பச்சிளம் குழந்தைகள் புது அனுபவங்களாலும் வேறு சூழ்நிலைகளாலும் எளிதாக பாதிக்கப்படுகிறது. குழந்தையின் மூளை வளர்ச்சி மிக வேகமாக உள்ள நிலையில் அதை ஏற்கும் தன்மை அக்குழந்தைக்கு இருப்பதில்லை.
மனஅழுத்தம், வறுமை, குடும்ப வன்கொடுமை, திருமண வாழக்கையில் முரண்பாடு போன்ற காரணங்களால் இளங்குழந்தைக்கு பெற்றோர்களின் கவனம் முழுமையாக கிடைக்காமல் போகும்போது குழந்தையின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் மூளை வளர்ச்சியும் மனநல வளமும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக வளர்ந்த பின் கற்றலில் சிரமம், தவறான நடத்தை, மற்றவர்களுடன் பழகுவதில் பிரச்னை, சில சமயம் மனநலமும் பாதிக்கப்படக்கூடும்.
குழந்தை வேதனையில் உள்ளதற்கான சில எடுத்துக்காட்டுகள்:
- ஆறுதல் கூறினாலும் வருத்தத்துடன் இருப்பது, அல்லது நீண்ட நேரம் வருத்தமாகவே இருப்பது.
- சரியாக உண்ணவோ உறங்கவோ மாட்டார்கள்.
- பெற்றோரிடமும் பாதுகாவலர்களிடமும் கண்ணோக்கி பேசுவதை தவிர்ப்பது.
- அதிக கோபப்படுதல்.
- ஆக்ரோஷமாக இருத்தல் (எ.கா. அடித்தல், கிள்ளுதல். கடித்தல்)
- கோபம், வெறுப்பு, தலையை முட்டிக்கொள்ளுதல்.
- பிரிவினால் கவலை அல்லது பெற்றோரிடம் இருந்து விலகி இருத்தல்.
குழந்தையின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காரணங்களும் அதன் நன்மைகளும்
காரணங்கள்:
- பொறுப்பான பாதுகாவலருடன் அன்பான பிணைப்பு
- நேர்மறை அனுபவங்களை அளிக்கும் உறவுகள்
- குழந்தையின் வளர்ச்சிக்கு தக்கவாறு மறுமொழி கூறி உறவை வலுப்படுத்தும் பாதுகாவலர்கள்
- வளர்ச்சிக்கு தகுந்த சீரான ஆதரவு அளித்தல்
பயன்கள்:
- ஆழ்ந்த நிறைவான உறவுகளை வளர்க்கும்
- உணர்ச்சிகளை சமநிலையில் வைத்துக்கொள்வது
- தன்னம்பிக்கையுடன் இருப்பது
- மற்றவர்களுடன் நேரம் செலவிடுவதை விரும்புவது
- தோல்வி மற்றும் இழப்புகளில் இருந்து மீண்டு வருவது
- தன் உணர்வை மற்றவர்களுடன் பகிர்ந்து தேவையெனில் உதவி கேட்பது
- மற்றவர்களிடம் அனுதாபத்துடன் இருப்பது
நாம் என்ன செய்ய முடியும்?
குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களில் எப்பொழுதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் அணைத்து அரவணைத்து தேவைகளை பூர்த்தி செய்தால் வளர வளர அக்குழந்தை மிகவும் பாதுகாப்பாகவும் தைரியத்துடனும் இருக்கும்.
நன்கு ஆற்றல் வாய்ந்த பெற்றோரும் ஆதரவான குடும்பத்தினரும் சேர்ந்து குழந்தையின் பாதுகாப்பிற்கு தேவையான எல்லாவற்றையும் செய்து தர முயற்சிக்கின்றனர்.
ஒரு தாய் தன் குழந்தையின் தேவைகளை குறிப்பறிந்து பூர்த்தி செய்தால் அது இருவருக்குமே பயனளிக்கிறது. இது பிற்காலத்தில் குழந்தை மற்றவர்களுடன் ஆரோக்கியமான ஒரு உறவுமுறையை ஏற்படுத்தவும், தைரியமாக வளரவும் உணர்ச்சிகளை சமாளிக்கவும் அடித்தளமாக அமைகிறது. தன் குழந்தையுடனான பிணைப்பால் தாய் தன் நலத்தையும் பார்த்துக்கொள்ளமுடியும். மேலும் பவர்ஆப்அட்டச்மெண்ட் பற்றிய தகவலுக்கு இங்கே அழுத்தவும்