நான் என்னை எப்போதும் தட்டி பேசுகிறேனா? இல்லை என்னையே ஊக்குவிக்கின்றேனா?
உங்கள் உள்பேச்சு என்ன என்று உண்மையாகவே உங்களுக்கு தெரியுமா?
நாம் அடிக்கடி நம்முடனேயே உள்ளுக்குள் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்வோம். இதுவே சுயபேச்சு எனப்படும். நாம் எல்லாரும் இதை செய்வதுண்டு. இதைப்பற்றி நாம் சில சமயம் அறிந்திருப்பதில்லை அவ்வளவுதான். அது ஏனென்றால் இது நம்முடனே கலந்தது. இதைப்பற்றி நாம் அறிந்திருக்க விட்டாலும், இது நம்மை பாதிக்கும்.
நாம் நமக்கு என்ன சொல்கிறோம் என்பது மிகவும் முக்கியம். அதைப் பற்றி யோசிப்பது அவசியம். ஏனென்றால் இது நிச்சயமாக நாம் எப்படி உணர்கிறோம், என்ன செய்யப்போகிறோம் என்பதை பாதிக்கும்.
சுய பேச்சு என்பது நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கலாம். மக்கள் அதிக அளவில் எதிர்மறை எண்ணங்களை யோசிப்பதால் தங்களைப் பற்றி யோசிப்பதும் அதுவாகவே இருக்கும். எதிர்மறை விஷயங்களையே பேச்சினூடே சொல்வார்கள்.
குழந்தைப் பருவத்தில் நாம் துன்புறுத்தப்பட்டாலோ, அல்லது அதிர்வுக்கு உட்படுத்தப்பட்டாலோ நாம் கெட்டவர்கள் என்ற நம்பிக்கையை நம்முள் விதைத்துக்கொண்டே வளர்கிறோம். நாம் மதிப்பில்லாதவர்கள் என்று நினைக்கிறோம். நம்முடைய மனதில் அந்த செய்தியை மீண்டும் மீண்டும் ஒலிக்கவிட்டு கொண்டே இருக்கிறோம். நம்முடைய சுயபேச்சு நம்முடைய எதிர்மறையான நம்பிக்கைகளை மேலும் பலப்படுத்தும்.
துன்பத்தில் இருந்து மீண்டு வந்தவர்கள் பெரும்பாலானோர் மிக முரடான ஒரு உள் விமர்சனப்பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த உள் விமர்சனக்காரர் மிகவும் பலம் வாய்ந்தவராக இருப்பார். இவர் நம்மை துன்புறுத்தி, கொடுமைக்கு ஆளாக்கி அவரை விட மிகவும் மோசமாக நம்மை மனதளவில் சிதைத்து விடக் கூடும். இது நம்மை பற்றி நாம் நினைப்பதை பாதிக்கக்கூடும்.
எதிர்மறை சுயபேச்சு நம்முடைய மன நலத்தை பாதிக்கும். நிறைய சமயங்களில் நம்மை மிகவும் தீயவராக நினைக்கச் செய்யும். மேலும் சுயபேச்சு நம்மை தற்கொலை எண்ணங்களுக்கு தூண்டி, அதனை வளர்த்து பாதிப்பினை உச்ச கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். நம்மை நாமே தண்டித்துக் கொள்ளவும் செய்திடும். ஆனால் இதை நம்மால் மாற்ற இயலும் மன மாற்றத்தின் முதல் படியானது, நாம் சுயபேச்சு பற்றி அறிந்து கொள்வதே. சுய பேச்சு என்பது இதை எல்லாவற்றையும் நிகழ்த்தும் என்பதை நாம் அறிந்து கொள்வது.
மாற்றும் சுயபேச்சு:
எப்படி எதிர்மறை சுயபேச்சு, நம்மை பாதிப்புக்குள்ளாக்கி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதேபோல நேர்மறை சுயபேச்சு, நம்முடைய மனோநிலையை உயர்த்தும். அது நமக்கு ஆதரவாய் மாறும். நம்மில் சுய நம்பிக்கையையும் சுயமரியாதையையும் வளர்க்கும். நம்முடைய மன அழுத்தத்தை நம்மால் சரி செய்ய இயலும். கவலையும் மன அழுத்தமும் குறைய வாய்ப்புகள் அதிகம். நாம் நேர்மறை எண்ணத்திலேயே சிந்திக்கத் துவங்கி விட்டால் நம்மைப் பற்றி நாம் நினைப்பது நல்ல முறையில் இருக்கும். மேலும் நம்மைப் பற்றிய நம்பிக்கையை வளர்க்கும்.
முதலில் உங்களுடைய சுய பேச்சினை உணர்ந்து கொள்ளுங்கள்.
- அது சொல்வது என்ன?
- அது உண்மையா?
- அவை வெறும் எண்ணங்கள்தான். அதற்கு முக்கியத்துவம் தர வேண்டுமா?
- என்னால் அதை மாற்ற முடியுமா?
- எந்த மாதிரி எண்ணங்கள் நல்லது?
- எந்த எண்ணங்கள் என்னை மதிப்பு அடையச் செய்கின்றன?
- எவை என் பலம்?
- இதற்கு மற்றொரு கோணம் இருக்கிறதா?
" இரண்டு கதை கேட்டல்" என்றொரு செயல்பாடு இருக்கிறது. பொதுவாக நாம் அதிக தாக்கம் ஏற்படுத்தும் கதையை கேட்போம். அந்தக்கதை உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாகவும் நீங்கள் உங்கள் குழந்தைப்பருவத்தில் தெரிந்து கொண்டதாகவும் இருக்கலாம். இந்த கதை அதிகம் உங்களுடைய பலவீனத்திலும் நீங்கள் வெட்கப்படும் விஷயங்களையும் குறித்து சொல்லப்படும். உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை உங்களால் கவனிக்க முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள்.
இதில் இன்னொரு கதையும் கலந்து இருக்கிறது. அது தைரியம், பலம், முடிவெடுக்கும் தன்மை, பாதிப்பு ஆகியவை பற்றி சொல்லும். உங்கள் தாங்கும் திறன் பற்றி சொல்லும் இந்தக் கதைக்கு உங்கள் கவனத்தை அதிக அளவில் கொடுக்க துவங்குங்கள். உங்களுக்காக நீங்களே முன் நின்ற அந்த நேரங்களை கவனியுங்கள் உங்களுடைய மனதில் இருப்பதை தைரியமாக சொல்வதற்கு நீங்கள் முயற்சி எடுத்து அதை உற்று நோக்குங்கள். உதவி என்று கேட்டதையும் உங்களுக்கு அளிக்கப்பட்ட கருணையை ஏற்றுக் கொண்டதையும், நீங்கள் யார் என்பது உங்களுக்குத் தெரிந்து அதனோடு நீங்கள் இணைந்து செல்வதையும் மறக்காமல் கவனியுங்கள். மெதுவாக காலம் செல்லச் செல்ல உங்களின் இந்த மற்றொரு கதை தெளிவாகவும் பலமாகவும் உங்கள் மனதில் இடம் பிடித்துக் கொள்ளும்.