சிறார் சீரழிவு பற்றிய தவறான புரிதல்கள்.
1. சிறுவர் துன்புறுத்தல் என்பது எப்போதோ ஒரு முறை நடப்பது.
உண்மை: எல்லாவிதமான சிறுவர் துன்புறுத்தல்களும் மற்றும் புறக்கணித்தல் நிகழ்வுகளும் இந்தியா முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த இரண்டுமே மற்றவர்களால் ஏன், யாராலுமே சுலபமாக கண்டுபிடிக்கப் படுவதில்லை. ஏனெனில் இவை தனிமையில் ரகசியமாக நடைபெறுகிறது. சிறுவர்களும் இதனை வெளியில் சொல்ல மிகவும் கஷ்டப்படுவார்கள். மேலும் அவர்களை நம்புபவர்கள் மிக மிகக் குறைவு. அதிக அளவில் பார்த்தால் இந்தக் குற்றத்தை உறுதி செய்ய தடயங்களும் சாட்சிகளும் மிக மிக குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன.
2. வன்முறையாக இருந்தால்தான் அது துன்புறுத்தல் ஆகும்.
உண்மை: சிறுவர் துன்புறுத்தல் என்பது வன்முறையோ அல்லது கோபத்தையோ கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு துன்புறுத்தல் என்பது பெரியவர்கள் தங்களுடைய பலத்தை சிறுவர்கள் மீது பிரயோகிப்பது, சிறுவர்களை ஒரு பொருளாக மட்டுமே கருதுவது மற்றும் அவர்களது உரிமையை மதிக்காமல் இருப்பது.
3. கவன ஈர்ப்பு மற்றும் பரிதாப உணர்வு ஏற்படுத்துவதற்காக சிறுவர் துன்புறுத்தலை பற்றிய தவறான கருத்துகள் சொல்லப்படுகிறது.
உண்மை: இதுவரை வெளிவந்த தரவுகள் காவல்துறை மற்றும் நீதித்துறையின் புள்ளி விவரங்கள் படி, ஒருவர் எந்த வயதில் இருந்தாலும் அவர்கள் நேரடியாக துன்புறுத்தலில் ஈடுபடாத வரையில் அவர்கள் நான் துன்புறுத்தப் பட்டேன் என்று சொல்வது அபூர்வமான ஒன்று. மாறாக, "தவறாக தரப்படும் எதிர்மறை கருது " என்பதே பொதுவாக காணப்படுகிறது. உதாரணமாக, பெரும்பாலானவர்கள், தாங்கள் சிறுவயதில் துன்புறுத்தலை அனுபவித்திருந்தாலும், இல்லை என்றே சொல்லுவார்கள்.
4. சிறுவர்கள் பொதுவாகவே தாங்கள் துன்புறுத்தப்பட்டதைப்பற்றி யாரிடமாவது சொல்வார்கள்.
உண்மை: பெரும்பாலான சிறார்கள் யாரிடமும் சொல்வதில்லை இவர்கள் அதிகமாக பயத்தினால் ஊமையாக்கப்படுவார்கள் அல்லது அவர்களை நம்பாமல் போவதும் நிகழலாம். சில குழந்தைகளுக்கு குறிப்பாக அவர்களிடம் ஏற்படும் மாற்றம் பற்றி வெளியில் சொல்ல சரியான வார்த்தைகள் கிடைப்பதில்லை.
5. சிறுவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட தவறான அனுபவத்தை காலப்போக்கில் மறந்து விடுகிறார்கள்.
உண்மை: பெரியவர்கள் மிகப்பெரிய அளவில் தங்கள் சிறுவயதில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் மற்றும் துன்புறுத்தல்களை ஆழமாக தங்கள் நினைவில் கொண்டு அதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதிலிருந்து சுலபமாக மீண்டுவர இயலாது. அக்கறையும், ஆதரவும் இந்த துன்புறுத்தல் ஏற்படுத்திய மன அழுத்தத்தில் இருந்து வெளி வருவதற்கு தேவை. அதுபோல் கிடைக்கும் போது அதிலிருந்து தேறி, வாழ்க்கையை முழுமையாக ஆரோக்கியமாக வாழ்ந்திடவும் செய்வார்கள்.
6. குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்ககளும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களே.
உண்மை: சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தப் அவர்கள் மனநலம் குன்றியவர்கள் அல்ல. பெரும்பாலும் இவர்கள் திருமணமான அல்லது ஒரு பாலியல் ரீதியான தொடர்பில் இருக்கும் பெரியவர்களே. சமீபத்தில் எடுக்கப்பட்ட பெயரிடப்பட்ட ஆய்வு ஒன்றை தெளிவாக குறிப்பிடுகிறது, சமூகத்தில் மிகக் குறைந்த அளவு ஆண்கள் சிறுவரிடம் பாலியல் உறவு கொள்வதைப் பற்றி ஆர்வம் தெரிவித்திருந்தனர்.
7. சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் பெரியவர்கள் அவர்களே சிறுவயதில் துன்புறுத்தப்பட்டு இருப்பார்கள்.
உண்மை. சிறார்களில் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் பெண் குழந்தைகளே. ஆனால் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலில் ஈடு படுவோர்கள் ஆண்கள்தான் . சில ஆய்வுகள் கண்டுபிடித்து சொல்லியிருப்பது என்னவெனில், மற்ற ஆண்களைவிட பாலியல்துன்புறுத்தலில் ஈடுபடும் ஆண்களுக்கு அவர்கள் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வரலாறு இருக்கும். இருந்தாலும் சிறுவர்களை துன்புறுத்தும் பெருவாரியான ஆண்கள், அவர்கள் குழந்தைப்பருவத்தில் பாலியல்துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக சொல்வதில்லை.
8. குழந்தைப் பருவத்தில் நடந்த துன்புறுத்தலை அவர்கள் மறப்பதில்லை.
உண்மை: குழந்தை பருவ நினைவுகள் பிளாஷ்பேக் மூலமாகவோ, பயங்கர கனவுகளாகவோ, குறுக்கிடும் எண்ணங்களாகவோ வெளிப்படலாம். இந்த ஞாபகங்கள் "திரும்பப் பெறப்பட்ட ஞாபகங்கள்" என்று சிலசமயம் அழைக்கப்படும்.
9.சிறுவர்கள் அதிக யோசனை செய்பவர்கள். மேலும் துன்புறுத்தல் பற்றி அவர்களால் யோசித்து செயல்பட முடியும்.
உண்மை: பெரியவர்களை விட சிறுவர்கள் அதிகம் யோசித்து பரிந்துரை செய்பவர்கள். அவர்களால் மிகச்சுலபமாக உண்மையையும் கற்பனையையும் பிரித்து அறிய முடியும். ஆராய்ச்சிகள் தெரிவிப்பது என்னவெனில் அவர்களை குறிப்பிட்ட அளவில் கேள்விகள் கேட்கும்போது தவறான தகவல்களை தந்திட அவர்கள் அதிக அளவு தயக்கம் காட்டுகிறார்கள் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.