“உங்களால் சிறுவயது மன அதிர்வில் இருந்து மீண்டு வர முடியுமா? அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்?”.
நல்ல வாழ்வு வாழ முடியும்!
சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலின் அதிர்ச்சியை அனுபவித்தவர்கள் நிச்சயமாக ஒரு முழுமையான ஆக்கப்பூர்வமான வாழ்க்கையை வாழ முடியும். பலர் செழித்து வளர்கிறார்கள். இதன் மூலம் வாழ்க்கை மற்றும் வேலையில் திருப்தி, மற்றும் உறவுகளில் உண்மையான அன்பு மற்றும் நம்பிக்கை - இவை அனைத்தும் இவர்களுக்கு கிடைக்கின்றன.
உறவுகள் முக்கியம்!
நல்ல உறவுகளும் அதன் ஆதரவும், அனுபவங்களும் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முக்கிய உதவி செய்கின்றன. அதேநேரம் பொதுவான நல்வாழ்க்கைக்கும் இவை துணை செய்கின்றன.
விளைவுகளை புரிந்து செயல்படுவது உதவும்!
மன ஆறுதலுக்கு முக்கியமானது, முன்னர் ஏற்பட்ட அதிர்வுக்கும் தற்போதைய நடத்தைக்கும் இடையிலுள்ள பிணைப்பை புரிந்து கொள்வது தான். இந்த அதிர்வு மக்கள் மனங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை தான். இருந்தாலும், மக்கள் நிச்சயமாக மீண்டு வாழ்வதற்கான திறமைகளை எப்படியாவது வளர்த்துக் கொள்கிறார்கள்.
சில நேரங்களில் சிலர் ஏதோ வாழ்கிறோம் என்று நினைத்தாலும், தம் வாழ்க்கையை நகர்த்திச் சென்று கொண்டிருக்கிறார்கள். அடிப்படை தேவைகளை அவர்களால் பூர்த்தி செய்து கொள்ள முடிவதே ஒரு சாதனைதான். இதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறு மக்கள் பல்வேறு விதமான நிலைகளில் இருப்பார்கள். சிலருக்கு அன்றாட வாழ்க்கையே போராட்டமாக இருக்கின்றது. வேறு சிலரோ தங்களுக்கு நடந்த அதிர்ச்சியை தங்களின் நிகழ்கால வாழ்க்கையுடன் இணைக்க கற்றுக்கொள்கின்றனர். இதன் மூலம், நிகழ்காலத்தில் முழுமையாக வாழ ஒரு வழி கிடைக்கிறது.
பாராட்டத்தக்க மனவலிமை!
தப்பி வாழ்பவர்கள் நிறைய பேர் பெரிய அளவில் மன வலிமையை வெளிப்படுத்துவார்கள். அவர்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, அவர்களுடைய கூர்மையான மதிநுட்பத்தை உபயோகப்படுத்துவார்கள். வித்தியாசமான வழிகளில் சுதந்திரமாக தங்களை வெளிப்படுத்திக் கொள்ளுகின்றனர். தான் பட்ட காயத்தை அவர்கள் மற்றவர்களுக்கு தருவதில்லை என்று முடிவு செய்கிறார்கள்.
மூளையின் நெகிழ்வுத்தன்மை நம் பக்கம்!
நரம்பியல் மருத்துவத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள் மூளையின் நெகிழ்வுத்தன்மை பற்றி நமக்கு சொல்கின்றன. மூளை, தானே சரி செய்து கொண்டு ஆறுதல் பெறும் தன்மை உடையது. துணை வலைத்தளத்தில் உள்ள பயிற்சிகள் இந்த சுய இயல்பை செயல்படுத்துகின்றன. இதற்கான அறிவியல் அடிப்படை நமக்கு நம்பிக்கையை தந்து, ஆறுதல் சீக்கிரமாக கிடைக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது.
பாலியல் கொடுமையிலிருந்து தப்பி வாழ்பவர்கள் எப்போதும் அதிக அளவில் மீளும் திறனை வெளிப்படுத்துவார்கள். இந்த திறன் வாழ்க்கையின் அழுத்தங்களை, ஏமாற்றங்களை, கஷ்டங்களை தாங்கி, அவற்றுக்கு பதில் நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும்.
தப்பிப் பிழைத்த சிலர், தங்களுடைய அதிர்வு நிகழ்ச்சியை மனதளவில் ஏற்றுக்கொண்டு அதனோடு வாழ்வதற்கு பழகிக் கொள்வார்கள். தெரபி மற்றும் உடல் சார்ந்த பயிற்சிகள் இந்த மீட்புக்கு உதவும். அறிவியல் ஆய்வுகள் இதை பலமுறை நிரூபித்துவிட்டன.
மீண்டவரின் மனவளர்ச்சி ஒரு பரிசு!
மீட்புக்கு பிறகும் வளர்ச்சியை எட்ட முடியும் என்பதுதான் இதில் முக்கிய விஷயம். இந்த அதிர்ச்சிக்கு பின்னால் வரும் வளர்ச்சி ஒரு நேர்மறை மாற்றத்தை, அதன் பலனாக வழங்கும்.
பாதிக்கப்பட்டவர் அந்த அதிர்ச்சியின் பின்னர் மனதால் வளர்ச்சி அடையும் போது, அவர்களால் வாழ்க்கையை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு அதை பாராட்டவும் முடிகிறது. சவால்களை எதிர்கொள்ளும் திறன் உள் வலிமையையும், வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் (வில்சன், 2006). இந்த திறன், மீட்பின் பயணத்தில் உள்ளவரின் எதிர்வினைகள், உலக பார்வை மற்றும் துன்பங்களுக்கு பதிலளிக்கும். இதன் மூலம் சிறந்த உறவுகளை உருவாக்கிக்கொண்டு, தெளிவான எதிர்காலத்திற்காக மேலும் திட்டமிடவும் முடியும்.