குழந்தையின் மனநல ஆரோக்கியம் என்றால் என்ன?
குழந்தையின் மனநலம் பற்றி யாராவது பேசும்போது நமக்கு ஆச்சரியமாக உள்ளது. குழந்தைக்கு பால் குடிக்க தெரியும், சிரிக்க, அழ தெரியும் அதை தவிர சிறு குழந்தைக்கு என்ன தெரியும்? அவற்றிற்கு பெரியவர்களை போல கவலையோ, மன அழுத்தமோ மனச்சோர்வோ ஏற்படுவதில்லை என்று தானே நினைக்கிறோம்?
ஆச்சரியமாக, குழந்தைகளுக்கும் மன ஆரோக்கியம் உண்டு- தன்னை பராமரிப்பவர்களுக்கும் சுற்றுசூழலுக்கும் ஏற்றவாறு மகிழ்ச்சியாகவோ அதற்கு மாறாகவோ தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். இது புதுவிதமான அற்புதமான ஆராய்ச்சியாகும்.
அண்மையில் நடந்த ஆராய்ச்சியில், குழந்தையின் மனநல ஆரோக்கியம் கருவிலேயே தொடங்கிவிடுகிறது என்று கூறுகின்றனர். இது குழந்தை பருவம் தொடங்கி வளர்ந்த பின்னும் தொடர்கிறது. இது தொடர்பாக கருவின் நிர்வாகம் என்னும் கட்டுரையை காண்க.
குழந்தையின் மன ஆரோக்கியம் என்பது கீழே கொடுக்கப்பட்ட திறன்களை குறிக்கும்:
புதிய அனுபவம், உணர்ச்சிகளை சரியான விதத்தில் வெளிப்படுத்துதல் (வாழ்க்கைக்கு தேவையான மிகவும் முக்கியமான திறன்)
தன் பெற்றோருடனும் பாதுகாவலரிடமும் அன்பான அரவணைப்பான உறவை ஏற்படுத்துதல்.
தன் சுற்றத்தையும் உலகையும் நன்கு ஆராய்ந்து கற்றல்.
குழந்தையின் நடவடிக்கை அனைத்தும் சிறு வயதில் தன்னை பராமரிப்பவரிடம் இருந்து கற்றுக்கொண்டதாக தெரிகிறது. இந்த பந்தத்தின் விளக்கம் - அது பாதுகாப்பானது அல்லது பாதுகாப்பற்றது இரண்டும் செய்தி தொகுத்து வழங்கப்பட்டுள்ளது