இ எம் டி ஆர் சிகிச்சை அதிர்ச்சி மீறலுக்கு எவ்வாறு வேலை செய்கிறது?
அதிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம்?
இந்த சிகிச்சை எட்டு படிகளை கொண்டது. நிபுணருடன் பல அமர்வுகள் தேவைப்படலாம். ஏறத்தாழ 12 சிகிச்சை அமர்வுகள் (sessions) தேவையாகலாம்..
பகுதி 1: கடந்த நாட்களை பதிவுசெய்தல் மற்றும் சிகிச்சையை திட்டமிடல்:
உங்களுடைய தெரபிஸ்ட் உங்களுடன் இணைந்து உங்களுடைய கடந்தகால வரலாற்றை முதலில் தெரிந்துகொண்டு, அது பற்றி குறிப்புகள் எடுப்பார். பின்னர் சிகிச்சை முறையில் எந்தப் பகுதியில் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள் என்பதை முடிவு செய்து அடுத்த சிகிச்சை பற்றி திட்டத்தை வடிவமைப்பார். இந்த சிகிச்சையின் ஒரு பகுதியாக உங்களுடைய அதிர்ச்சி பற்றி விரிவாக பேசப்பட்டு அதற்கான முக்கியக் காரணங்கள், ஞாபகங்கள், நினைவுகள் ஆகியவை அடையாளம் காணப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்.
இது உங்களின் சிகிச்சை அமைவதற்கான வழிமுறைகளை சரி செய்ய உதவிடும். இவை உங்கள் சிறுவயதில் நடந்த நிகழ்வுகளாக இருக்கலாம் .தற்போதைய நிலைமை அல்லது உங்களை உணர்வுபூர்வமாக மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் நினைவுகளாகவும் இருக்கலாம்.
பகுதி 2: தயாராகுதல்
உங்கள் தெரபிஸ்ட் உங்களுக்கு, பல வழிகளில் நீங்கள் அனுபவிக்கும் உணர்வு மற்றும் மனநிலை சார்ந்த மன அழுத்த நிலைகளுக்கு சமாளிக்கும் விதத்தை கற்றுத் தருவார். மன அழுத்த நிர்வாக செயல்பாடுகளான, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி மற்றும் மன ஒருமை ஆகியவற்றை அவர் சொல்லிக் கொடுப்பார்.
பகுதி 3: மதிப்பீடு
எம் டி ஆர் சிகிச்சையின் மூன்றாவது பகுதியின் போது, உங்களுடைய தெரபிஸ்ட், உங்கள் ஞாபகத்தின் சிலவற்றை குறிப்பாக அணுகி அதை சுற்றியுள்ள உடல் சார்ந்த உணர்வுகள் அவற்றின் இயக்கங்கள் ஆகியவற்றை மட்டும் செயல்படுத்தும் பயிற்சிகளை தருவார்.
பகுதி 4-8: சிகிச்சை
உங்கள் தெரபிஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட ஞாபகங்களை சரி செய்யும் முயற்சியாக, இஎம் டிஆர் சிகிச்சையை அளிக்க துவங்குவார். இந்த சிகிச்சையின் போது ஒரு எதிர்மறை எண்ணம், ஞாபகம் அல்லது உருவத்தில் உங்கள் கவனத்தை குவிக்க சொல்லுவார். அதே நேரத்தில், ஒரு குறிப்பிட்ட வகையாக உங்களுடைய கண்களை நகர்த்த சொல்வார். இதுதவிர, சில தட்டல்கள் அசைவுகள் ஆகியவை உங்களுடைய தேவையைப் பொறுத்து செயல்படுத்தப்படும்.
இந்த இரு வழி தூண்டலுக்கு பிறகு அந்த சமயத்தில் வந்து மோதும் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை கவனிக்கச் சொல்வார். இந்த எண்ணங்களை நீங்கள் கண்டுகொண்ட பிறகு, உங்களை அதிர்ச்சி தரும் அந்த ஞாபகத்திற்கு கவனத்தை குவிக்க செய்வார். அல்லது வேறொரு ஞாபகத்திற்கு உங்களை மாற்றுவார்.
இதன் நடுவில் நீங்கள் மன சோர்வடைந்தால், உங்கள் தெரபிஸ்ட் உங்களை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்து ஆசுவாசப்படுத்தி, பின்னர் அடுத்த அதிர்ச்சிகரமான ஞாபகத்திற்கு சிகிச்சையை எடுத்து செல்வார். காலப்போக்கில், உங்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு ,இதுகுறித்து நினைத்தால் அல்லது ஞாபகத்தால் வருகின்ற அந்த மன அழுத்தமும் மனச்சோர்வும் படிப்படியாக குறைந்து மறையத் தொடங்கும்.
பகுதி 8: மதிப்பாய்வு
இந்த இறுதிப் பகுதியில் உங்களுடைய முன்னேற்றத்தை இந்த அமர்வுகளுக்கு பிறகான உங்கள் மாற்றத்தை நீங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பினால், அவர் மதிப்பாய்வினை செய்திடுவார்.