"குழந்தை என்பது ஒரு வரப்பிரசாதம்; ஒவ்வொரு தாயும் தன் கருவுற்ற காலத்தையும் குழந்தை பராமரிப்பையும் அனுபவித்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால் ஐந்தில் ஒரு தாய்க்கு இது முடிவதில்லை (பத்தில் ஒரு தந்தைக்கும் இது முடிவதில்லை). கருவுற்ற காலமும் குழந்தை பிறப்பும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சவாலான ஒன்றாகும். சில பெற்றோர்களுக்கு சவால்களை சந்திக்க போதிய வசதி (செல்வம் அல்லது தைரியம்) இல்லாமல் துக்கம் அடைவர்.
தந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்: அவருக்கு பண பிரச்னை அல்லது அவரின் துணைவியின் ஆரோக்கியம் குறித்து கவலை உண்டாகிறது.
சிலர் பலமுறை முயன்றபிறகே கருவுற்றிருப்பர். சிலர் IVF என்னும் செயற்கை முறையில் கருவுற்றிருப்பர். எதுவாயினும் அது மன அழுத்தம் நிறைந்த நாட்களாகத்தான் இருந்திருக்கும்.
குறைந்த அல்லது நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் பெண்களிடம் நடத்தப்பட்ட முறையான ஆய்வில் ஆறில் ஒரு கருவுற்ற பெண்ணிற்கும் ஐந்தில் ஒரு புதிதாக குழந்தை பிறந்த தாயிற்கும் அறிகுறிகள் தென்படுவதாக கூறப்படுகின்றது.
தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் நடத்திய ஆய்வில் பதினோரு சதவிகித பெண்களுக்கு பேறுகாலத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தம் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். கவலை, அழுத்தம் ஆகியவை கருவுற்ற காலத்தில் ஏற்படுவது இயல்பான ஒன்றே.
பேறுகாலத்திற்கு முன் பரவலாக ஏற்படும் மன அழுத்தத்தின் விளக்கப்படம்.
நமக்கென்ன என்று இருந்துவிடாமல் புதிதாக குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தாய் தந்தைக்கு உற்ற துணையாக இருந்து அவர்களை நல்ல பெற்றோர்களாக உருவாக்குவோம்.
ஒரு தாயின் முழு ஆரோக்கியத்தை நாம் கவனித்துக்கொண்டால் அதுவே தன் குழந்தையை மகிழ்ச்சியாக கவனித்துக்கொள்ள உதவும். அந்த குழந்தையின் வளர்ச்சியும் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். தாயின் மனநிலை/ உணர்வுகளை குறித்த நேரத்தில் கண்டறிந்து அவருக்கு உதவினாலே பெரும் பிரச்சனைகளை தடுக்க முடியும். குழந்தையின் வளர்ச்சிக்கு (உடல் மற்றும் மனம்) அடித்தளமாக அமையும்.