டி.பி.டி இயங்கியல் நடத்தை சிகிச்சை முறை. கடினமான உணர்ச்சிகளைச் சமாளிக்க கற்றுக்கொள்ள உதவும் முறை.
உளவியலாளர் மார்ஷா லினஹன் பணியிலிருந்து டி.பி.டி உருவானது. அவர் எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறு (பி.பி.டி) என்றால் என்ன என்பது குறித்த வரவிருக்கும் கட்டுரையைப் பார்க்கவும்) மற்றும் தற்கொலை பற்றிய எண்ணங்களுடன் வாழும் மக்களுடன் பணிபுரிந்தார்.
இன்றும், இது பி.பி.டிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது, மேலும் பல நிபந்தனைகளையும் உள்ளடக்கியது:
உண்ணும் கோளாறுகள்
சுய காயப்படுத்திக்கொள்ளுதல்
மன அழுத்தம்
போதைப்பொருள் உபயோகித்தல் .
டி.பி.டி யின் குறிக்கோள், நான்கு முக்கிய திறன்களை உருவாக்கிக்கொள்ள மக்களுக்கு உதவுகிறது:
மன முழுமை
துன்ப சகிப்புத்தன்மை
தனிப்பட்ட செயல்திறன்
உணர்ச்சி கட்டுப்பாடு
டி.பி.டி, 4 முக்கிய திறன்களைக் கற்பிக்கிறது, இது உங்களுக்கு மகிழ்ச்சியான, சீரான வாழ்க்கையை வாழ உதவும்.
டி.பி.டி- யை எவ்வாறு சி.பி.டி-யுடன் ஒப்பிடுவது ?
அறிவாற்றல் நடத்தை சிகிச்சையின் (சி.பி.டி) துணை வகையாக டி.பி.டி கருதப்படுகிறது, ஆனால் இரண்டிற்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளது. உங்கள் எண்ணங்களையும் மற்றும் நடத்தைகளையும் நன்கு புரிந்துகொள்ளவும், நிர்வகிக்கவும் உதவும் பேச்சு சிகிச்சையில் இவை இரண்டுமே பயன்படும்.
இருப்பினும், டி.பி.டி உணர்ச்சிகள் மற்றும் மற்றவர்களுடனுள்ள உறவுகளை நிர்வகிப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இது பெரும்பாலும் பி.பி.டிக்கான சிகிச்சையாக உருவாக்கப்பட்டது. பி.பி.டி ஆல் பாதிக்கப்பட்டவர்களால் மற்றவர்களுடன் நல்ல உறவு ஏற்படுத்திக்கொள்வது கடினம் .
நிகழ் காலத்தில் நடப்பதை (விழிப்புணர்வை) ஏற்றுக்கொள்வதற்கும், மன உளைச்சலையும், உணர்ச்சிகளையும் நிர்வகிப்பதற்கும் மிகவும் குறிப்பிட்ட வழிகளை (திறன்கள்) கற்பிப்பதன் மூலம் டி.பி.டி உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டால், மாற்றம் சாத்தியமில்லை என்று லைன்ஹான் நம்புகிறார். தன்னைத்தானே நேசித்தல் போன்ற எளிய முறைகளில் இதை எப்படி செய்வது என்று டி.பி.டி கற்பிக்கிறது.
சில பயிற்சியாளர்களை மட்டுமே கொண்டு இது இந்தியாவில் வளர்ந்து வரும் சிகிச்சை வகையாகும். இந்த பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் திறன்களை மேம்படுத்த சிகிச்சையாளர்களுடன் இணைந்து பணியாற்ற www.thunai.org ஆர்வமாக உள்ளது.