மனநல ஆரோக்கியத்தை பொறுத்தவரை எளிமையான பழக்கங்களை மேற்கொள்வதால் கர்பகாலத்திலும் பேறுகாலத்திற்கு பின்னும் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும்.
பயிற்சியாக, உங்களுக்கு உதவக்கூடிய ஒரு எளிமையான பழக்கைத்தை இப்போதே சிந்தித்து வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு பயனற்ற பழக்கங்களை பட்டியல் இடுக. குற்ற உணர்ச்சி வேண்டாம். நாம் எல்லோர்க்கும் பார்க்க பிடிக்காத பட்டியல் ஒன்று இருக்கும்.
ஒரு தாயின் நல்ல பட்டியல் இப்படி இருந்தது: நான் முறையாக மருத்துவரிடம் செல்வேன். இரவு உணவுக்குப்பின் பாத்திரங்களை சுத்தம் செய்ய என் கணவரிடம் உதவி கேட்பேன். நான் எரிச்சலடையும்போது அமைதியாக என்னிடம் கூறுமாறு அவருக்கு விளக்கினேன். நீண்ட நேர குளியல் இதமாக உள்ளது. என் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாடி காட்ட மிகவும் பிடிக்கும். மனதிற்கு இதமான பாடல்களை கேட்க பிடிக்கும்.
தன்னை "மேம்படுத்து" பட்டியல்? இப்படி இருந்தது: நான் அளவுக்கு அதிகமாக உண்கிறேன் அதுவும் இனிப்பு வகைகள்; என் வேலையை குறைத்துக்கொள்ள என் தாயை உணவு எடுத்துவருமாறு கேட்கவில்லை. என் உடற்பயிற்சியை குறைத்துவிட்டேன்; கர்பிணி பெண்களுக்கான யோகா பயிற்சி வகுப்பிற்கு செல்லவில்லை.
இந்த விழிப்புணர்வு ஒரு நல்ல தொடக்கம்.
இந்து சூழலிலும் சிலவற்றை செய்யமுடியும். அதன் பட்டியல் இதோ:
1 . உங்களின் மனநிலை மற்றும் உறக்கத்திற்கான பயிற்சி ஏட்டை தவறாது குறித்துக்கொள்ளுங்கள். நீங்கள் அழுத்தத்தில் இருந்தால் அதை உணருங்கள்.
2 . சக தாய்மார்களுக்கான குழுவில் ஆதரவுக்காக சேருங்கள். துணையின் நேர்முக அல்லது இணையத்தின் அமர்வுகளில் சேர்ந்துகொள்ளலாம். (சென்னையில் மட்டும்).
3 . ஒரு பதிவேட்டை வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்க ஏற்பட்ட ஒரு நல்ல விஷயமாக இருக்கலாம் (நன்றியுணர்வு) அல்லது ஏதாவது தொல்லை கொடுக்கக்கூடியதாக இருக்கலாம் (நம் எண்ணங்களை எழுதுவதால் அதன் வலிமை குறையும்).
4 . குறித்த இடத்தில் குறித்த நேரத்தில் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்- இது உங்களின் பாதுகாப்பான திட்டம். அந்த பயிற்சி ஒரு எளிமையான உடலை கவனத்துடன் முடிந்தவரை நீட்டும் பயிற்சியாகவோ, யோகா நித்திரையாகவோ (உறங்கும் முன்) அல்லது எளிய மூச்சு பயிற்சியான ஆழ்ந்து மூச்சை வெளியேற்றுதல் போன்ற பயிற்சயாகவோ இருக்கலாம்.
5 . சிறிது சந்தேகம் இருப்பினும் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த பழக்கங்கள் உங்களின் கார்டோஸில் அளவை அதிகரித்து உங்களின் நரம்பியல் மண்டலத்தை (வேகஸ் நரம்பை) தூண்டி புத்துணர்வுடன் செயல்படுத்தும். இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் மிகவும் நல்லது.
உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருப்பதாக உணர்ந்தால் தயங்காமல் உதவி கேளுங்கள்.