1. சிறுவயது நிகழ்வின் அதிர்ச்சி மூளை வளர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது? அதன் தாக்கம் என்ன?
அதிர்ச்சி, மூளை வளர்ச்சியை நிச்சயமாக பாதிக்கிறது. மேலும் உடம்பின் பல பகுதிகளையும் இயக்கங்களையும் எதிர்மறை சக்தியானது பாதிக்கிறது. இது மன நலம் மற்றும் உடல் நலத்தை சேர்த்தே பாதிக்கிறது. சிறு வயதில் பல குழப்பமான அதிர்வுகளை கொண்டவர்களுக்கு அவர்களுடைய உடல் நலக் கேடும் பல்வேறு கோணங்களில் ஏற்படுகிறது .
பாதிக்கப்பட்டவரின் மனதினுள் உறைந்திருக்கும் அதிர்வினை கண்டு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இத்தகைய கேடுகள் நிகழ்கின்றன. அவரது நோயியல் மற்றும் அனுபவத்தை இது பாதிக்க நேரிடும். அவர்களுக்கு அத்தகைய அதிர்வினை மீண்டும் உண்டாக்கக் கூடும், சில நேரங்களில் பலம் இழக்கவும் கூடும்.
2. சிறுவயது நிகழ்வின் அதிர்வு உடல் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன?
சிறுவயதில் நிகழ்வின் அதிர்வினை அனுபவித்த இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் தங்களுடைய உடல் நலக்குறைவிற்காக மருத்துவர்களை அடிக்கடி அணுகுவார்கள். இன்றைய நவீன நரம்பியல் சொல்வது என்னவென்றால் தொடர்ந்து இருக்கும் மன அழுத்தம் மற்றும் அதிர்வின் விளைவு மூளையின் வளர்ச்சி மற்றும் அதன் அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே.
மேலும் அது மூளையில் ரசாயன மாற்றத்தையும் நிகழ்த்துகிறது .மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை வெளியிடச் செய்கிறது. அதிக அளவில் மன அழுத்த ஹார்மோன்கள் உருவாவது மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும். அந்த வீக்கமானது நாளடைவில் ஒரு நோயாக மாறும்.
சிறார் சீரழிவில் தப்பி வந்து உயிர் வாழ்பவர்கள் அதிக அளவில் நோய்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் , அறுவை சிகிச்சை மற்றும் விபத்துக்களுக்கும் வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
3. அறிவாற்றல் செயல்பாட்டில் சிறுவயது சீரழிவு அதிர்ச்சியின் விளைவு என்ன?
மூளையின் இடது வலது பகுதிகள் ஒன்றாக இணைந்து வேலை செய்ய வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. சிறுவயது சீரழிவின் அதிர்வுகள் இந்த இரண்டும் ஒன்றிணைந்து வேலை செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தும். அதிக அளவு மன அழுத்தமானது மூளையின் தூண்டல் உணர்வினை பாதிக்கும். இது அதிக எழுச்சி முதல் மிகக்குறைவான எழுச்சி வரை மாறுபடும்.
இது அடிக்கடி நிகழும். இது சிந்தித்தல் கவனமாக செயல்படுதல் , எண்ண குறிப்பு மற்றும் ஞாபக சக்தியை பாதிக்கும். இது மன விலகல் எனும் குணத்தோடு இணைந்து இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
4. குழந்தைப்பருவ அதிர்ச்சி எப்படி நமது நடத்தையை பாதிக்கும்?
குழந்தைப் பருவத்தில் அதிக அளவில் சீரழிவிற்கு உள்ளான குழந்தைகள் அதிர்வுக்கு உள்ளானவர்கள் பலர் எப்போதும் அதிக மன எழுச்சி அல்லது அதிக பாதுகாப்பு உணர்வு கொண்டு வாழ்வார்கள். அதேபோல அவர்கள் அதிக அளவில் பயத்துடனே வாழ்வார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது பற்றிய கவலை அவர்களிடம் அதிக அளவில் இருக்கும்.
இந்த அதிர்வை அவர்கள் எதிர்கொள்ளும் விதத்தில் அவர்களுடைய சில நடத்தைகள் மற்றவர்களுக்கு சவாலாக இருக்க வாய்ப்பு உள்ளது.சிலர் ADHD குறைபாடு, ODD குறைபாடு, பள்ளி அல்லது வேலைக்கு போகாமல் இருத்தல் மற்றும் திடீர் தாக்குதல் ஆகிய குறைபாடுகள் உள்ளவர்களாக கணிக்கப்படுவார்கள். இதுபோல கணிக்கப்படும் பல குழந்தைகள் சிறுவயது அதிர்வு உள்ளவர்கள். அந்த அதிர்வினை கணக்கில் கொண்டால் அவர்களுடைய நடத்தை மாறுதல் சரியான ஒன்றுதான் என்று எடுத்துக் கொள்ளத் தோன்றும்.
மிகமோசமான குழந்தைப் பருவ அனுபவங்கள் பற்றிய ஆய்வு தெரிவிப்பது என்னவெனில் முதலில் இதிலிருந்து மீண்டு வருவதற்கு செய்யக்கூடியதெல்லாம் தற்காத்துக் கொள்வதே. அதாவது ஆபத்தை எதிர்த்து தற்காத்துக் கொள்ளுதல். இருப்பினும் காலப்போக்கில் இந்தத் தன்மை குறைந்து பாதுகாப்பில்லாமல் மாறிவிடுகிறார்கள். இந்த அதிர்வு நினைவுகள் ஒருவரின் உணர்வு மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.
உதாரணமாக எப்போதும் அதிகப் பாதுகாப்பு உணர்வோடு வாழுதல் என்பது தொடர்ந்து உங்களை கவலையிலேயே வைத்திருக்கும். தூக்கம் குறைந்து விடும் மற்றும் நிம்மதி என்பது கிட்டாது. உங்களை மிகவும் சோர்வடையச் செய்துவிடும்
சமாளிக்க உதவும் முயற்சிகள் எல்லாமே காலப்போக்கில் அதிக பயன் இல்லாமல் போய்விடும். அவைதான் அந்தக் குழந்தை உயிரோடு இருப்பதற்கு வலிமையை தரக்கூடியவை. ஒன்றை முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டும், சிகிச்சைகள் உங்களுடைய நடத்தையை அதனுடைய செயலை அறியாமல் கட்டுப்படுத்தக் கூடியவை ஆகும். இந்த நடத்தைகளை அதிர்வின் வாயிலாக புரிந்துகொண்டு அவற்றை காப்பாற்ற வேண்டியது அவசியம். அதே நேரத்தில் அதற்கு மாற்றான மற்றொன்றையும் வளர்க்க வேண்டியது முக்கியம்.
5. எவ்வாறு சிறுவயது அதிர்ச்சி மன மற்றும் உணர்வுபூர்வமான நலத்தை பாதிக்கும்?
சிறுவர்கள் தன் ஆறுதல் பெறுவது எப்படி என்று கற்றுக் கொள்வார்கள். மேலும், மனதளவில் பெரும் உணர்வுகளை நிர்வகிக்கவும் கற்றுக் கொள்வார்கள். அதற்கு அவர்கள் வசிக்கும் பாதுகாப்பான சூழ்நிலை மற்றும் அவர்களுக்கு சரியான முறையில் அக்கறை செலுத்துவோரின் உதவி ஆகியவையும் அமையும் பட்சத்தில் நிகழ வாய்ப்பு உண்டு. ஏனெனில் அக்கறை செலுத்துவோர் சிறுவர்களின் தேவைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டிருப்பார்கள்.
பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் அதிக அளவில் கவலை மற்றும் மன அழுத்தத்தை வளர்த்துக்கொள்வது மிக அதிகம். குழந்தைகளும் பெரியவர்களும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் வளரும்போது மிகவும் பதட்டமாகவும் மிகவும் அடங்கியும் மற்றும் மிகுந்த பய உணர்வு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
மேலும் அதிக பாதுகாப்பு உணர்வு கொண்டவர்களாகவும் சுலபமாக மனவெழுச்சி ஏற்படுத்த முடிகிறவர்களாகவும், எந்த சூழ்நிலைக்கும் எந்த உணர்ச்சியும் காண்பிக்காதவர்களாக தங்களுக்குள்ளே மூடி இட்டுக்கொண்டு இருப்பவர்களாகவும் அமைந்திட வாய்ப்புகள் மிக அதிகம். அல்லது போதைப் பொருட்கள் மற்றும் இதர சமாளிப்பு வழிமுறைகளை கடைபிடித்து அவர்களுடைய வலி அதிகரிக்க உணர்வுகளை அகற்றிட முயல்வது உண்டு.
பொது மனநல சேவைகளை நாடி வருவோர் பாலியல் உடல் ரீதியான மற்றும் மனரீதியான அதிர்ச்சிக்கு உள்ளானவர்களே. அவசர உள் மருத்துவ மற்றும் வெளி மருத்துவ சிகிச்சைக்கு வருபவர்களில் மூன்றில் இரண்டு பேர் சிறுவயது உடல் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள்.
ஆய்வின்படி சிறு வயது துன்புறுத்தலுக்கு ஆளாகி அந்த அதிர்ச்சிக்கு உள்ளானவர்கள் மன அழுத்தம், தலை சார்ந்த கோளாறுகள், போதைப்பழக்கம், ஆளுமை பிறழ்வு, உணவு பழக்கம் மாறுதல்கள், பாலியல் குறைபாடுகள் மற்றும் தற்கொலை மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிவிக்கிறது.
6. சிறுவயது அதிர்ச்சி எவ்வாறு உறவுகளையும் சமூக பரிமாற்றங்களையும் பாதிக்கிறது?
சிலரின் உலகம் அவர்களுடைய பெற்றோர் மற்றும் முதன்மை பாதுகாவலர்களை சுற்றி அமைகிறது. பாதுகாவலர்கள் பாதுகாப்பு, அன்பு புரிந்து கொள்ளுதல், ஆதரவு மற்றும் வளர்ச்சிக்கு உதவுதல் ஆகியவற்றை தருவது அவர்கள்தான்.
இருவருக்கிடையேயான உறவில் ஏற்படும் அதிர்வுகள் குழந்தைப் பருவத்திலிருந்தே பாதுகாப்பான உணர்வை துண்டித்து விடுகின்றது. அதற்கு காரணம் இந்த அதிர்வு குழந்தையின் எல்லைகளை மீறி விடுகிறது. அப்படி என்றால் அவர்கள் பாதுகாப்பாகவும் மதிக்கப்படும் நிலைமையிலும் இல்லை என்று அர்த்தம்.
குறிப்பாக முதன்மை பாதுகாவலர்களுக்கு பிரச்சனையாக இருக்கும். இதன் காரணமாக பெரியவர்களானதும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் பிரச்சனைகள் இருக்கும். ஏனெனில் அவர்களுடைய எதிர்வினை ஒரு நெருங்கிய உறவினை பாதிக்கும் நிலைமையில் தான் இருக்கும்.
துன்புறுத்தல் இருந்து தப்பி பிழைத்தவர்கள் தங்களுக்கான சுய அடையாளத்தை நிர்வகிப்பதில் மிகவும் சிரமப்படுவார்கள். அவர்களுடைய உண்மையான மனோநிலை, சுய கௌரவம் ஆகியவற்றை நிர்வகிக்கவும் மிகவும் சிரமப்படுவார்கள்.
தப்பிப் பிழைத்தவர்களில் சிலர் படிப்பதற்கும் அந்தப் படிப்பினை தொடர்ந்து படித்து முடிப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். அல்லது அவர்கள் இயற்கையான திறமைகளுக்கு ஏற்ற வேலைகளில் தொடர்ந்து இருப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். இதுபோன்ற தாக்கங்களால் தப்பிப் பிழைத்தவர்கள் சமூகத்தில் ஒரு அர்த்தமுள்ள பங்களிப்போ அல்லது வாழ்க்கைக்கான பிடிப்போ ஏற்படாமல் மிகவும் போராட்டமாய் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள்.
அப்படி பிழைத்தவர்களில் பலரும் அடிக்கடி நிறைய போராட்டங்களை சந்திப்பார்கள். உதாரணமாக வேலையிலே மாற்றம், இடமாற்றம், தோல்வியடைந்த உறவுகள், பொருளாதார பின்னடைவு ஆகியவை. ஏனென்றால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் நிறைய மேலும் கீழுமாக போராட்ட அனுபவங்கள்தான். இவை அவர்கள் நிரந்தரமான கணித்து ஈடுபடக்கூடிய மற்றும் தொடர்ந்து நடைபெறும் எந்த ஒரு செயலையும் செய்வதற்கோ நிரந்தரமாக நிறுவுவதற்கு தடையாகவே இருக்கும்.
தப்பிப் பிழைத்தவர்கள் பலர் எப்போதுமே 'உடனடி நிவாரணம் வேண்டி போராட்டம்' என்னும் ஒரு முறையிலேயே செயல்படுவார்கள். இதற்கு திரும்பத் திரும்ப அவர்களுக்கு மனதில் ஏற்படும் அதிர்வு குறித்த உணர்வுகளுக்கான உடலியல் வழி எதிர்வினை ஆகும். இது அவர்களை மிகவும் சோர்வடையச் செய்து உதவி இன்மை மற்றும் நம்பிக்கையின்மை குறித்த எண்ணங்களை அவர்கள் மனதில் விதைக்கும்.
7. சிறுவயது அதிர்ச்சி எவ்வாறு நம்முடைய அர்த்தப்படுத்தும் உணர்வினை பாதிக்கும்?
மற்றொரு மனிதர்/மனிதர்களால் காயப்படுத்தப்பட்ட பின்னர் எப்போதும் எச்சரிக்கை உணர்வோடு எல்லாவற்றிலிருந்தும் விலகியும் வாழ வேண்டி இருப்பதால் உயிர் வாழ்வதென்பது இங்கே இப்பொழுதே என்ற வகையிலேயே நடைபெறும். இது எதிர்காலம் பற்றி கனவு காண்பதையும் நினைப்பதையும் கூட பாதிக்கும்.
நம்பிக்கை வைப்பதற்கும் எதிர்காலத் திட்டங்களை உருவாக்குவதற்கும் மிகமிக சிரமங்களை தரும்.தப்பிப் பிழைத்தவர்களில் பலர் மக்களும், வாழ்க்கையும் நம்பிக்கை வைக்கப்பட கூடாதவை அல்லது ஏதோ இருக்கட்டும் என்று எந்த மதிப்பும் இல்லாத வாழ்க்கையை வாழ பழகியவர்கள். ஒரு பயங்கர அனுபவத்தினை,அர்த்தப்படுத்துவது என்பது ஒரு மிகப்பெரிய சவால் மட்டுமல்ல அது ஆறுதல் பெறுவதற்கான ஒரு மிகச் சிறந்த வழியும் ஆகும்.
மிகவும் நம்பிக்கை சார்ந்த சமூகத்தில் வளர்ந்து வரும் போது துன்புறுத்தல்களை காயப்படுவது கடவுள் என்ற எண்ணத்தையே மனதிலிருந்து அகற்றி விடும் பல வேறு முடிவுகளையும் கொண்டு வந்து தரும்.
சிறுவயது சீரழிவு அனுபவம் கொண்டவர்கள் அதிலிருந்து தப்பி பிழைத்தவர்கள் எப்படி இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பது பற்றிய ஒரு தரவு கீழே உள்ளவற்றை விளக்கமாய் சொல்கிறது.
இவர்கள் மனநிலை சரி இல்லாத நிலைமையில் தான் அதிக அளவில் இருப்பார்கள்.
அவர்களின் எதிர்கால வாழ்க்கையிலும் பெரும்பான்மையானோர் மகிழ்ச்சி இல்லாமலேயே இருப்பார்கள்.
அதிக அளவில் சரியான உடல் நலம் இல்லாமலும் மூன்று அல்லது அதற்கு மேலும் நோய்கள் கொண்டவர்களாக இருப்பவர்கள் அதிகம்.
உடைந்த உறவுகள் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சமூக ஆதரவு மிகக் குறைந்த அளவிலேயே பெற்றவர்களாக இருப்பார்கள்.
பெரும்பான்மையான தனியாகவே வசிப்பார்கள்.
அதிகமான அளவில் தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்துபவர்களாக இருப்பார்கள்.
அதிக அளவில் புகைப்பிடிப்பவர்கள் ஆகவும் போதைப்பொருள் உபயோகப் படுத்துபவர்களாகவும் இருப்பார்கள்.
பெரிய அளவில் உடல் உழைப்பு செய்யாதவர்களாக இருப்பார்கள்.