இதய துடிப்பில் ஏற்படும் மாற்றங்களை (HRV) கண்டறியும் ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் போன்றவைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது என்ன? இதைப் பற்றி நீங்கள் அறிந்துக்கொள்ள விருப்பமா? இதோ ஒரு ஆய்வு...
இந்தக்கருவி (HRV) உங்களது இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே உள்ள காலஅளவையையும் மாறுபாட்டினையும் அளவிடுகிறது. உங்கள் ஆப்பிள் வாட்ச் அல்லது ஃபிட் பிட் (Fit-Bit) மூலம் ஓரளவிற்கு துல்லியமாக அளவிட முடியும்.
இந்த செயல், நரம்பு மண்டலத்தின் முக்கிய பகுதியான தானியக்க நரம்பு மண்டலம் (Autonomic Nervous System) மூலம் செயல் படுத்தப்படுகிறது. இது நமது உடலின் மற்ற உள்ளிருப்பு வேலைகளான இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாசம் மற்றும் செரிமானம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு அதை சீர்செய்கிறது.
தானியக்க நரம்பு மண்டலம்(ANS) இரண்டு பெரும் பிரிவுகளாக உள்ளது. அவை பரிவு(Sympathetic) நரம்பு மண்டலம் மற்றும் இணை பரிவு (Parasympathetic) நரம்பு மண்டலம், இது எதிர்த்தல் அல்லது தப்பித்தல் எதிர்வினை எனப்படும். வேகஸ் நரம்பு, இணை பரிவு (Parasympathetic) நரம்பு மண்டலத்தின் ஒரு முக்கிய பகுதி. இது நிதானமாக எதிர்வினையாற்றும் மனநிலையை ஊக்குவிக்கிறது என்பதை நாம் அறிவோம்.
நம்முடைய மனநிலை ஆரோக்கியமாக இருக்கும் பொழுது இவ்விரு பகுதிகளும் சமநிலையிலிருக்கும். வாழ்க்கையில் ஏதாவது அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நடக்கும்போது இந்த பரிவு(Sympathetic) நரம்பு மண்டலம் நம்மை எதிர்வினையாற்ற தூண்டுகிறது. உடனே இணை பரிவு (Parasympathetic) நரம்பு மண்டலம் நம் மனதை அமைதியடைய செய்கிறது. இந்த மனநிலைகளில் ஏற்படும் மாற்றங்களே நம்முடைய இதய துடிப்பின் ஏற்படும் மாற்றங்கள்.
ஆனால், தொடர்ந்து காணப்படும் மன அழுத்தம், தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவு, ஆதரவு இல்லாத உறவுகள், தனிமை மற்றும் உடற்பயிற்சியின்மை போன்றவற்றால், இந்த சமநிலை பாதிக்கப்பட்டு உங்களின் எதிர்த்தல் அல்லது தப்பித்தல் நிலையிலிருந்து அதிகபட்ச பாதிப்புக்கு உள்ளாகலாம்.
நம் எல்லோருக்கும் நன்றாக தெரியும் நமது இதய நலம் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறது என்பது. குறிப்பாக தொடர்ந்து அல்லது அடிக்கடி எழும் தீவிர மன அழுத்த பிரச்சினைகள் இதன் காரணம். கொரோனாவால் இப்போது நாம் அதனை அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். தானியக்க நரம்பு மண்டல இயக்கம், வெளியே ஏற்படும் அழுத்தம் உள்ளே இதயநலம் பாதிக்கப்படுவதற்கான முக்கிய வழியாகும்.
இதில் நல்ல செய்தி என்னவென்றால் இதை நம்மால் மாற்றவும் முடியும். அதாவது நம்முடைய தானியக்க நரம்பு மண்டலத்தை, நமது இணை பரிவு (Parasympathetic) நரம்பு மண்டலத்தை தூண்டுவதன் மூலம் நம்மால் மீண்டும் சரி செய்ய முடியும். இதனால் இதயத்துடிப்பு சரிசெய்யப் பட்டு உயருகிறது.இது நமது இதயநலத்திற்கு நன்மை செய்கிறது.நமது இணை பரிவு (Parasympathetic) நரம்பு மண்டலத்தை உடலினுள் ஊடுருவாமலே தூண்ட பல வழிகள் உள்ளன.
அதிக அதிர்வெண் கொண்ட இதயத்துடிப்பே இணை பரிவு (Parasympathetic) நரம்பு மண்டலத்தின் நல்ல செயல்பாட்டிற்கு துல்லியமான அளவீடாகும். (நம்முடைய தானியக்க நரம்பு மண்டலம் (ANS) எவ்வளவு ஆரோக்கியமாகவும், சமநிலையிலும் இருக்கிறது என்பதைக் காட்டும்)
இணை பரிவு (Parasympathetic) நரம்பு மண்டலத்தை தூண்டுவதன் மூலம் உடலின் மற்ற பாகங்களும் நன்மை அடைகின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும், பொதுவான அழற்சி குறைதல், அதிகரிக்கும் செரிமானம், அதிக ஆறுதல் அதன்மூலம் அதிகரிக்கும் சமூக செயல்பாடுகள், பலரோடும் கூடியிருப்பதில் மகிழ்ச்சி ஆகியவை அவற்றுள் சில. உங்களின் உடல் மற்றும் மன நலத்திற்கான , இணை பரிவு (Parasympathetic) நரம்பு மண்டலத்தை தூண்டும் பயிற்சிகள் குறித்த வீடியோக்களை துணை உங்களுக்கு அளிக்கும்.