இந்தியாவில் நான்கில் ஒரு குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இது பெரும்பாலும் நம்பிக்கைக்குரிய நபரால் தான் நிகழ்த்தப்படுகிறது. இந்த கொடுமையான அனுபவம் வளரும் குழந்தையின் மூளை மற்றும் மனதில் அதன் தழும்பை விட்டுச்செல்கிறது.
ஆதரவான சிகிச்சை மற்றும் ஆரோக்கியமான சூழல் இல்லாமல் போனால், பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் ஆனதும் வாழ்க்கையில் பல துன்பங்களுக்கு ஆளாக வழிவகுக்கிறது. இது ஒரு முழுமையான அதிர்ச்சிக்கு பிந்தைய மனசோர்வு கோளாறுக்கு ( PTSD ) வழிவகுக்கும். மன அழுத்தத்தை உருவாக்கும்.
சிறுவயது துன்புறுத்தல் அல்லது பாலியல் வன்முறை என்ன வகையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள இந்த இணைய தளத்திலுள்ள காணொளிகளை பார்க்கவும். அதிர்ச்சியிலிருந்து மீள இந்த விழிப்புணர்வு ஒரு அடித்தளம்.