எண்ணத்திற்கும் செயலுக்கும் உள்ள தொடர் சுழற்சியை எவ்வாறு மாற்றுவது?
நீங்கள் எதைப்பற்றி, எப்படி யோசிக்கிறீர்களோ அது உங்கள் உணர்வுகளை பாதிக்கும். நேர்மறை எண்ணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது, சக்தியை கொடுக்கிறது. எதிர்மறை எண்ணங்கள் உங்களை சோகத்தில் ஆழ்த்தி, பலமிழக்க செய்துவிடும். இந்த எண்ணங்கள் உங்கள் செயல்பாட்டை பாதித்து, உதவாத செயல்களில் முடியும்.
நீங்கள் வரவேற்காமலே எண்ணங்கள் உங்கள் மனதிற்குள் வந்துவிடும், நீங்கள் எதுவும் செய்வதற்குள்ளேயே வெளியேறி சென்று விடும். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் வரும், போகும், பெரும்பாலான எண்ணங்களை நாம் கண்டுகொள்வதில்லை.
சிறார் வன்முறையிலிருந்து மீண்டு வந்தவருக்கு, இளம் வயதிலேயே பயிற்சி அளிக்க, " பார், யோசி மற்றும் செயல்படு" பயிற்சி , வான் லோன் & க்ரளிக்கினால் (van Loon & Kralik) 2005 ஆண்டு உருவாக்கப்பட்டது.
வான் லோன் & கிராளிக் விளக்கியுள்ள படி, நாம் எல்லாரும் நடக்கும் சம்பவங்களை பற்றி பல சிந்தனைகள், உணர்ச்சிகள் மற்றும் மன அணுகுமுறைகள் வைத்திருப்போம். இந்த எண்ணங்களும் உணர்வுகளும் அன்பு, கோபம், வருத்தம், சோகம் போன்ற பல உணர்ச்சிகளை உண்டாக்குகின்றன. இந்த உணர்வுகள் நம் நடைமுறையையும், செயல்களையும் பாதிக்கின்றன. இவை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உணர்வுகளே.
மேலும் இவை நம் நடத்தைகள் மற்றும் எதிர்வினைகளை தூண்டுகின்றன. வேறு சில சமயங்களில் இவை கடந்தகால அதிர்ச்சியின் அனுபவங்களிலிருந்து வரும் எதிர்வினைகளை நிராகரிக்கலாம். எந்த ஒவ்வொரு எதிர்வினைகளும் ஒரு விளைவு கண்டிப்பாக உண்டு. நம் எண்ணத்தையும் உணர்வுகளையும் நாம் அடையாளம் காட்ட முடியாத போது, நம் நடத்தை நமக்கோ, நம்மை சுற்றி இருப்பவருக்கோ நன்றாக அமையாது.
ஒரு சூழ்நிலையால் மன எழுச்சி அல்லது மனத்தாக்கம் வரும் போது, பின்வரும் பயிற்சிகளைச் செய்து பாருங்கள்.
1 . பார் :
உங்கள் உணர்வுகளை அடையாளம் காட்டி, ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள்ளே என்ன நடக்கிறது என்று பாருங்கள். சூழ்நிலை என்ன? நடந்த நிலை என்ன? அந்த நிகழ்விலிருந்து எவ்வளவு பாதிப்பு? மனதளவில் எவ்வளவு நாள் யோசித்துக் கொண்டிருந்தீர்கள்?
2 . யோசி :
இதில் முக்கியமான பிரச்சனை என்ன? ஏன் இது நடக்கிறது? இது நிகழக் காரணமான மூலவிஷயங்கள் என்ன? (உதாரணமாக, என் மனோநிலை, நம்பிக்கை, கடந்த கால அனுபவங்கள்). நான் எப்படி நடந்து கொள்கிறேன்? (உதாரணமாக, கடந்த கால அனுபவங்கள் மன எழுச்சி உண்டாக்கி என்னை அதிகம் கோபப்பட வைக்கிறதா? என்னை அறியாமல் அதிகம் செலவழிக்கிறேனா?)
3 .செயல்படு:
செயல்பாடு என்பதற்கு "நடவடிக்கை எடுப்பது", "காரியத்தில் ஈடுபடுவது" என்று பொருள். நாம் விரும்பும் பலன் கிடைக்க மாற்று வழியில் என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். ஆரம்பத்தில் சிறிய அளவில்,எளிய முறையில் செய்யக்கூடிய செயலில் இருந்து ஆரம்பிக்கலாம். கோபம் வரும் போது, உணர்ந்து ஆழ்ந்த மூச்சு விடலாம், ஒரு வேக நடை போடலாம். கூட இருந்தவரிடம் மன்னிப்பு கேட்கலாம். இந்த செயல் முறையை நாம் கடைப்பிடித்தால், கொஞ்சம் கொஞ்சமாக, எண்ணங்களும், உணர்வுகளும் நம் கட்டளைக்கு வரும். நம் நடத்தையும், செயல்களும் நம் மன நலனுக்கேற்றபடி அமையும்.
யோசிப்பதில் இருந்து வெளியேறுவதற்கும், வேறு மனநிலை உள்ளவர்களோடு குழுவாய் சேர்வதற்கும் கண்டிப்பாக நமக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், அது பாதுகாப்பானது மற்றும் உபயோகமானது கூட. இருப்பினும் எதுவுமே நடக்கவில்லை என்று நினைத்துக் கொள்வதோ அல்லது நம்புவதோ, நமது தாக்கத்தை அந்நிகழ்வில் இருந்து குறைத்துவிடுகிறது. அதே நேரத்தில் இந்த எதிர்வினையிலிருந்து இருந்து நம்மை தடுத்து நிறுத்தவும் செய்கிறது. முடிவாக நமக்கு தேவையான விளைவுகள் நிகழ்வதே இல்லை.
இதன் விளைவுகளாக, உங்களின் எதிர்விளைவுகளை நீங்களே கவனிக்கவும், உங்களை சுற்றி உள்ளவர்கள், மற்றும் அவர்களின் எதிர்வினைகளையும் உங்களால் சுலபமாக தெரிந்து கொள்ள இயலும். பார், யோசி, செயல்படு செயல்முறை உங்களுடைய எதிர் விளைவுகள் அனைத்தையும் உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர உங்களுக்கு உதவும். நடக்கும் எல்லாவற்றையும் உங்கள் மனதுக்கு எடுத்துச் செல்லாமல், அதை பொறுத்து கொண்டு ஆராயும் தன்மை உங்களிடத்தில் அதிகமாகும். இதை நீங்கள் கண்கூடாக உணரலாம்.