"கை விடுவதற்கும் விட்டுப் பிடிப்பதற்கும் இடையேயான முக்கிய வேறுபாடு ஒன்று இருக்கிறது." ஜெஸ்ஸிகா ஹேச்சிகன்.
இந்த பொன்மொழி மிகவும் பிடித்தமான ஒன்று. ஏன் என்றால் இது ஒரு துல்லியமான,தே நேரம் மிக மெல்லிய வித்தியாசத்தை எடுத்துக் காண்பிக்கிறது. அதன் மூலம் நமக்கு ஓர் அனுபவமே மாறக்கூடும்.
உதாரணமாக உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவர் உங்களுக்கு உதவி செய்வதற்கான அக்கறையை காண்பிக்காமல் இருக்கலாம். மனநிலை பிரச்சினைகளால் போராடிக்கொண்டிருக்கும் உங்கள் அம்மாவை ஆதரவாய் பார்த்து அவருக்கு சிகிச்சை அளித்திட உங்களுக்கு ஒரு உதவி தேவைப்படலாம். அந்த நேரத்தில் உங்களுடைய உடன் பிறந்தவர் தனது சிறு சிறு உதவிகள் மூலம் உங்களுக்கோ அம்மாவுக்கோ உதவ வராமல் இருக்கலாம்.
இந்தக் குடும்ப உறுப்பினரை நீங்கள் கைவிடலாம். "என்னால் எந்த ஒரு உதவியும் பெற முடியவில்லை உதவி கேட்க இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் இதை கை விடுகிறேன்"என்று நீங்கள் விரக்தியில் கை தூக்கி விடலாம். ஆனால் அதை நீங்கள் விட்டு பிடித்தீர்கள் என்றால் உங்களுக்கு நீங்கள் சொல்லிக் கொள்ள வேண்டியது"நான் விட்டு பிடிக்கிறேன். இந்த குடும்ப உறுப்பினர் எனக்கு உதவி செய்வார் என்று நினைக்கிறேன், ஏன் அவரால் செய்ய முடியவில்லை என்று எனக்கு புரியவில்லை? ஆனால் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். அவர்களின் இந்த செய்கையை நான் விட்டு விடுகிறேன். அவருக்கு பதிலாக எனக்கு வேறொரு இடத்திலிருந்து உதவி கிடைக்கும் என்று நம்புகிறேன்".
இங்கே வித்தியாசம் என்னவென்றால் நமக்கு நாமே வழங்கிக் கொள்ளும் அந்த வாய்ப்பு, "அந்த குடும்ப நண்பரை நான் கைவிடும் போது நான் என்னையும் கை விடுகிறேன் எனக்கு வேறு விதமாக கிடைக்கும் உதவியையும் கை விடுகிறேன்.ஆனால் நான் விட்டு பிடிக்கும்போது எனக்கு வேறிடத்திலிருந்து இந்த உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது அதேபோல் கிடைக்கவும் செய்கிறது.
மேலும் வித்தியாசம் என்னவென்றால் நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை களை நாம் புரிந்து கொள்வதற்கு இது உதவுகிறது. நீங்கள் ஒருவருக்கு ஆதரவாய் இருப்பதை பற்றி யோசித்துப் பாருங்கள். நீங்கள் கைகளை மேலே தூக்கி விட்டு இந்த ஆதரவு தரும் விஷயம் என் வாழ்க்கையை அழிக்கிறது என்னால் யாருக்கும் உதவி செய்ய முடியாது நான் கை விடுகிறேன், என்று சொல்லும்போது இங்கே ஒரு நல்ல நாளினை உருவாக்கிக்கொள்ள கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் கை விடுகிறீர்கள் என்பது பொருள்.
அதற்கு பதிலாக"நான் இந்த உதவி செய்து அக்கறை செலுத்துவதில் சிரமப்படுகிறேன் நான் இதனை விட்டு பிடிக்கப் போகிறேன் என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி யோசிப்பேன் அதை விடுத்து இப்படி இல்லையே என்று ஏங்க மாட்டேன்"நீங்கள் சிறந்ததை கொடுப்பேன் என்று இருப்பதை ஏற்றுக் கொண்டு உங்கள் முயற்சியை முழுவதுமாக அதில் செலுத்தும்போது அதன் விளைவுகள் இந்த பிரபஞ்சத்தின் கையில் ஒப்படைக்கப் படுகின்றன பிரபஞ்சம் உங்களுக்கு எது தேவையோ அதனையே வழங்குகிறது.
பகவத்கீதையில் இது குறித்து ஒரு கருத்து இருக்கிறது. " ஒரு செயலைச் செய்திட உங்களுக்கு உரிமை இருக்கிறது ஆனால் அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட விளைவுதான் வர வேண்டும் என்று எதிர்பார்க்கும் உரிமை உங்களுக்கு இல்லை, அதே நேரத்தில் உங்களுடைய செயலையும் தவிர்த்தல் கூடாது. " சுருக்கமாக கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே.
ஒரு விஷயத்தை நாம் கைவிடும் போது நாம் நாம் அதிக அளவில் கட்டுப்படுத்த முயற்சி செய்து அந்த சூழ்நிலை நம் கையை விட்டு கட்டுப்படுத்த முடியாமல் செல்லும். அதேநேரம் நாம் விட்டு பிடிக்கும் போது நாம் அங்கே நம்பிக்கையை நோக்கி நகர்கிறோம் கட்டுப்பாடு செய்வதில் இருந்து விளக்குகிறோம்.
நாம் வாழ்க்கை மேலோ, அல்லது பிரபஞ்சத்தின் மேலோ அல்லது கடவுளின் மேலோ நம்பிக்கை வைக்கும் போது நாம் வாய்ப்புகளுக்கும், தீர்வுகளுக்கும் இடம் அளிக்கிறோம். கைவிடும் போது நாம் கோபத்தின் பிடியில் மாட்டிக் கொள்கிறோம். அதை விட்டு விடும் போது மன அமைதியோடு முன்னேறிச் செல்கிறோம்.
ஆகவே நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம், எப்போதாவது கைவிட்டு இருக்கிறீர்களா? அது உங்களுக்கு எவ்வாறு இருந்தது? விட்டு பிடித்து இருக்கிறீர்களா? அதன் விளைவு என்ன? உங்களுடைய அனுபவங்களையும் அது சம்பந்தப்பட்ட கதைகளையும் கீழே பதிவிடுங்கள்.