மனநல ஆரோக்கியம் (நல்வாழ்வின் அடிப்படை) என்பது கடினமான மற்றும் ஒருவரின் தனிப்பட்ட விஷயமாக உள்ளது.
கர்ப்பகாலம் தொடங்கி குழந்தை பராமரிப்பு வரை அணைத்து பெண்களுக்கும் (தந்தைக்கும்) ஒப்பிட்டு பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட அனுபவமாகவே உள்ளது.
கர்ப்பகாலத்தில் அதீத கவலை இருந்தால் அது பல்வேறு ஆபத்துகளையும் இன்ன பிற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். அதற்கு எளிமையான தீர்வு, மாத்திரைகள் ஆகியவை கிடைக்கும். அதற்கு உடல் மனது மற்றும் ஆதரவு ஆகிய அனைத்தும் கொண்ட ஒரு முழுமையான அணுகுமுறை வேண்டும்.
நாங்கள் உலக சுகாதார மையத்தின் ஆரோக்கிய சிந்தனை திட்டத்தின் அணுகுமுறையை பின்பற்றுகிறோம். நம் பாரம்பரிய கலாச்சார முறைப்படி (யோகா, மூச்சுப்பயிற்சி, பாட்டு, நடனம், கோலம்) விழிப்புணர்வு மற்றும் விவேகத்தை ஏற்படுத்துகிறோம். ஊட்டச்சத்து, உறக்கம் மற்றும் போதிய ஓய்வு ஆகியவை அடிப்படையாக இருந்தாலும் சில தாய்மார்களுக்கு அவை தேவையானபொழுது கிடைப்பதில்லை.
தனக்குத்தானே ஒரு நல்ல உறவை ஏற்படுத்தி தருவதே முதல் படியாகும். தன்குழந்தையுடன் ஒரு சிறந்த உறவை ஏற்படுத்திக்கொள்ளுதல் தனக்கும் தன் வாரிசுக்கும் முக்கியமானதாக அமைகிறது. அவளது கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவை பெறுவது மிக அவசியமானது. அவளது கணவரின் மனநிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
தாயின் மனநல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வே நம் சமூகத்தின் நல்வாழ்வாகும் என்கிற விழிப்புணர்வையே துணை ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாகவே எங்கள் திட்டத்தின் பெயர் " தாய் நலம் பொது நலம்". யாருக்கு எப்போது வேண்டுமோ அப்போது அதை புறக்கணிக்காமல் உதவிக்கரம் நீட்டுவதே விழிப்புணர்வின் நோக்கம் ஆகும்.
முன்கள சமூக நலபணியாளர்கள் (குறிப்பாக பொது சுகாதார மையம், மகப்பேறு மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம்) உணர்த்தப்படவேண்டும். செவிலியர்கள் மற்றும் சமூக நல ஊழியர்களுக்கு தாயின் மனநல ஆரோக்கியத்தை பற்றிய விழுப்புணர்வையும் மற்றவர்களுக்கு உணர்த்துவதின் அவசியத்தையும் துணை ஒரு திட்டமாக வகுத்துள்ளது.
ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமான சூழ்நிலையில் பிறந்து... முழு திறன்கொண்டு இந்த சமூகத்தில் வளர்வதை காண்பதே துணையின் கனவாகும்.
எங்களை வாழ்த்தி எங்கள் பயணத்தில் பங்குகொள்ளுங்கள்!