மரங்களும், விலங்குகளும் நிறைந்த ஒரு அழகிய பசுமையான காட்டில் ஒரு கரடி தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தது. அவைகள் உணவு கிடைத்தபோது உண்டும், நினைத்தபோது தூங்கியும், சிலசமயம் அழுதும், சிரித்தும் கிடைத்த ஒவ்வொரு நிமிடத்தையும் ஆனந்தமாக கழிந்தன. கரடி தன் குடும்பம் மற்றும் நண்பர்களோடு சந்தோஷமாக பொழுதை செலவிடும் போது, தாய் கரடி மட்டும் எப்பொழும் தன் குடும்பத்தை பற்றி நினைத்துக்கொண்டே இருந்தது.
அவை இருக்கும் இடத்தில் நிலவொளி மட்டுமே இருந்தது. அதனால் இரவில் தொலைவில் தெரியும் அனைத்துமே இருட்டாகவே இருந்தது. கூட இருந்த அனைவரும் அந்த நிலவொளியில் ஆனந்தமாக இருந்தாலும், அந்த தாய் கரடியால் மட்டும் திருப்தி அடைய முடியவில்லை. அது தன் குழந்தைகள் இன்னும் சிறிது வெளிச்சத்தை பார்க்கவேண்டும் என்று நினைத்தது. எப்படியாவது, தன் குழந்தைகளை அங்கு அழைத்து செல்ல வேண்டும் என நினைத்தது.
இந்த வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என கண்டு பிடித்திடவேண்டும் என நினைத்து ஒரு நாள் புறப்பட்டது. தன் குடும்பத்திடம் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துவிட்டு தன்னுடைய தேடுதல் பயணத்தை தொடங்க எண்ணியது.
தன்னுடைய வழிப்பயணத்திற்கு தேவையான சில உணவுப்பொருட்களை ஒரு கூடையில் வைத்துக்கொண்டு வெளிச்சைத்தேடி தன் பயணத்தை தொடங்கியது.
போகும்வழியில், ஒரு சுண்டெலியைக்கண்டது. சுண்டெலி அந்த கரடியிடம், " ஏ, கரடி அம்மா, நீங்கள் எங்கே போகிறீர்கள் ?" என்று கேட்டது. உடனே கரடி, " நான் அந்த நிலவொளி எங்கிருந்து வருகிறது என்று தேடிச்செல்கிறேன் " என்றது.
" அற்புதம், நீங்கள் இங்கு இருக்கும் கம்பளிப்பூச்சிகளைக் கேளுங்கள். அவைகளுக்கு இந்த நிலவொளியைப்பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும் " என்று கூறியது.
கம்பளிப்பூச்சிகள், " நன்றி எலியாரே. கரடி அம்மா, உயர்ந்து நிற்கும் இந்த மரங்களை நீங்கள் கேட்கலாம், அவற்றின் உயரத்தின் மூலம் அந்த ஒளி எங்கிருந்து வருகிறது என்பதை அது நிச்சயம் அறிந்திருக்கும்" என சொன்னது.
அம்மா கரடி ," இது நல்ல யோசனை!" என்று கூறிக்கொண்டே , உயரமான மரத்திடம் சென்று " ஏ, மரமே ... உன்னுடைய உயரத்தின் மூலம், இந்த ஒளி எங்கிருந்து வருகிறது என்று பார்த்துச் சொல்லமுடியுமா?" என்று அன்புடன் கேட்டது.
அதற்கு மரம், " ஒளியா!, ஆமாம், ஆமாம்... தொலைவில் நானும் பார்த்திருக்கிறேன், அந்த நிலவொளியில், நான் சில பறவைகள் பறந்து செல்வதை பார்த்திருக்கிறேன், நாம் அவற்றிடம் கேட்போம். அந்த பறவைகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்." என்று சொன்னது.
அம்மா கரடி, சுற்றி முற்றும் பார்த்தது. அங்கு ஒரு பறவை சென்று கொண்டிருந்தது. கரடி உடனே அதனிடம் உதவியைக்கட்டது. அந்த பறவை, "வடக்கு பக்கம் இருக்கும் மலைக்கு அருகிலிருந்துதான் இந்த வெளிச்சம் வருகிறது. என்னுடனேயே ..வா , ரொம்ப தொலைவில் இல்லை " என்று கூறியது.
பறவையுடனே சிறிது தூரம் நடந்தவுடன், மலையைக்கண்டது. ஆர்வத்துடன் மலையேறத்துவங்கியது. உச்சியை அடைந்தவுடன், அது தூரத்திலிருந்து பார்த்த ஒளியைக்கண்டவுடன், அதன் முகமும் பிரகாசமாக ஆனது. தான் எடுத்துச் சென்ற அந்த கூடையில் ஒளி அனைத்தையும், நிரப்பிக்கொண்டு மலையிலிருந்து இறங்கியது. வழியில் தனக்கு உதவி செய்த பறவை மற்றும் மரத்திற்கு தன்னுடைய நன்றியை சொன்னது. வீட்டிற்கு செல்லும் வழியில் நண்பன் சுண்டெலியின் பொன்றிக்கு பக்கத்தில் சிறிது ஒளியை வைத்துவிட்டுச் சென்றது.
அக்கம் பக்கம் எல்லாம் "பட்டு பூச்சியை காணோமே" என்று தேடியது, ஆனால் அவையெல்லாம் பட்டாம்பூச்சியாக மாறி கரடியின் கூடையில் உள்ள ஒளியை சுற்றி சுற்றி வந்தன.
ஒரு வழியாக கரடி அம்மா, வீட்டிற்கு திரும்பியது. தாய் கரடியை பார்த்ததும் அனைவருமே ஆனந்தம் கொண்டனர். ஆனால், கூடையில் இருந்த ஒளியின் அளவு மிகவும் குறைந்து இருந்தது.
ரொட்டிக் கூடையில் எனக்கு கொஞ்சம் வெளிச்சம் உள்ளது, ஆனால் நம்மை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும் பாதை முழுமையாக ஒளிரும். "குழந்தைகளே, என்னால் முடிந்ததை நான் பெற்றேன், ஆனால் நீங்கள் மலைக்குச் செல்லத் தயாராக இருக்கும்போது, இப்போது ஒளிரும் பாதையை நீங்கள் எளிதாகக் கண்டுபிடிக்கலாம்."
தாய் கரடி தன் குழந்தைகளை அணைத்துக்கொண்டு " குழந்தைகளே, இந்த கூடையில் கொஞ்சம் வெளிச்சமே உள்ளது, என்னால் முடிந்ததை கொண்டுவந்துள்ளேன். ஆனால், நீங்கள் அந்த வெளிச்சத்தை பெறவேண்டும் என எண்ணினால், நீங்கள் தாராளமாக போகலாம். நீங்கள் போகும் பாதை இப்போது வெளிச்சமாக இருக்கும்." என்று கூறியது.