும் உணவுகள் உட்பட) உள்ள தொடர்பைப் பற்றி சில காலமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம்.
ஊட்டச்சத்து உளவியலின் வளர்ந்து வரும் துறையானது ஊட்டச்சத்து மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இடையிலான உறவைப் புரிந்துகொள்வதை விரிவாக்குகிறது என்பதை பல ஆய்வுகள் ஆதரிக்கின்றன. இதன் விளைவாக, சில மனநல மருத்துவர்கள் இப்போது பல்வேறு மனநல நிலைமைகளுக்கு சிகிச்சையாக ஊட்டச்சத்தை ஒரு பகுதியாக பயன்படுத்துகின்றனர். சில சமீபத்திய ஆராய்ச்சிகளின் கண்ணோட்டங்களை - குறிப்பாக மனச்சோர்விற்காக - கீழே காணலாம்:
அழற்சி உணவுகள் ( Inflammatory foods ) அதிக மனச்சோர்வு அபாயத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன:
சர்க்கரை பானங்கள், சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், பொரித்த உணவு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, அதிக கொழுப்பு நிறைந்த பால் சார்ந்த உணவுகள் மற்றும் இனிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அழற்சியை கொடுக்கக் கூடிய மேற்கத்திய உணவுகள், மனச்சோர்வின் அபாயத்துடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சிகள் நீண்ட காலமாக சுட்டிக்காட்டியுள்ளன.
2020 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதாரத்தின் சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், உணவு மற்றும் மனச்சோர்வுக்கு இடையில் பல நேர்மறை மற்றும் எதிர்மறையான தொடர்புகளை கோடிட்டுக் காட்டுகிறது.
சால்மன் வகை மீன்களிலிருந்து வரும் அழற்சி எதிர்ப்பு கொழுப்புகள், Omega3, அவகாடோ மற்றும் ஆலிவ் எண்ணையிலிருந்து வரும் நிறைவுறா கொழுப்புகள் (Unsaturated fats) மனச் சோர்வு ஏற்படுவதற்கான சாத்தியங்களை குறைத்தும் அழற்சிக்கான இரத்த குறிப்பான்களை (Blood markers) குறைக்கவும் செய்கின்றன. பெர்ரிக்கள், எலுமிச்சை வகை பழங்கள், ஆப்பிள்கள் மற்றும் பீன்ஸில் காணப்படும் anti oxidants மனச் சோர்வுடன் எதிர் மாறான தொடர்புடையவை.
சில உணவுகள் மனச் சோர்வை தடுக்க உதவுகின்றன:
மீன் உட்கொள்வது பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மேற்கூறிய 2020 இன் ஆய்வின் படி, மீனை வாரத்திற்கு இருமுறை அல்லது அதற்கு மேலும் உண்ட பெண்களுக்கு, வாரத்திற்கு இரு முறை கூட மீன் உண்ணாத பெண்களை விட மனச் சோர்வு அடைவதற்கான சாத்தியம் 25% குறைவாகவே இருந்தது காணப்பட்டது.
மக்னீசியம், ஃபோலேட், துத்தநாகம் (zinc), வைட்டமின் D, B12 and B6 ஆகிய தாதுக்களின் குறைபாடுகள் உணவில் இருந்தால் கூட மனச் சோர்வு ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். மக்னீசியம் டார்க் சாக்லேட், அவகாடோ, பல வகையான பருப்புகள், விதைகள் மற்றும் தானியங்களில் காணப்படுகிறது.
கீரை வகைகள், பீட்ரூட் எலுமிச்சை வகை பழங்கள், அஸ்பாரகஸ், ப்ரொகோலி மற்றும் பருப்புகளில் ஃபோலேட் காணப்படுகிறது. சிப்பிகள் (oysters), வேக வைத்த பருப்புகள், பூசணி விதைகள் மற்றும் முந்திரி பருப்புகளில் துத்தநாகம் காணப்படுகிறது.
சால்மன், சார்டீன், முட்டைகள் மற்றும் புற ஊதா ஒளிக்கு காட்டப்பட்ட காளான்கள் ஆகியவற்றில் வைட்டமின் D உள்ளது. இருப்பினும், இந்த ஊட்டச்சத்தின் ஆரோக்கிய இரத்த அளவைப் பெற துணை மருந்துகளும் தேவையாகிறது. வைட்டமின் B12, வலுவூட்டப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த காடிச் சத்து (fortified nutritional yeast) மற்றும் மாமிசங்களிலும், வைட்டமின் B6 கொண்டை கடலை, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வாழைப்பழம், சால்மன் மற்றும் டூனா(tuna) ஆகியவற்றில் காணப்படுகிறது.
உணவுத் திட்டத்தில் மாற்றம் அமைத்தல் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்கும்:
உணவிற்கும் மனநிலைக்கும் உள்ள தொடர்பு கேள்விக்கே இடமில்லாதது. நீங்கள் மன சோர்விற்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவராயிருந்தாலும், உணவுத் திட்டத்தில் மாற்றங்கள் அமைத்துக் கொண்டால், மன அதிர்வை சமாளிக்க உதவும். இது நம்மில் பலரும் எதிர் கொள்ளும் ஒரு விஷயமாகும்.
மன ஆரோக்கியத்திற்காக நம் உணவுத் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வது உடல் எடை குறைதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், நீரிழுவு நோய், கொழுப்பு, இரத்த அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றிற்கு நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
உங்களுக்கான தனிப்பட்ட உணவு உளவியலைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு நல்ல உணவு நிபுணரை கலந்தாலோசிக்கவும். அவரால் உங்கள் மனச் சோர்விற்கு தீர்வு அளிக்க முடியாவிட்டாலும், உங்களுடைய மருத்துவரிடம் கூடிப் பேசி உணவிற்கும் மன சோர்விற்கும் உள்ள தொடர்ப்பை பற்றி உங்களுக்கு அறிவுறுத்தலாம்.
சிந்தியா சாஸ், எம்.பி.எச்., ஆர்.டி., ஹெல்த்ஸ் பங்களிப்பு ஊட்டச்சத்து ஆசிரியர், நியூயார்க் டைம்ஸின் சிறந்த பெயர் பெற்ற எழுத்தாளர் மற்றும் ஐந்து தொழில்முறை விளையாட்டு அணிகளுக்காக ஆலோசனை பெற்ற ஒரு தனியார் நடைமுறை செயல்திறன் ஊட்டச்சத்து நிபுணர் ஆவார்.