கண் இயக்க உணர்வு நீக்க மீள் செயல்திறன் சிகிச்சை. ( Eye Movement Desensitization and Reprocessing therapy.)
இதை சொல்வற்குள் பல் உடையலாம்! ஆனால் மிகவும் பலனுடையது. மேலும் படியுங்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்கு இ.எம்.டி.ஆர் சிகிச்சை பற்றிய அடிப்படைக் கேள்விகளுக்கு பதில் தரும். மேலும் அது பற்றிய புரிதலையும் ஏன் அது தரப்படுகிறது என்பது பற்றியும் விளக்கும். இந்த சிகிச்சையின் போது என்ன நடக்கும் என்பதைப் பற்றிய விரிவான தகவலுக்கு எவ்வாறு இ.எம்.டி.ஆர் சிகிச்சை தரப்படுகிறது என்கிற தலைப்பில் தேடி படித்து பயன் பெறுங்கள்.
இ.எம்.டி.ஆர் சிகிச்சை என்றால் என்ன?
இந்த சிகிச்சை அதிர்ச்சிக்கும், அதிர்ச்சிக்கு பிந்தைய மன அழுத்த குறைபாட்டிற்கும் (PTSD) தரப்படும் ஒரு அதிக பலன் தரக்கூடிய சிகிச்சை முறையாகும்.
இதில் அந்த அதிர்ச்சி தரும் அனுபவம் சிறு பகுதிகளாக மீண்டும் நடைமுறையில் கொண்டுவரப்படும். தெரபிஸ்ட் உங்களுடைய கண் இயக்கத்தை வழிநடத்துவார். இந்த சிகிச்சை மன அழுத்தம் தரக்கூடிய நிகழ்வுகளை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருவதன் மூலம் உங்களுடைய கவனம் திசை திருப்பப்படும். மன உணர்வினை குறைவான அளவிலேயே பாதிக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் தரப்படுகிறது.
இது அந்த நிகழ்வுகள் குறித்த ஞாபகங்கள் அல்லது எண்ணங்களுக்கு உங்களை மீண்டும் முற்படுத்தி அதே சமயத்தில் எந்த வித மன ரீதியான எதிர்வினைகள் செய்யப்படாமல் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. காலப்போக்கில் இந்த சிகிச்சை அந்த அதிர்ச்சி தரக்கூடிய ஞாபகங்கள் அல்லது எண்ணங்கள் உங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை மிக மிக குறைத்து விடும் என்று நம்பப்படுகிறது. பெரும்பாலானோர்க்கு இது நல்ல பலனையே தந்திருக்கிறது.
இ.எம்.டி.ஆர் சிகிச்சை எந்த அளவுக்கு பயன் தரும்?
அதிர்ச்சிக்கு பிந்தைய மன அழுத்த குறைபாட்டிற்கு இ.எம்.டி.ஆர் சிகிச்சை அதிக அளவில் பயன் தரக்கூடியது என்று பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இ.எம்.டி.ஆர் குறைவான காலத்தில் மட்டுமல்லாது அதனுடைய பாதிப்பும் பலன்களும் நீண்ட காலங்களுக்கு பலன் தரும் என்றும் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
PTDS - நோயாளிகளுக்கு அடிப்படையான அக்கறை சிகிச்சையும் வேறு சிலருக்கு இ.எம்.டி.ஆர் சிகிச்சையும் தந்து ஆய்வு நிகழ்த்தப்பட்டது. இதன் முடிவில் சிகிச்சை முடிந்தவுடன் இ.எம்.டி.ஆர் சிகிச்சை தரப்பட்ட நோயாளிகளுக்கு பாதிப்பின் கடுமை குறைந்து இருந்தது.
மேலும் மூன்று மாத மற்றும் ஆறு மாத தொடர் ஆய்வுக்குப் பின் இந்த சிகிச்சையின் பலன் ஆறு மாதங்கள் தாண்டியும் அவர்களுக்கு பலனை தந்து கொண்டிருந்தது ஒட்டுமொத்தமாக இந்த ஆய்வு முடிவாய் அறிவித்தது.
மன அழுத்தத்தின் பாதிப்பு குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 32 பேர் ஒரு பொறுமையற்ற சூழலில் விடப்பட்டு அவர்களுக்கு இ.எம்.டி.ஆர் தெரப்பி தரப்பட்டது. அந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் பலனளிப்பதாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் 68% பேர் இ.எம்.டி.ஆர் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் முழுவதுமான விடுபடல் அறிகுறிகளை வெளிக் காண்பித்தனர். மேலும் இ எம் டி ஆர் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் மன அழுத்த அறிகுறிகள் மிகக் குறைவாகவே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் பல ஆய்வுகள் செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட வேண்டி உள்ளது.
இ.எம்.டி.ஆர் சிகிச்சை எடுத்துக்கொள்ள முயற்சி செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?
சிகிச்சை அமர்வு முடிந்த பின்னும் தொடர்ந்து இருக்கும் அதிகரிக்கப்பட்ட யோசிப்புக்காண விழிப்புணர்வு.
லேசான மனநிலை, உண்மையான கனவுகள்.
இ.எம்.டி.ஆர் சிகிச்சை ஒரு அவசர சிகிச்சை அல்ல. இது அதிர்ச்சிக்கு பிந்தைய மன அழுத்த குறைபாடு நீங்கிட பல சிகிச்சை அமர்வுகள் தேவைப்படும் ஒன்று.
இந்த சிகிச்சை துவக்கத்தில் மிகக் கடினமாக மற்றும் உணர்வுபூர்வமாக அதிக அழுத்தம் தரக்கூடியதாக இருக்கும். காலம் செல்லச் செல்ல அதிக அளவில் பலனளிக்கக் கூடியதாக இந்த சிகிச்சை இருக்கும்.
ஞாபகத்தில் வையுங்கள். இது மிக மிக பாதுகாப்பான சிகிச்சை முறையாகும். உங்களுடைய தெரபிஸ்ட் மற்றும் உங்களுக்கும் இது சரியான தீர்வாக இருக்கும் பட்சத்தில் இதனுடைய அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகளில் எப்படி உங்களை தயார் செய்து கொள்வது என்பதைப் பற்றி விவரித்து அதன் பின்னர் சிகிச்சையை மேற்கொள்வார்.