ஒரு நிபுணரிடம் பேச்சு சிகிச்சை பெறுவதிலும் பல வகை உண்டு!
அறிவாற்றல் நடத்தை சிகிச்சை: Cognitive Behaviour Therapy (CBT)
சி.பி.டி ஆரோக்கியமற்ற சிந்தனை முறைகளை அடையாளம் காணப் பயன்படும் பல்வேறு உத்திகள் மற்றும் அவற்றை மறுவடிவமைப்பதற்கான முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதனால் பிரச்சனைகள் தெளிவானதாகவும் மற்றும் அணுகக்கூடியதாகவும் ஆகிறது எனவே இவை மாற்றக்கூடியவை.
கவலைக் கோளாறுகள், மனச்சோர்வு, இருமுனைக் கோளாறு, உண்ணும் கோளாறுகள், ஸ்கிசோஃப்ரினியா ( Schizophrenia) ( எண்ணம், செயல் ஆகியவை மாறுபட்டுச் செயல்படும் மனக் கோளாறு) மற்றும் அதிர்ச்சி தொடர்பான கோளாறுகள் போன்ற பல்வேறு குறைபாடுகளுக்கும் இந்த வகை சிகிச்சையைப் பயன்படுத்தலாம். மேலும் தகவலுக்கு “சி.பி.டி அடிப்படைகள்” ஐப் பார்வையிடவும்.
இயங்கியல் நடத்தை சிகிச்சை: Dialectical Behaviour therapy (DBT)
டி.பி.டி சிகிச்சை உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துதல், கவனத்துடன் இருப்பது மற்றும் சங்கடமான எண்ணங்களையும் உணர்வுகளையும் ஏற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துகிறது. ஒரு சிகிச்சையாளர் மாற்றத்திற்கும், ஏற்றுக்கொள்ளலுக்கும் இடையில் ஒரு சமநிலையைக் கண்டறிய ஒரு நபருக்கு உதவ டி.பி.டியைப் பயன்படுத்துகிறார்.
டி.பி.டியைப் பயன்படுத்தி, ஒரு சிகிச்சையாளர் ஒரு நபருக்கு புதிய திறன்களைக் கற்பிக்க முடியும், அதாவது ஒரு சூழ்நிலையைச் சமாளிப்பதற்கான புதிய வழிகள் மற்றும் நினைவாற்றல் நடைமுறைகள். எல்லைக்கோடு ஆளுமைக் கோளாறு, உண்ணும் கோளாறுகள், பி.டி.எஸ்.டி, பொருள் பயன்பாட்டுக் கோளாறுகள் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்க டி.பி.டி. உதவுகிறது.
கண் இயக்கம் உணர்திறன் குறைப்பு மற்றும் மறு செயலாக்க சிகிச்சை:
Eye movement desensitization and reprocessing therapy (EMDR)
இது PTSD க்கு ஒரு சிறந்த சிகிச்சையாகும், மேலும் ஒரு நபர் குறிப்பிட்ட கண் அசைவுகளைச் செய்யும்போது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. இந்த சிகிச்சையில் 8 நிலைகள் உள்ளன. மேலும் தகவலுக்கு “EMDR சிகிச்சை அடிப்படைகள்” ஐப் பார்வையிடவும்.
வெளிப்பாடு சிகிச்சை: Exposure Therapy
இது சி.பி.டியின் மற்றுமொரு வடிவமாகும், மேலும் பயம் மற்றும் கவலைக் கோளாறுகள், தீவிர ஈடுபாடு கோளாறு (ஒ.சி.டி), பி.டி.எஸ்.டி மற்றும் பலதரப்பட்ட பயங்கள் அல்லது அருவருப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுகிறது. ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், சிகிச்சையாளருடன் உள்ள நபர் தூண்டுதல்களுக்கு ஆளாகிறார்.
மேலும் இந்த தூண்டுதல் வெளிப்பட்ட பிறகு ஒரு குறிப்பிட்ட வழியில் செல்லும் நடத்தைகள் அல்லது பதட்டங்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் கற்றுக்கொள்வார். எடுத்துக்காட்டாக, பீதி அல்லது பதட்டம் போன்ற உணர்வுகள் காரணமாக லிஃப்ட் பயன்படுத்துவதில் மிகவும் பயந்த ஒரு நபருக்கு, சிகிச்சையாளர் அந்த நபருடன் லிஃப்ட் மேல் மற்றும் கீழ் சவாரி செய்வதில் படிப்படியாக இருந்த பய உணர்வுகள் குறையும் வரை அவருடன் செல்லலாம், மேலும் அந்த நபர் அதை மிகவும் சாதாரணமாக செய்ய முடியும் வரை.
ஒருவருக்கொருவர் சிகிச்சை: Interpersonal therapy
இது மற்றவர்களுடனான உறவுகளில் கவனம் செலுத்துகிறது. சிகிச்சையாளர் ஒரு நபரின் சமூக தொடர்புகளை மதிப்பீடு செய்கிறார் மற்றும் எதிர்மறை வடிவங்களைக் கவனிக்க அவர்களுக்கு உதவுகிறார். இதன்மூலம் மேலும் சிகிச்சையாளர் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் மற்றவர்களை புரிந்துகொள்வதற்கும் நேர்மறையாக செயல்படுவதற்கும் வழிகளைக் கற்றுக்கொள்ள உதவ முடியும்.
மனநிலை அடிப்படையிலான சிகிச்சை: Mentalization based therapy
இது இருமுனைக் கோளாறுக்கு (பி.பி.டி) (Bi-polar disorder) சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது, மேலும் மனநிலைப்படுத்தல் என்ற நுட்பத்தை உள்ளடக்கியது. இந்த சிகிச்சை பி.பி.டி உள்ளவர்களுக்கு அவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் மற்றவர்களின் உணர்வுகளையும் கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. அதன் முதன்மை நோக்கம் பி.பி.டி உள்ள ஒருவருக்கு தன்னை உணர்ந்து கொள்ளும் உணர்வைக் கொடுப்பதும், மற்றவர்களுடன் சாதாரணமாக பழகுவதற்கு உதவுவதும் ஆகும்.
மனோதத்துவ சிகிச்சை: Psychodynamic therapy
சைக்கோடைனமிக் தெரபி என்பது ஒரு பேச்சு சிகிச்சையாகும். இது ஒரு நபர் கடந்த கால அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட நடத்தை மற்றும் எதிர்மறையான வடிவங்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அனுபவங்கள் எவ்வாறு எதற்கும் உதவாத நடத்தைகளையும், உணர்வுகளையும் உருவாக்கியுள்ளன என்பதை ஒரு நபர் புரிந்துகொண்டவுடன், அவற்றைக் கடக்க அவர்கள் கற்றுக்கொள்ளலாம். சிகிச்சையாளர்கள் இந்த நுட்பத்தை பரவலான மனநல பிரச்சினைகள் மற்றும் ஆளுமை கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்துகின்றனர்.
உணர்ச்சி- கவனம் செலுத்தும் சிகிச்சை: Emotion- focused therapy
உணர்ச்சிகளை மையமாகக் கொண்ட சிகிச்சை (EFT) உணர்ச்சிகளைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும், தீர்ப்பதற்கும் கவனம் செலுத்துகிறது. EFT மக்களை அடக்குவதை விட அவர்களின் உணர்ச்சிகளைச் செயல்படுத்த ஊக்குவிக்கிறது, மேலும் மனச்சோர்வு, அதிர்ச்சி, சமூக கவலை, உண்ணும் கோளாறுகள் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம்.
குடும்ப சிகிச்சை: Family Therapy
குடும்ப சிகிச்சையானது குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு குறிப்பிட்ட சிக்கல்களைத் தீர்க்க ஒரு குடும்பம் எப்படி அவர்களுடன் இணைந்து உதவிசெய்வது என்பதை உள்ளடக்குகிறது. குடும்ப சிகிச்சையாளர்கள் ஒரு குடும்பத்திற்கு அடிப்படை பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய எதிர்மறை நடத்தை வடிவங்களைப் புரிந்துகொள்வதற்கும் வேலை செய்வதற்கும் உதவுகிறார்கள். இந்த வகை சிகிச்சையானது பொருள் துஷ்பிரயோகக் கோளாறுகள், உண்ணும் கோளாறுகள், நடத்தை பிரச்சினைகள், ஒ.சி.டி போன்றவற்றுக்கும் உதவும்.
குழு சிகிச்சை: Group Therapy
இங்கே ஒரு சிகிச்சையாளர் கலந்துரையாடலை வழிநடத்துகிறார், மேலும் ஒரே மாதிரியான சிக்கல்களை அனுபவிக்கும் குழுவில் உள்ளவர்கள் தங்கள் தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் எண்ணங்களைப் பற்றி கருத்து தெரிவிக்கலாம் அல்லது பேசலாம். இதனால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் தான் தனியாக இல்லை என்பதை உணர உதவுகிறது. மேலும் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகிறது. மனச்சோர்வு, பதட்டம், அடிமையாதல், வாழ்க்கை முறை பிரச்சினைகள், ஆளுமைக் கோளாறுகள் போன்றவர்களுக்கு இந்த வகை சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும்.