ஏன் தியானம் செய்ய வேண்டும்?
தியானம் செய்வதனால் நீண்ட கால நன்மைகள் ஏற்படுகின்றன. சுருக்கமாக, தியானத்தினால் நாம் நம்முடன் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்திக் கொள்ள உதவுகிறது. மற்றவர்களுடனும் நம் உறவை மேம்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கிறது.
தியானம் செய்வதற்கு 5 காரணங்கள்:
உங்கள் வலிகளை புரிந்து கொள்ள
மன அழுத்தத்தை குறைக்க
சிறப்பாக மற்றவர்களுடன் இணைந்து கொள்ள
கவனத்தை மேம்படுத்தி கொள்ள
தேவையற்ற எண்ணங்களை குறைக்க
தியானம் செய்வது எப்படி?
உட்கார்ந்து கொள்ளவும்: நீங்கள் அமைதியாக ஓய்வுடன் உட்கார ஒரு இடத்தை தேடி உட்காரவும்
ஒரு நேர வரம்பை அமைக்கவும்: நீங்கள் தியானம் முதல் முறையாக செய்கிறீர்கள் என்றால், 5 அல்லது 10 நிமிடங்களுக்கு மட்டும் செய்யவும்
உங்கள் உடலை கவனிக்கவும்: நீங்கள் ஒரு நாற்காலியில் கால்களை தொங்க விட்டு கொண்டு உட்காரலாம் அல்லது தரையில் சம்மணமிட்டு உட்காரலாம் அல்லது மண்டியிட்டு கொண்டு பயிற்சியை செய்யலாம். உங்களுக்கு எந்த நிலை வசதியாக இருக்கிறதோ அதில் நிலையாக இருந்து கொள்ளவும்
உங்கள் சுவாசத்தை உணரவும்: உங்கள் சுவாசத்தின் உணர்வை மூச்சை உள்ளே இழுக்கும் போதும் வெளியேற்றும் போதும் பின்பற்றுங்கள்
உங்கள் மனம் எப்போது அலை பாய்கிறது என்பதை கவனிக்கவும்: இது தவிர்க்க முடியாதது. ஆனால் இதை எதிர்க்க தேவையில்லை. நீங்கள் இந்த நிலையை எதிர் கொண்டால் சுவாசத்தின் மேல் கவனத்தை திருப்புங்கள்
கனிவுடன் முடிக்கவும்: நீங்கள் எப்போது தயாரோ அப்போது கண்களை திறக்கவும். உங்களை சுற்றியிருக்கும் சப்தங்களை கவனியுங்கள். நீங்கள் இப்பொது மிகவும் சாந்தமாக உணருகிறீர்கள் என்பதை கவனிக்கவும். உங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கவனிக்கவும்
அவ்வளவு தான் இந்த பயிற்சி!
தியான வகைகள்:
நாம் மேலே கூறிய தியான வகை மூச்சு பயிற்சிகளை மட்டுமே முக்கியமாக கூறுகிறது. இது தவிர மற்ற உடல் உறுப்புகளுக்கு வேறு சில தியான பயிற்சிகள் உள்ளன.
உடலை நுட்பமாய் ஆராயும் தியானம்:
தலையிலிருந்து கால் வரை உணர்வுகளை சரிசெய்ய ஒரு சுருக்கமான உடல் விழிப்புணர்வு பயிற்சி. கால்களை ஆழமாக தரையில் பதிக்கவும். உடல் முழுவதையும் ஆராயவும். ஒரு பகுதியின் மேல் மட்டும் கவனத்தை வைக்கலாம் அல்லது கால் விரல்கள், பாதம், காலின் வழியாக, இடுப்பு, அடிவயிறு, கீழ் முதுகு, மேல் முதுகு, தோள்கள், கைகளின் வழியாக விரல்கள், கழுத்து, முகம் மற்றும் தலை – இப்படி வரிசையாக ஒவ்வொரு பகுதியிலும் கவனத்தை வைக்கலாம்.
இப்படி ஒவ்வொரு பகுதியின் மீது சிறிது நேரம் கவனத்தை செலுத்தி அங்கு ஏற்படும் உணர்ச்சிகளை கவனிக்கவும். வேறு எதுவும் செய்ய வேண்டாம். கவனம் வைத்தால் மட்டும் போதும்.
நடக்கும் தியானம்:
ஒவ்வொரு அடியிலும் நாம் என்ன உணர்கிறோம் என்பதைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுவருவதற்கான ஒரு கவனமுள்ள இயக்க நடைமுறை. இயற்கையான வேகத்தில் நடக்க வேண்டும். உங்கள் வயிற்றில், உங்கள் பின்புறம் அல்லது உங்கள் பக்கங்களில் கைகளை வைக்கவும். ஒவ்வொரு அடியிலும், உங்கள் கால்களைத் தூக்குவதற்கும் கீழே வைப்பதற்கும் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் கால்கள் மற்றும் உங்கள் உடலின் மற்ற பகுதிகளின் இயக்கத்தைக் கவனியுங்கள். உங்கள் உடல் பக்கத்திற்கு பக்கம் மாறுவதை கவனியுங்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், நீங்கள் 10 வரை படிகளை எண்ணலாம், பின்னர் மீண்டும் ஒன்றிலிருந்து தொடங்கலாம். நீங்கள் ஒரு சிறிய இடத்தில் இருந்தால், நீங்கள் பத்து வரை எண்ணிவிட்டு, சிறிது தாமதித்து, நோக்கத்துடன், திரும்பவும்.
அன்பான – கருணை தியானம்:
உங்களுக்கு நீங்களே கருணை காட்டுவதற்கும், மற்றவர்களிடம் மற்றும் உலகத்திடம் கருணை காட்டுவதற்கும்.
இந்த அன்பான கருணை தியான பயிற்சி மற்றவர்களுக்கும் தனக்கும் நன்மை அளிக்கக் கூடிய வாக்கியங்களை மௌனமாக திரும்ப திரும்ப மனதிற்குள் கூறிக் கொள்வதாகும். மனதிற்குள் நல்ல மனதுடன் நீங்கள் செய்த நல்ல காரியங்களை நினைக்க தொடங்குங்கள். நமக்காக நாம் மிகவும் ஆழமாக விரும்புவதை பிரதிபலிக்கும் வாக்கியங்களை அமைதியாக கூறிக் கொள்ளுங்கள்.
பாரம்பரிய கூற்றுகள்:
நான் பாதுகாப்பாக வாழ வேண்டும்
எனக்கு மன அமைதி கிடைக்கட்டும்
எனக்கு உடல் அமைதி கிடைக்கட்டும்
நான் சௌகரியமாக வாழ வேண்டும்
வாக்கியங்களை போதுமான இடைவெளியுடனும், மௌனத்துடனும் மீண்டும் மீண்டும் கூறிக் கொள்ளுங்கள், அதனால் அவை உங்களுக்குப் பிரியமான ஒரு தாளத்திற்குள் விழும். ஒரு நேரத்தில் ஒரு வாக்கியத்திற்கு உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.
சிறிது நேரம் கழித்து, உங்களிடம் கருணை காட்டியவர்கள் அல்லது அவர்களின் அன்பின் காரணமாக உங்களை ஊக்கப்படுத்தியவர்களைக் கொண்ட ஒரு வட்டத்தின் மையத்தில் உங்களைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் மையத்தில் நீங்கள் உங்களைப் பார்க்கும்போது, அவர்களின் அன்பையும் கவனத்தையும் பெறுபவராக உங்களை அனுபவிக்கவும். உங்களுக்கு நீங்களே அன்பான கருணை வாக்கியங்களை கூறிக் கொள்ளவும்.
இந்த பயிற்சியை முடிக்க, கற்பனையை கைவிட்டு, இந்த வாக்கியங்களை மெதுவாக கூறவும். அப்படி செய்யும் போது, நீங்கள் வலி, வேதனையிலிருந்து விடுபட்டு, கருணையால் முன்னோக்கி செல்கிறீர்கள்.