துணை நம் கலாச்சாரத்தை கருத்தில் கொண்டு ஒரு உள்ளடக்கத்தை உருவாக்கியுள்ளது.
கீழ்கண்ட கருவிகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் கிடைக்கும்.
1 . கையேடு
2 . கையேட்டு காணொளி.
3 . கற்பித்தல் காணொளிகள்: தாயின் தவறான மனநல ஆரோக்கியம் தாய் மற்றும் குழந்தையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து.
4 . சுய நலம் குறித்த காணொளிகள்.
5 . சுய நலம் பற்றிய இதழ்கள்.
6 . கோலம் / மண்டலா படங்கள்.
7 . கருவுற்ற காலத்தில் இனிமையான இசை
8 . நல்வாழ்விற்கான சோதனை(எங்களுக்கு ஒரு குறுந்செய்தி அனுப்புங்கள். எங்கள் ஊழியர் உங்களை தொடர்புக்கொண்டு இரகசிய மதிப்பீட்டை மேற்கொள்வார்.)
9 . நேரிலோ அல்லது இணையதள வாயிலாகவோ, விழிப்புணர்வு, பராமரிப்பு மற்றும் ஆதரவு அமர்வுகள் (அம்மா தயவுசெய்து அமைதியாக இருங்கள் ): துணையின் இந்த அமர்வுகளில் இருந்து தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தாய் சேய் நல்வாழ்வு குறித்து தெளிவுபெற்று, சோர்ந்த மனநிலை அல்லது மனஅழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகளை வெகுவாக குறைக்க முடியும். இந்த எளிதான தகவல் பரிமாற்றம் அமர்வுகளில் இருந்து எளிதான சுய பராமரிப்பு பழக்கங்களையும் குறிப்புகளையும் பெற முடியும்.
கருவுற்ற காலத்தில் நல்வாழ்விற்கான சர்வதேச மன்றம் (International forum for wellbeing for pregnancy) ஆங்கிலத்தில் கிடைத்த ஒரு அருமையான தளம்.
உங்களுக்கு நீங்களே ஆதரவாக இருக்க சில ஆலோசனைகள்
நீங்கள் சோர்வாக இருக்கும்போது உங்களிடம் அன்பாக இருப்பவரிடம் உங்களின் உணர்வை பகிர்ந்துகொள்ளுங்கள், உதவி கேட்க பழகிக்கொள்ளுதல், உங்களை நீங்களே பராமரிக்க கற்றுக்கொள்ளுதல், உங்களின் எதிர்பார்ப்பை குறைத்துக்கொண்டு மூச்சை கட்டுப்படுத்தி உங்களின் மனஅழுத்தத்தை குறைத்துக்கொள்ளுதல்- இவை அனைத்தும் உங்கள் மனநல ஆரோக்கியத்திற்கான எளிய வழிமுறைகள் ஆகும்.