சமீபத்திய அறிவியல், சிறு வயது கொடுமைகளுக்கும் பின்னால் ஏற்படும் பல வித மன கோளாறுகளுக்கும் உள்ள நேரடி உறவை எடுத்து காட்டியுள்ளது. இளந்தளிர் வயதில், குழந்தையின் மூளை வளரும் போது, இந்த கொடுமைகள் எவ்வாறு மூளையின் வளர்ச்சியை பாதிக்கிறது என்று நமக்கு புரிய வைக்கிறது.
இந்த மூளை வளர்ச்சி குறைபாடுகள், சிறு வயது, பருவ வயது மற்றும் வாலிப வயதில் பல பாதிப்புகளை உண்டாக்கும். கொடுமைக்கு உள்ளானவரின் கோபம், களங்க உணர்வு மற்றும் நம்பிக்கை இல்லா விரக்தி - இவை உள்பக்கம் சென்று
தீவிர மன அழுத்தம்
தற்கொலை உணர்ச்சி,
மன உளைச்சல் மற்றும்
பேரதிர்ச்சியின் பின்விளைவுகள் (பி டி எஸ் டி)
போன்ற விளைவுகளில் முடிகின்றன.இல்லை வெளி பக்கம் சென்று,
சட்டென்ற கோபம், மனத்தாங்குதல், தாக்கி பேசுதல்
உணர்வால் உந்திய நடவடிக்கை (அதிகம் செலவழிப்பு, அவசர முடிவுகள்)
சிறிய குற்றங்கள்
போதைபொருள் அல்லது மாத்திரைகளை அதிகம் பயன்படுத்தல்
என்று வெளிப்படும்.குழந்தை கால கொடுமைகள், பிற்காலத்தில் கீழ்வரும் மனநோய்களாக வெளிப்படுகின்றன.
உடல் சார்ந்த கோளாறுகள்: எபிலெப்ஸி போன்ற வலிப்புகள், தலை வலிகள், ஸ்ட்ரெஸ் மூலம் தொடங்கும் உபாதைகள்.
பேரதிர்ச்சியின் பின்விளைவு கோளாறுகள் (பி டி எஸ் டி ) சேர்ந்த ஆளுமை (பெர்சனாலிட்டி) நோய்கள்: இவை சுய தன்மையை பாதிக்கும். மற்றவர்களை நம்ப இயலாதது, விஷயங்களை கருப்பு வெள்ளை ஆக பார்ப்பது, ஒரு விஷயத்தால் அளவுக்கு அதிகமாக பாதிப்படைவது, உணர்ச்சிகரமாக முடிவுகள் எடுப்பது, தானே தமக்கு தீங்கு செய்வது போல அடையாளங்கள் இதற்கு.
தற்காலத்தில் இருந்து விலகும் கோளாறு: இது நினைவு சம்பந்த பட்ட கோளாறு. மனமானது நிகழ் காலத்திலிருந்து விலகி , தான் என்ன சூழ்நிலையில் இருக்கிறோம், என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் போகும். சில பேருக்கு பழைய சம்பவங்கள் முழுதும் மறந்து போகும்.
சிகிச்சை இயலாத மன அழுத்தம்: தீவிரமான மன அழுத்தத்திற்கு உட்பட்டு, சமூகத்தினால் புறக்கணிக்கபட்டு, வெளி வர இயலாது தவிப்பவர்கள்.
கவன குறைபாடு நோய்முறைகள் (ADHD) : படிப்பில் அல்லது எடுத்த செயலில் கவனம் குறைந்து, முடிக்காமல் போவது.
சிறு வயது கொடுமைகள், மூளைக்குள் இருக்கும் ஹார்மோன்கள், நரம்பியல் கடத்திகள் போன்றவற்றை வழிமாற்றி, சீர்குலைக்கிறது. இதனால் மூளையின் அமைப்பும், செயல் முறையும் பாதிப்படைகின்றன. இந்த பாதிப்புகள் எல்லாம், கொடுமை எதிர் கொண்டவருக்கு நல்ல நட்புகளையும், உறவுகளையும் நன்கு பராமரிக்க முடியாமல் செய்கின்றன.
அடுத்த கட்டுரையில், மூளையின் எந்தெந்த பாகங்கள்,எந்தெந்த விதமான எதிர்மறை விளைவுகளை கொடுக்கிறது என்று பார்க்கலாம்.