கருவுற்ற காலம் முதல் பேறுகாலத்திற்கு பின்னும் ஒரு தாய் மிகவும் பலவீனமாக இருப்பாள்; உடலியல் ரீதியாகவும், உடல் வடிவமும் மாறிக்கொண்டே இருக்கும். அவளின் அன்றாட வழக்கங்களும், வெளியில் செல்வதும் கருவுற்ற காலத்தில் வெகுவாக குறையும்.
பேறுகாலத்திற்கு பின் தன் உடல்நிலை தேறி இழந்த சக்தியை பெற்று குழந்தையை பராமரிப்பது என்பது ஒரு சவாலான விஷயமாக இருக்கும். அடிக்கடி பாலூட்டுவதால் அந்த தாய்க்கு போதிய தூக்கம் கிடைப்பதில்லை.
இந்த பலவீனமான தருணத்தில் தாய் மகிழ்ச்சியாக இருக்க முயலும்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு காரணங்களால் அவரது மனநிலை பாதிக்கப்படும் வாய்ப்புண்டு.
* முன்னமே மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் அல்லது குறிகிய காலத்திற்கு அவருக்கு மனா சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தாலோ, மரபியல் ரீதியாக மனநல குறைபாடு இருந்தாலோ.
* கருவுரும் முன்பு மனஅழுத்தம் நிறைத்த வாழ்க்கை.
* திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள், குடும்ப வன்முறை அல்லது கணவரின் மனநல பாதிப்பு.
* சமூகத்தின் அழுத்தங்கள் (குழந்தையின் பாலினம், நிறம் போன்றவை)
* குடும்பம், உற்றார் உறவினர் மற்றும் சமூகத்தின் ஆதரவு இல்லாமை அல்லது கருத்து வேறுபாடுகள்.
* ஊட்டச்சத்து குறைபாடு
* வறுமை
* சிறு வயதில் ஏற்பட்ட அதிர்ச்சி அல்லது பாலியல் வன்கொடுமை.
மேற்கூறிய காரணங்களில் ஒன்றிற்கும் மேற்பட்ட காரணங்கள் அவளின் கைகளில் இல்லை. எனவே அவளின் மனநிலை மற்றும் கவலைகளை குற்றமாக கூறும்போது அவள் இன்னும் மோசமான நிலையை அடையக்கூடும்.
ஒரு புரிதலுடன் தாயின் மீது அனுதாபமும் பரிவும் காட்டி அந்த தாயை மீண்டும் மகிழ்ச்சியாக இருக்க உதவுங்கள்.
மேலும் தகவலுக்கு இந்த லிங்கை அழுத்தவும்.