உலகளவில் நாம் எதிர்கொண்ட தொற்று நோய், நம்மை வீட்டுச் சிறையில் வைத்தது. வெளி உலகத்திலிருந்து நாம் துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட இந்த தனிமை நம்மை சற்று உள்நோக்கி பார்க்கவைத்தது. பொருளாதார நெருக்கடி, மருத்துவ நெருக்கடி, உயிரிழப்பு எல்லாம் சகஜமானது. மற்றவர் கஷ்டங்களை புறக்கணிப்பதில் தவறில்லை என்ற எண்ணம் அதிகமானது.
பல ஆராய்ச்சிகள் கூறுவது, சகமனிதர்கள் கடுமையான நேரத்தை ஏதிர்கொள்ளும் போது, அவர்களிடமிருந்து விலகி இருத்தலும், அவர்களிடம் கருணையோடு இருப்பதை தவிர்ப்பதும் நம் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் என்கிறது. இது சமூகத்திற்கு நல்லது அல்ல. சமூகத்துடன் நாம் இணைந்து வாழ்வது மட்டுமே நம் நல்வாழ்விற்கும் மன ஆரோக்கியத்திற்கும் நல்லது.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பரிவு உணர்வு பயிற்சித் திட்டத்தின் ஆசிரியர் மற்றும் ஸ்தாபக உறுப்பினருமான லியா வெயிஸ், உலகில் பெரும் தோற்று ஏற்பட்டபோது,ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியவில்லை.மேலும், ஒருவருக்கொருவர் உதவ முடியாத நிலை ஏற்பட்டது. மக்கள் அனைவரும் தனிமை படுத்தப்பட்டனர். தனிமை படுத்தப்பட்டதால் ஏற்பட்ட பின்விளைவுகள் மற்றும் அவர்கள் எவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து ஆய்வு செய்தார்.
வெயிஸ் கூறுவது, நாம் பயம் மற்றும் கவலையுடன் இந்த பெரும் தொற்றை அணுகும் போது நாம், நம்மை இந்த சமூகத்திலிருந்து விலக்கிக்கொண்டு தனிமை படுத்திக்கொள்கிறோம். இதனால் மேலும் கவலை கொள்கிறோம். இது ஒரு எதிர்மறையான சுழற்சிக்குள் நம்மை இட்டுச்செல்கிறது. இந்த அனைத்து செயல்களும் நம் தாங்குதிறனை குறைத்து நம்மை மூழ்கடிக்கின்றன.
சமூகத்திலிருந்து விலகியிருத்தல் நம்மை எவ்வாறு பாதிக்கிறது?
கோயம்ப்ரா பல்கலை கழகத்தின் உளவியலாளர். மார்செலா மாடோஸ், பேர் கொண்ட குழுவுடன் இணைந்து சில ஆய்வுகளை செய்தார். நாடுகளின் அந்த ஆய்வு நடந்தது. அதன் நோக்கம் பெருந்தொற்று காலங்களில்,
மக்களின் "பரிவு உணர்வுடனான அணுகுமுறை" எவ்வாறு இருந்தது?
அது மக்களை எவ்வாறு பாதித்தது?
பலருக்கு மற்றவர்களிடம் கருணையுடன் இருப்பதைப் பற்றிய பயம் இருந்தது, சிலர் தான் மற்றவர்களிடம் இரக்கத்துடன் இருப்பது தன்னுடைய பலவீனத்தை வெளிப்படுத்திவிடுமோ என்று நினைத்தனர். மேலும் சிலர் தன்னைச் சுற்றி உள்ளவர்கள் தான் கருணையுடனும், இரக்கத்துடனும் இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்று நினைத்தார்கள். இதைப்போன்ற எண்ணங்களும், பய உணர்வும் மற்றவர்கள் சிரமப்படுவதை பார்த்து மனமிறங்க அனுமதிக்காது.
இதற்கு மாறாக, மற்றவர்களின் கடினமான காலங்களில் அவர்களிடம் இரக்கத்துடனும் , கருணையுடனும் இருந்தவர்கள் சமூகத்தில் நல்வாழ்வு வாழ்ந்தனர். அந்த சமயங்களில் நடத்தப்பட்ட பயிற்சிகள், அவர்களுக்கு கடினமான நேரத்தை எதிர்கொண்டவர்களிடம் அவர்கள் காட்டும் கருணை மற்றும் இரக்கம் போன்ற எண்ணங்களை ஊக்குவித்தது. மேலும், இந்த பயிற்சிகள் பாராசிம்பதடிக் நரம்பு மண்டலத்தை செயல் பட வைத்து நம் மனதை அமைதியாக்கி, மன அழுத்தத்திலிருந்து மீளவும் உதவுகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது.