கருவுற்ற காலத்தில் இருந்து குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் வரையிலான காலகட்டத்தில் தாய்க்கு எந்த மாதிரியான ஆதரவை மனநல மருத்துவரான நாம் அளிக்கப்போகிறோம்? இந்த பொன்னான வேளையில் நமக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பையும் குறிப்புகளையும் பயன்படுத்தி அந்த தாய்க்கு உதவுவோம்!
ஐந்தில் ஒரு கருவுற்ற பெண்ணிற்கோ அல்லது குழந்தை பிறந்த தாய்க்கோ மனநல ஆரோக்கியத்தில் சிறிய குறைபாடு ஏற்படுவது நமக்கு தெரிந்த செய்திதான்.
கருவுற்ற காலத்திலும் பேறுகாலத்திற்கு பின்னர் தாய்க்கு ஏற்படும் மனநல குறைபாடும் இரண்டு வேறு நிகழ்வுகள் அல்ல.
தாயின் மனநல ஆரோக்கியத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன: ஹார்மோன் மாற்றங்கள், கணவரின் ஆதரவு இல்லாமை, வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள், சமூகத்தின் எதிர்பார்ப்புகள், எதிர்ரபாராத அல்லது தேவையற்றபோது கருவுறுதல், கடினமான குழந்தை பேறு போன்றவை ஆகும்.
துயரத்திலிருந்து மீண்டு வர அந்த தாய்க்கு பல வழிகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் அவளுக்கும் அவள் குழந்தைக்கும் ஆதரவாக இருந்தால் இது எளிதாகிறது.
உலகம் முழுதும் உள்ள அறிஞர்கள் கூறிய சில குறிப்புகளை நாங்கள் துணை_ஓஆர்ஜியிலிருந்து தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம்.
1 . அவளது உணர்ச்சிகளை வழக்கமான நிலைக்கு கொண்டு வருதல்:
தாய்மையை போற்றி கொண்டாடும் இந்த உலகில் ஓர் பெண் தன் உள்ளத்தையும் உணர்வுகளையும் வெளியில் கூற அச்சப்படுகிறாள். ஏனென்றால் அவளை நாம் தவறாக புரிந்துகொள்வோம் என்று எண்ணுகிறாள். புதிதாக குழந்தை பிறந்த தாய்க்கு இத்தகைய தெளிவற்ற சிந்தனைகள் ஏற்படுவது இயல்பான ஒன்றே என்று அவளுக்கு விளக்கவேண்டும். இதற்கு அவள் வெட்கப்படுவதோ குற்றஉணர்வுடன் இருப்பதோ அவசியமில்லை.
சில சமயங்களில் (தனக்கு வேண்டாத போது அல்லது எதிர்பாராதவிதமாக கருவுறுதல் ) அந்த பெண்ணிற்கு அதிக கவனம் தேவைப்படுகிறது.
2 . பரிசோதனைகள்:
பேறுகாலத்திற்கு முன் ஏற்படும் மனநிலை மற்றும் கவலையின் பாதிப்புகள்: பேறுகாலத்திற்கு முன் ஏற்படும் கவலை அல்லது அழுத்தம், ஓசிடி, பிடிஎஸ்டி, மனநோய் என பல வகைகள் உள்ளன. இதனை கண்டறிய பல சோதனை கருவிகள் உள்ளன. சிலருக்கு மனநல மருத்துவர் தேவைப்படலாம், பொதுவாக எல்லா சிகிச்சையாளர்களும் பயன்படுத்தும்விதமாக சில முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இங்கே பிஎச்கியூ-9 என்ற மதிப்பீடு முறை தாயை பரிசோதிக்க கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் இதை பயன்படுத்தலாம், மேலும் பல பயிற்சிகளுக்கு எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
3 . தாய்க்கான ஆதரவாளர்களை தேர்ந்தேடுக்க உதவுங்கள்:
ஓரு குழந்தையை வளர்க்க ஓரு சமூகமே தேவைப்படுகிறது. தாய்க்கு தன்னை சுற்றி ஒரு பாதுகாப்பு அரண் தேவைப்படுகிறது. இதை புரிய வைக்கவேண்டியது நமது முதல் கடமை. அவளுக்கு யார் எந்த வகையில் உதவிடுவர்(சமையல், முதல் குழந்தை இருப்பின் அதை கவனிக்க, அவள் சற்று பலவீனமாக உணரும் போது அவளுடன் இருக்க) என்று ஒரு பட்டியலை தயார் செய்யுங்கள்
நிறைய தாய்க்கு அவர்களுக்கு உதவிட இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைவர்.
தாய்மார்களுக்காக இணையத்தின் வாயிலாகவும் நேரடியாகவும் இருமொழிகளில் (ஆங்கிலம், தமிழ்) அமர்வுகளை நடத்துகின்றனர் நம் துணையின் உறுப்பினர்கள். இந்த அமர்வுகளில் தாய்மார்கள் தங்களை கவனித்துக்கொள்ளவும், தேவையெனில் உதவி கேட்கவும், தங்கள் குழந்தையுடன் ஒரு நல்ல இணக்கத்தை ஏற்படுத்தவும் தெரிந்துகொள்கிறார்கள்.
4 . சில சுயபராமரிப்பு பயிற்சிகளை கற்றுத்தாருங்கள்:
தங்களை கவனித்துக்கொள்ள சில எளிய வழிமுறைகளை கருவுற்ற பெண்களுக்கு சில எளிய முறைகளை கூறலாம். விழிப்புணர்வு என்பது மிக முக்கியமானது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள மனநிலை மற்றும் தூக்கத்திற்கான எளிய அட்டவணையை அவள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
விழிப்புடன் ஆழ்ந்து செய்யும் மூச்சு பயிற்சி கருவுற்ற காலத்தில் ஆரோக்கியமாக இருக்க உதவும். இங்கே ஒரு உதாரணம் கொடுத்துள்ளோம் இங்கே மற்றொன்று.
யோக நித்ரா என்னும் பயிற்சியை அவள் படுத்து ஓய்வெடுக்கும்போது செய்யலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள எளிய பயிற்சிகளை செய்யலாம்.
5 . குழந்தையுடன் பிணைப்பை ஏற்படுத்தும் வழிகளை கற்றுத்தாருங்கள்:
ஒரு பெண் கருவுற்ற நாளிலிருந்து குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் வரையுள்ள 1000 நாட்களில் ஏற்படும் பிணைப்பு அந்த குழந்தையின் மன அமைதிக்கும் அறிவாற்றலுக்கும் அடித்தளமாக அமைகிறது. இந்த பயிற்சிகளை தினமும் செய்தால் உங்கள் குழந்தை மகிழ்ச்சியாகவும் பிற்காலத்தில் தேர்வுகளில் அதிக மதிப்பெண்ணும் பெறலாம் என்று நகைச்சுவையாக தாயை ஊக்கப்படுத்துங்கள். கருத்து அவருக்கு புரிதல் அவசியம்.
இங்கே சில தாலாட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன, அந்த பெண் அதை ஒலிக்கச்செய்து கேட்கலாம் அல்லது பாடலாம். தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள உணர்வுபூர்வமான பந்தத்தை வலுப்படுத்தி குழந்தையை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் உணரச் செய்ய முடியும்.
குழந்தை அழும்போது உடனே கவனிக்க தாயை ஊக்கப்படுத்துங்கள். இப்படி செய்வதால் தாய் எப்போதும் தன்னுடனே இருப்பதாக குழந்தை உணரும்.
பிணைப்பின் நுணுக்கங்களை அறிய இங்கே அழுத்தவும்.