உடல் ரீதியான பயிற்சிகளின் முக்கியத்துவம்

உடலையும் மனத்தையும் கவனித்து பராமரிப்பது நம் மீட்பு பயணத்தில் முக்கிய அம்சம். தினசரி உடல்ரீதியான பயிற்சிகள், உங்கள் நரம்பு மண்டலத்தை மீண்டும் சமநிலைப்படுத்தும். Stress ஹார்மோன் அளவை குறைக்கும். உங்களுக்குள் ஒரு பாதுகாப்பான இடத்தை உருவாக்கும். ஒரு சமதளத்தை உருவாக்கி, பேச்சு சிகிச்சை மூலம் பயனடைய இடமளிக்கும்.


இங்கு உள்ள உடல் சிகிச்சை பற்றிய வீடியோ பார்த்து மேலும் அறிந்து கொள்ளுங்கள். யோகா, நடனம், இசை போன்ற சுலபமான, மனம் விரும்பக்கூடிய பயிற்சி வகைகள் இதில் அடங்கும்.


அறிவியல் சார்ந்த பயிற்சிகள்:

சிகிச்சையில், ஒரு தின வழக்கமாக அறிவியல் சார்ந்த அடிப்படையில் பயிற்சி செய்யும்போது, ​​இந்த பயிற்சிகள் உங்கள் மூளையை (நவீன அறிவியலின் படி) மாற்றியமைக்க முடியும். புதிய நரம்பணு உருவாக்கம், செல்களுக்கு இடையேயான இணைப்புகள், மூளையின் நினைவு மையத்தின் வளர்ச்சி - இவை செயல்பட்டு, பாலியல் அதிர்ச்சி மற்றும் மனச்சோர்வு இவற்றின் எதிர்மறையான பாதிப்புகளை குறைக்க உதவுகின்றன.


விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட சுய பாதுகாப்பு நடைமுறைகளை இங்கே தேர்ந்தெடுத்துள்ளோம். சில பயிற்சிகள் (சுவாசம்) சில விதங்களில் உடன் பலனளிக்கும். வழக்கமான பயிற்சி மேலே கூறிய நீடிக்கும் பலன்களை கொடுக்கும்.


துவக்க பயிற்சிகள்

மகிழ்ச்சியுடன் செய்ய சில பயிற்சிகள்.

சுய பராமரிப்பு குறித்த காணொளிகள் மற்றும் ஒலிப்பதிவுகளை "உதவ" என்ற தகவல்கள் பகுதியில் பாருங்கள்.

கட்டுரைகள்

சுய பராமரிப்பு, சுயநலம் அல்ல...

சுய பராமரிப்பு என்பது ஒவ்வொரு நாளும் நம்மை நாம் கவனித்துக் கொள்வதற்கான நேரத்தை ஒதுக்குவது. ஆக்ஸிஜன் ...

நன்றி உணர்வு பதிவுகள்

நன்றி உணர்வு - நம் மன நலத்திற்க்கு அடிப்படை!    நாய்க்கு புரிந்தது நமக்கு புரியுமா? ஒ...

நல்வாழ்வுக்கு தயாராகுங்கள்

பாதிப்புகள் இயல்பானதே. உங்களுடைய குழந்தை பருவ நினைவுகள் தினந்தோறும் உங்களை அலைக்கழிக்கும் பொழுது, நல...

சேறு இல்லையேல் செந்தாமரை இல்லை : ஒரு சிறப்பு பார்வை

திக் நாட் ஹான் ஒரு முன்னணி புத்த ஆசிரியர். எளிய மொழியில் நம்  ஆன்மாவைத் தொடும் விதத்தில் பல புத்தகங்களை எழுதியவர். இந்த புத்தகத்தில், துன்பம் மகிழ்ச்சிக்கு எவ்வாறு வழிவகுக்கும் என்பதை அவர் ஆராய்கிறார். அவர் சுய பராமரிப்பு பற்றிய நுண்ணறிவுகளையும் பல நடைமுறை உதவிக்குறிப்புகளையும் வழங்குகிறார்.