ஒரு தாயின் நல்வாழ்வு அவள் கணவனுடனான உறவுமுறை எப்படி இருக்கிறது என்பது பொறுத்தே அமைகிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சில காரணிகளை பார்ப்போம்.
கணவனின் மனநலம்
- ஒரு தந்தையாக அவருக்கு நிறைய கவலைகள் இருக்கக்கூடும்
- பணப் பற்றாக்குறையாக இருக்கலாம்- குழந்தைக்கு தேவையானதை எப்படி சமாளிப்பது.
- தாய் சற்று பலவீனமாக இருந்தால் அவளை பற்றிய கவலை ஏற்படும்
- கூட்டுக்குடும்பமாக இருந்தால் அவர்களிடமிருந்து அவளை பாதுகாப்பது.(ஆண் வாரிசு வேண்டும் என்றோ அல்லது சில கலாச்சாரத்தை பின்பற்றுவதோ இருக்கலாம் ).
- குழந்தையின்மைக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் அவளின் தன்னம்பிக்கை பாதிக்கக்கூடும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பல காரணங்களால் அவர்களது உறவுமுறையில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம்.
- இருவரில் ஒருவருக்கு ஏற்கனவே மனநோய் இருந்திருக்கலாம் அல்லது இப்போது இருக்கலாம்.
- எதிர்பாராமல் கருவுற்றிருக்கலாம்.
- குடி பழக்கம் அல்லது போதை வஸ்துக்கு அடிமையாகி இருக்கலாம்(நம் நாட்டில் பொதுவாக மது)
- குடும்ப வன்கொடுமை (இது மனநோயின் அறிகுறியாக இருக்கலாம்).
- தந்தையிடம் பேசி அவரது குறைகளை கேட்டறிந்து அவருக்கு தக்க அறிவுரை வழங்கினாலே பல இன்னல்கள் தீரும். அவருக்கு மனநோய் அல்லது குடி பழக்கம் இருந்தால் மருத்துவ ஆலோசனை வழங்குவது கடினமாகிறது. இச்சுழலில் அவரது குடும்பத்தினரின் ஆதரவு மிக அவசியம்.