குழந்தையுடனான பிணைப்பை (கருவிலும் குழந்தை பிறந்த பின்னும் ) ஏற்படுத்துவது குழந்தை பராமரிப்பில் மிகவும் அனுபவித்து செய்யக்கூடிய ஒன்று.
பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தையை கொஞ்ச விரும்புகின்றனர். யாருக்குத்தான் குழந்தையின் மழலை மொழியை கேட்க பிடிக்காது.
ஆனால் இந்த அவசர உலகத்தில் குழந்தைக்காக நேரம் கட்டாயமாக ஒதுக்க வேண்டியுள்ளது. குழந்தையின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு இந்த பிணைப்பு மிகவும் அவசியமாகிறது.
பிணைப்பை ஏற்படுத்த சில எளிய வழிமுறைகள்:
* குழந்தைக்கு மசாஜ் செய்துவிடவும்
* உங்களுக்கு பிடித்த பாடலை பாடியோ அல்லது ஒலிக்கசெய்தோ கேளுங்கள்.
* குழந்தையுடன் சேர்ந்து கண்ணாடியில் முகத்தை பாருங்கள்
* குழந்தை தூங்கும் போது நீங்களும் சேர்ந்து தூங்குங்கள்.
* உங்கள் கணவருடன் நல்ல பிணைப்பை ஏற்படுத்துங்கள். உங்கள் குழந்தை அதை விரும்பும்.
* முதல் மூன்று மாதங்கள் குழந்தை அழுதால் அதை தூக்கிக்கொள்ளவும்.
* குழந்தையை உங்கள் புடவையிலோ தூளி துணியாலோ அணைத்து சுற்றி வையுங்கள்
* நீங்கள் எரிச்சலுடன் இருக்கும் போது குழந்தை அழுதால் ஆழ்ந்த மூச்சை வெளிவிட்டு அமைதிப்படுத்திக்கொண்டு குழந்தையை தூக்குங்கள்.
* மெல்லிய குரலில் இனிமையாக பேசுங்கள்- யாரும் உங்களை கேலி செய்ய போவதில்லை.
* உங்கள் உடலுடன் குழந்தையின் உடல் படுமாறு அனைத்துக்கொள்ளுங்கள். (முக்கியமாக குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை).
பிணைப்பை ஏற்படுத்த மேலும் சில குறிப்புகளுக்கு இந்த காணொளியை பாருங்கள்.