உங்களுக்கான ஒரு “துணை ”

உங்களின் தன்னாறுதல் படுத்திக்கொள்ளும் பயணத்தில் நாங்கள் ஒரு நம்பிக்கையான வழித்துணை. 


"துணை" இணையதளம் சிறு வயது பாலியல் துன்புறுத்தல், வன்முறை, மன அழுத்தம் / கவலை ஆகியவற்றிலிருந்து மீண்டு வருவதற்கு உதவும் அனைத்து தகவல்களையும் உங்களுக்குத் தருகிறது. இங்கு தமிழ் /ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தகவல்களைப் பெறலாம். நீங்கள் அனுபவிக்கும் மன உணர்வுகள் மற்றும் உங்களின் மனநிலை பற்றியும் முழுவதுமாகத் தெரிந்து கொள்ள உதவும். 


இந்த இணையதளம் அனைத்து விதமான சிகிச்சைகள் மற்றும் மனநல மருத்துவம் சார்ந்த விரங்களையும்  ஒருங்கே உங்கள் பார்வைக்காகத் தருகிறது. நீங்களே பயிற்சி செய்யக்கூடிய திறன்களைப் பற்றியும் விளக்குகிறது. 


இந்தப் போராட்டத்தில் நீங்கள் தனியாக இல்லை, புது வாழ்க்கை வாழ்வது சாத்தியம் என்று நம்பிக்கை கொடுப்பதே எங்கள் குறிக்கோள்!மீட்பு சாத்தியமே..

நிபுணர் சொல்வது
சமீபத்திய நரம்பியல் அறிவியல் , தன்னாறுதல் எவ்வாறு சாத்தியம் என்பதை விளக்குகிறது. நரம்பியல் அறிவியலின் முன்னேற்றங்கள் அதிர்ச்சி மற்றும் மனச்சோர்வுக்கான சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. உலகெங்கிலும் உள்ள முன்னணி வல்லுநர்கள் அதிர்ச்சியிலிருந்து தன்னாறுதல் பெறுவதில் உங்கள் உள்ளார்ந்த திறன் மற்றும் மனம் - உடல் சிகிச்சைகள் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை பற்றியும் கூறுவதை கேளுங்கள்.
<

துணை ஒரு அறிமுகம்

இந்த இணையதளம் உங்களுக்கு வழங்குவது

அதிர்ச்சியிலிருந்து மீள விரும்புகிறேன்

Know More

மீட்பு பயணத்தில் உதவ விரும்புகிறேன்

Know More

இந்த வாரம்

உங்கள் நலத்திற்கான ஒரு சுவாசப்பயிற்சி

வலைப்பதிவுகள்