கருவுற்ற காலம் தொடங்கி குழந்தை பிறந்த பின்னும் ஒரு தாய்க்கு பலவகையான மனநல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் தீவிரத்தை தாயும் மருத்துவ ஆலோசனை அளிப்போரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
தாயின் மனக்கவலை, பேறு காலத்தில் ஏற்படும் வேதனை, பேறு காலத்திற்கு பின் ஏற்படும் கவலைகள் மற்றும் மனநிலை கோளாறுகள் இவை அனைத்தும் வெவ்வேறு பெயர்களில் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
பேறு காலத்தில் ஏற்படும் துன்பங்கள் அல்லது மனநல ஆரோக்கியத்தின் சில வகைகள்
பேபி ப்ளூஸ்: குழந்தை பிறந்த முதல் சில வாரத்தில் தெளிவற்ற மனநிலை, அழுகை, கவலை ஆகியவை ஏற்படுவது இயல்பான ஒன்றே. பெரும்பாலும் சிகிச்சை இன்றி தானாக சரியாகிவிடும் தன்னையுடையது.
பேறுகாலத்திற்கு முன் ஏற்படும் மனஅழுத்தம்: ஒரு தாய் கருவுற்ற காலம் முதல் குழந்தை பிறந்த ஒரு வருட காலம் வரை ஏற்படும் மனஅழுத்தத்தை இது குறிக்கிறது. இதன் அறிகுறிகள் எப்பொழுதும் கவலையாக இருப்பது, சோர்வு, சரியாக உண்ணாமல் உறங்காமல் இருப்பது, குற்ற உணர்வு அல்லது எதற்கும் பயனற்ற சிந்தனை, தற்கொலை சிந்தனைகள், குழந்தையுடன் பிணைப்பில்லாமல் இருப்பது ஆகியவை ஆகும்.
பேறுகாலத்திற்கு பின் ஏற்படும் மன கவலை: பொதுவாக கவலை, பயம் பீதி மற்றும் ஓசிடி என்ற ஒருவித மனநோய் ஆகியவை பேறுகாலத்தில் ஏற்படும். நிறைய தாய்மார்களுக்கு அதீத கவலை, கலக்கம், தேவையற்ற சிந்தனைகள், இதய படபடப்பு ஆகியவை ஏற்படுகிறது.
பேறுகாலத்திற்கு பின் ஏற்படும் மனஉளைச்சல்(PTSD): சில தாய்மார்களுக்கு பிரசவத்தின் போது சிக்கல் ஏற்படலாம் அல்லது அறுவைசிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டி வரலாம். இதனால் அந்த தாய் அதிர்ச்சிக்கு உள்ளாகி மனஉளைச்சல் ஏற்பட வாய்ப்புண்டு. இதன் காரணமாக அவருக்கு நடந்த நிகழ்ச்சி மீண்டும் மீண்டும் மனக்கண் முன் தோன்றுவது, பயங்கர கனவு, பேறுகாலத்தில் ஏற்பட்ட சம்பவம் குறித்த அதீத கவலை ஆகிய அறிகுறிகள் அவரிடம் தென்படும்.
இவை அணைத்தும் எளிய சிகிச்சையின் மூலமும், உற்றார் உறவினரின் ஆதரவுடனும், சுய ஆரோக்கியத்தை மேற்கொள்ளவதாலும் சரிசெய்யமுடியும். சில சமயங்களில் மருந்துகளும் தேவைப்படலாம்.
கீழே குறிப்பிடப்படுபவை அனைத்தும் மருத்துவ ரீதியான பிரச்சனைகள். இவை அனைத்தும் ஏற்கனவே அந்த தாய்க்கு மனநல குறைபாடு இருந்தாலோ அல்லது அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தாலோ மீண்டும் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
பேறுகாலத்திற்கு பின் ஏற்படும் மன இறுக்கம்: இது ஒரு வகையான அரிதான மனநோய். இதன் அறிகுறிகள் மாயை, இல்லாதது இருப்பதை போல் உணர்தல், முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாறுதல் ஆகியவை ஆகும். இது மிகவும் தீவிரமான மனநோய் என்பதால் உடனடி மருத்துவ சிகிட்சை அளிக்க வேண்டும்.
கருவுற்ற காலத்தில் இருமுனையப் பிறழ்வு(Bipolar Disorder): இருமுனையப் பிறழ்வு உள்ள பெண்ணிற்கு கருவுற்ற காலத்திலும் பேறுகாலத்திற்கு பின்னும் அடிக்கடி மனநிலை மாற்றம் ஏற்படும். இந்த தாய்மார்கள் சரியான மருந்து உட்கொண்டு தொடர்ந்து மனநல மருத்துவர்களால் கண்காணிக்க படவேண்டும்.
கருவுற்ற காலத்தில் ஏற்படும் அப்செசிவ்-கம்பல்சிவ் கோளாறு: ஓசிடி என்பது மனதில் ஏற்படும் தேவையற்ற அச்சங்களால் நமது சிந்தனைகளை ஆழ்த்தும் ஒருவித மனநோய். இதனால் பாதிக்கப்படும் தாய் தன்குழந்தையின் பாதுகாப்பும் நலமும் பாதிப்பதாக எண்ணுவர். இதற்கு அதிக நேரம் ஒதுக்கி அவரை சரி செய்வது சிரமமான ஒன்றாகும்.
இதை பற்றி மேலும் விவரங்கள் அறிய போஸ்டபார்ட்டம் இன்டர்நேஷனல் என்னும் பதிவை பாருங்கள்