மன நலனின் அடையாளம் - சுமை அதிகமாகும் போது, உதவி கேட்பது...
என் பெற்றோர் எனக்கு சொல்லித் தந்தது, "பெறுவதைவிட கொடுப்பது சிறந்தது கைகொடுக்க காத்திருக்க வேண்டாம். உனது கடமையை செயல்படுத்து" என்று லதா சொல்வாள். தற்சார்பான வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு அருமையான அறிவுரை, ஆனால் சில நேரங்களில் வலிமையான மனிதர்களும் ஒரு ஆதரவான உதவிக்கு கரம் நீட்ட வேண்டிய அவசியம் ஏற்படும்.
அடுத்தவர்களிடம் உதவி கேட்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. நாம் முதுமை அடையும் பொது நம்முடைய உடம்பின் செயல்படும் திறன் மாறுபடும். நம்மில் பெரும்பாலோர் பிடிவாதமாக நமக்கு ஒருவரின் உதவி தேவை என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். நல்ல மனதுடைய மனிதர்கள் உதவியை நமக்கு அளிக்கும் போது, நாம் சங்கடப்பட்டு அவர்களுடைய அந்த பெருந்தன்மையை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்து விடுவதுண்டு.
புத்தமத முக்கிய கொள்கையான "வாங்குவதை போலவே கொடுப்பதும்" என்கிற மந்திரத்தை நாம் அனைவரும் கற்றுக்கொள்ள முயல வேண்டும். மற்றொருவர் இல்லாமல் ஒருவரால் வாழ்ந்திட இயலாது. அதேநேரம் அவர் மற்றவரை விட உயர்ந்தவரும் இல்லை.
எழுத்தாளர் எம் நோரா க்ளெவர் தன்னுடைய புத்தகமான "மே டே! ஆஸ்கிங் ஃபார் ஹெல்ப் இன் டைமஸ் ஆஃப் நீட்" ல் சொல்லியிருப்பது மக்கள் கடைசி நிமிடம் வரை காத்திருந்து வேறுவழியில்லாமல் உதவி கேட்பதற்கு பல காரணங்களை தந்திருக்கிறார். மக்கள் அசவுகரியமாக, பயமாகவும் உணர்கிறார்கள். உதவி கேட்கும்போது மேலும் நம்முடைய சுதந்திரம் மற்றும் உரிமையை நாம் மிகவும் மதிக்கிறோம். யாரும் நமக்கு உதவி கேட்க கற்றுக் கொடுத்திருக்க மாட்டார்கள்.
அவர் மேலும் சொல்வது பிரச்சனை தீவிரமாகவும் வரையில், நம்முடைய தேவை மிக மிக முக்கியமான நிலையை அடையும் வரையில் நாம் அதுபற்றி யோசிப்பது இல்லை. பெரும்பாலும் நமக்கு என்ன தேவை என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்வதில்லை. அல்லது நாம் கேட்கும் நபர் தவறான வராக இருக்கிறார்.
இந்தப் புத்தகம் ஒரு ஏழுபடி உதவி கேட்கும் முறையை விவரிக்கிறது இதில் முதல் படி உங்கள் உதவி என்ன என்பதை குறிப்பிடுங்கள், அதாவது உங்கள் தேவை என்ன அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். கேட்பதற்கு மிக சுலபமாக தோன்றினாலும் உங்களுடைய சூழ்நிலையை நீங்கள் சிறிது ஆராய வேண்டியது அவசியம்.
உங்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்பதை ஒப்புக் கொள்ளுங்கள்:
பல வருடங்களாக லதா தன்னுடைய குடும்பக் கடமைகளோடு தனது இளவயது, இருமுனை துருவ குறைபாடு உள்ள மகன் ராமிற்கு உதவிகள் செய்தும் ஆதரவாய் இருந்து வருகிறார். அவளுடைய கணவன் சுந்தர் மிக பரபரப்பான எக்ஸிக்யூட்டிவ். அதிகமாகப் பயணங்களை மேற்கொள்பவர். மகனின் முக்கியமான பிரச்சனை நேரங்களை லதா மட்டும் தனியே கவனிக்க நேர்ந்தது அவரின் தெரபிஸ்ட் ஒரு ஆலோசனை வழங்கினார் அதாவது தனது கணவரின் சகோதரி மற்றும் கணவர் இருவரிடமும் சிறிது வேலைகளை பகிர்ந்து கொள்ள கேட்டுக் கொள்ளுமாறு சொன்னார். அவர் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருவரும் ராமை பார்த்துக்கொள்ள உதவுவதாக சொன்னார்கள். ராமை பார்த்து கொள்ளும் முதல் பொறுப்பு அவளுடையதுதான் என்றாலும் ராமை பார்த்துக்கொள்ள அவர்களிருவரும் ஒப்புக்கொண்டது மிகுந்த ஆறுதலை அளித்தது.
எல்லாவற்றையும் தவிர்த்த தன் பணி மட்டுமே கொண்ட ஒரு வாழ்க்கையை வாழ வேண்டிய அவசியமில்லை. லதாவும் சுந்தருமாக சேர்ந்து உதவிகள் கேட்டு தரக்கூடிய உதவியை இரு கைகள் நீட்டி பெற்றுக் கொள்வதிலும் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வுக்கு அது உதவி செய்கிறது என்பதை புரிந்து கொண்டார்கள்..
உதவி கேட்பது எப்படி?
அதற்கான 6 வழிகள் இதோ:
1. உங்கள் தேவைகளை வரையறுத்துக் கொள்ளுங்கள்:
நீங்களோ அல்லது உங்களுக்கும் நெருக்கமானவர்களுக்கோ உதவி தேவைப்படுகிறது நீங்கள் அடுத்தவரை அணுகவேண்டும், கேட்க வேண்டுமென்றால் அதற்கு முதலில் ஒரு பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். இவைகளை குறிப்பாக பதிவு செய்யுங்கள். உதாரணமாக, வெளியே போய் வருதல், உணவு தயாரித்தல், வீட்டு வேலை, தோட்ட வேலை, நாயை பார்த்துக் கொள்வது என்று வகைப்படுத்திய பின், எந்த வேலையை வெளியிலிருந்து பணிக்கு ஆட்களை அமர்த்தி செய்யலாம்? உதாரணமாக, வீடு சுத்தம் செய்தல் அல்லது தோட்ட வேலையை ஒருவரை பணிக்கு அமர்த்தி செய்ய முடியும். இதனை உதவிக்கு வருபவர்கள் மூலம் செய்யலாம் என்று பிரித்துக் கொண்டால் உதவி கேட்பது மிக சுலபமாகிவிடும்
2.உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சுலபமான தீர்வுகளுக்காக சிந்தியுங்கள்:
ஒரு வேளை உணவு தயாரித்தல் அல்லது ஒரு வாரத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு உணவு தயாரித்தல் யாரிடமாவது தரமுடியுமா யாராவது அதற்கு உதவி செய்வார்களா. இன்னும் கூர்ந்து யோசித்தால் பிரச்சனையின் மற்றொரு கோணத்தில் இருந்து ஆராய முடியும். ஆனால் சுலபமாக அதற்கான தீர்வு கிடைக்கும். உதாரணமாக சக்கர நாற்காலியை ஏற்றுவதற்காக ஒரு சாய்வு நடைமேடை கட்டவேண்டும் என்பது உங்களுடைய ஒரு வேலையாக இருந்தால் அதற்காக ஆட்களை பணியமர்த்தி செய்ய முடியாமல் இருந்தால் உங்களுடைய பொறியியல் படித்த நண்பரை உதவிக்கு கேளுங்கள்.
3. உங்களுக்கு ஆதரவு செய்து உதவி செய்வோர் பட்டியலை உருவாக்குங்கள்:
உங்களுக்குத் தெரிந்து தன்னார்வ தொண்டர்கள் உங்கள் நண்பர்களில் உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள் நேரமெடுத்து உதவிக்கு வருபவர்கள் என்று நண்பர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் குடும்ப உறவினர்கள் ஆகிய அனைவரிடமும் இது குறித்து பேசுங்கள் மேலும் உங்கள் தெரபிஸ்ட்டால் இதற்காக உதவி செய்யும் சேவை நிறுவனங்களையும் அடையாளம் காட்ட முடியும்.
4. குறிப்பாக சொல்லுங்கள்:
உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் மக்கள் மிகவும் நேர்மையாகவே இருக்கிறார்கள். ஆனால் உங்களுடைய உதவிக்கான தேவைகள் குறித்து நீங்கள்தான் வெளிப்படையாக அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்."எனக்கு வாரம் ஒருமுறை சமையல் செய்து தர முடியுமா?" என்பது போன்ற குறிப்பான விண்ணப்பங்கள் உங்களுக்கு உதவிகளை உடனே பெற்றுத்தரும். உதவி செய்பவர்களோடு இணைந்து வேலைகளை நடத்திக் கொள்ளுதல் என்பது உங்களுடைய பொறுப்பாகும். மக்கள் உங்கள் மனங்களை படிக்க மாட்டார்கள்.
5. உதவி செய்பவர்களை நிர்வாகம் செய்திடுங்கள்:
இப்போது எனக்கு ஒரு டஜனுக்கு மேல் "உதவி செய்பவர்கள் குழு" இருக்கிறது. நான் எப்போதுமே எனக்கு தேவையான உதவி குறித்த விண்ணப்பங்களை ஒருவருக்கு மட்டும் அனுப்புவதில்லை. அனைவருக்கும் அது அனுப்பப்படும். ஆகவே எந்த ஒருவரும் அதிக வேலை செய்து எனக்கு உதவி செய்ய வேண்டி இருக்காது. என்னுடைய உதவியாளர்களில் சிலர் சிறிது நேரம் வந்து தேவையான உதவிகளை செய்துவிட்டு அரை மணி நேரத்திற்குள் கிளம்பிவிடுவார்கள். சிலர் எனக்கு உதவி செய்துகொண்டு பிறகு என்னிடம் பேசி விட்டு நிதானமாக செல்வார்கள். யாராவது ஒருவரால் உதவி செய்ய முடியவில்லை என்றால் அதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த அகிலம் வேறு ஒருவரை உங்கள் உதவிக்காக அனுப்பி வைக்கும்!
6. நன்றி சொல்லுங்கள்.
உங்களுடைய நன்றி உணர்வினை வெளிப்படுத்துங்கள்: உங்களுடைய தன்னார்வ உதவி செய்யும் நண்பர்கள் அனைவரையும் ஒரு நன்றி சொல்லும் மதிய உணவு பார்ட்டிக்கு அழைத்திடுங்கள், அல்லது அவர்கள் அனைவரையும் ஒரு பொது இடத்தில் சந்தித்து அளவளாவுங்கள். மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றியினை சிறு தகவலாகவோ அல்லது ஒரு இமெயில் மூலமாகவோ அவர்கள் மொபைலுக்கு ஒரு வாட்ஸ்அப் செய்தியாகவோ அனுப்பி வையுங்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் மிக நிம்மதியாக வாழ எளிதாக்கி தந்திடும். அவர்களுக்கு இது மிக மிக அவசியமான ஒன்று. நீங்கள் அனுப்பும் இந்த நன்றிக்கான செய்தி அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் அவர்களும் இதனை விரும்புவார்கள்.